4.1.11 அஃதே உய்ய - Rise from deep despair!

பாசுரம்:

அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள்மேல்,
கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் குற்றேவல்,
செய்கோலத் தாயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும்,
அஃகாமற் கற்பவர் ஆழ்துயர் போயுய்யற் பாலரே.

Audio Introduction:


Translation:

Sung towards Kannan's feet to seek those solaces,
this decad of the beautiful thousand verses,
by Satakopan of Kurugur with dense flower terraces,
shall rise from deep despair and succour its true learners.


பதம் பிரித்தது:

அஃதே உய்யப் புகுமாறு என்று கண்ணன் கழல்கள் மேல்,
கொய் பூம்பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்,
செய்கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்,
அஃகாமல் கற்பவர் ஆழ்துயர் போய் உய்யப் பாலரே.

பொழிப்புரை:

உய்வதற்கு உரிய வழி மேலே கூறிய அதுவே என்று கண்ணபிரானுடைய திருவடிகளின்மேலே, பறிக்கப்படுகின்ற பூக்கள் நிறைந்த சோலையாற்சூழப்பட்ட திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அந்தரங்கக் கைங்கரிய ரூபமாகச் செய்யப்பட்ட அழகிய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இறைவனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்துப் பாடிய இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் குறைவில்லாதவாறு கற்பவர்கள், ஆழ்ந்துள்ள துன்பங்கள் நீங்கி நற்கதி பெறுவார்கள்

விளக்கம்:

‘உய்யப் புகுமாறு அஃதே என்று கண்ணன் கழல்கள் மேல் சடகோபன் குற்றேவல் பாடல் இவை பத்தும் கற்றவர் துயர் போய் உய்யற்பாலர்,’ என்க.

4.1.10 குறுக மிக - Even Saints need Him

பாசுரம்:

குறுக மிகவுணர் வத்தொடு நோக்கியெல் லாம்விட்ட,
இறுக லிறப்பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லையேல்,
சிறுக நினைவதோர் பாசமுண்டாம்பின்னும் வீடில்லை,
மறுபகலில் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே

(கலி நிலைத்துறை)

Audio Introduction:


Click -> here <- for an explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

Nonchalant and with vision towards his élan vital
the Saint has become a mortal.
Yet without Him, he's caught in the confines of his soul,
So, hold on to the eternal Lord's feet for that Paradise Real.


பதம் பிரித்தது:

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம்விட்ட,
இறுகல் இறப்பென்னும் ஞானிக்கும் அப்பயனில்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடில்லை,
மறுபகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே.

பொழிப்புரை:

(மனமானது) தன்னைச் சார (தன் வசப்பட்ட அம்மனத்தினை) ஞான சொரூபமாக உள்ள ஆத்துமாவோடு சேர்த்து நன்றாகப் பார்த்து எல்லாப்பற்றுகளையும் அடியோடே விட்ட, குறுகிய ஆத்தும அனுபவத்தையே மோக்ஷமாக நினைத்திருக்கும் ஞானிகளுக்கும் பகவானை உபாயமாகப் பற்றுதல் இல்லையாகில் சிறிய பேறுகளை நினைப்பதற்குக் காரணமான ஒரு பற்று உண்டாகும்; அதற்குமேல், அம்மோக்ஷமும் இல்லை; ஆன பின் ஒரு விதக் குற்றமும் இல்லாத இறைவனை அடைந்து அகலாதொழிவானேயானால், அதுவே பரமபுருஷார்த்தமான மோக்ஷமாகும். ஆதலால், மேற்பாசுரத்தில் கூறிய ‘அண்ணல் கழல்கள் குறுகுமினோ’ என்ற அதுவே மோக்ஷமாகும்

விளக்கம்:

1.  ‘குறுக நோக்கி விட்ட ஞானி’ என்க.
2.  உணர்வு - ஞானம்; ஆத்துமா.
3.  இறுகல் - இறுகப்பிடித்தல்.
4.  இறப்பு - மோக்ஷம்.
5.  பாசம் - பற்று.
6.  மறுகல் - குற்றம்.
7.  ‘பற்றி விடாவிடில் பின்னும் வீடு இல்லை’ எனக் கூட்டுக.
8.  இங்கே, ‘வீடு’ என்றது, கைவல்யத்தை.
9.  ‘அஃதே வீடு’ என மாறுக.

4.1.9 படிமன்னு - No permanent heaven without Him

பாசுரம்:

படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார்,
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை,
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ.

Audio Introduction:



Click -> here <- for an explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

Devoid of desire for Ornaments with the senses subdued
Cycle of Rebirth is Conquered  - Yet not being His favoured,
though attaining heaven is attained - staying there isn't endured 
Ergo, reach for the Garuda-banner adorned Lord

பதம் பிரித்தது:

படிமன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து, ஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனைஇல்லார்
குடிமன்னும் இன்சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வுஇல்லை;
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ

பொழிப்புரை:

பூமியையும் பொருந்திய பல ஆபரணங்களையும் அவற்றிலுள்ள வாசனையோடு நீக்கி, ஐந்து இந்திரியங்களையும் வென்று, தூறு மண்டும்படி இச்சரீரத்தை ஒறுத்துத் தவம் செய்தவர்களும், அவ்விஷயத்தில் அவனுடைய திருவருள் இல்லாதவர்கள் குடிகள் பொருந்தி இருக்கின்ற இனிமையையுடைய சுவர்க்கலோகத்தை அடையினும் மீண்டு வருவார்கள்; ஆதலால், நிலைபெற்ற கொடியிலே கருடப்பறவையையுடைய சர்வேசுவரனுடைய திருவடிகளைச் சேருங்கோள்; சேர்ந்தால், மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய உலகத்தைப் பெறலாம்.

விளக்கம்:

1.  ‘அறுத்து வென்று செற்றார்களும் அவனை இல்லார் எய்தியும் மீள்வர்கள்,’ என்க. 
2.  ‘அண்ணல் கழல்கள் குறுகுமின்; மீள்வு இல்லை,’ எனக் கூட்டுக.
3.  படி - பூமி. 
4.  மன்னு பல்கலன் - முறையாக வந்த பல வகைப்பட்ட ஆபரணங்களின் கூட்டம்

4.1.8 குணங்கொள் - No Permnent bliss without him

பாசுரம்:

குணங்கொள் நிறைபுகழ் மன்னர்க் கொடைக்கடன் பூண்டிருந்து,
இணங்கி யுலகுட னாக்கிலும் ஆங்கவ னையில்லார்,
மணங்கொண்ட போகத்து மன்னியு மீள்வர்கள் மீள்வில்லை,
பணங்கொள் அரவணை யான்திரு நாமம் படிமினோ.

Audio Introduction:


Click -> here <- for an explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

Virtuous, famed and altruist by inherent demeanour
Compatible with Everyone - yet without Him in his favour
Fragrant bliss will engulf them only to expire.
Learn the names of the serpent-couch Lord, for bliss of no-expire!


பதம் பிரித்தது:

குணங்கொள் நிறைபுகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகுடன் ஆக்கிலும்,ஆங்கு அவனைஇல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வுஇல்லை;
பணங்கொள் அரவணையான் திருநாமம் படிமினோ.

பொழிப்புரை:

நல்ல குணங்கள் பொருந்திய நிறைந்த புகழையுடைய மன்னர்கள் தர்மம் செய்தலாகிய கடமையை மேற்கொண்டு உலகத்தாரோடு பொருந்தி இருந்து உலகத்தை எல்லாம் தமக்கே உரியதாகச் செய்து அரசாண்டாலும், அந்த அரசச் செல்வமானது இறைவன் திருவருளால் வந்தது என்று நினையாதவர்கள், செவ்வையையுடைத்தான இன்பத்திலே நிலைபெற்று இருப்பவர்களாயினும், அந்த இன்பத்தினின்றும் நீங்குவார்கள்; ஆதலால், படத்தைக்கொண்ட பாம்பினைப் படுக்கையாகவுடைய இறைவனது திருநாமத்தைப் படியுங்கோள் ; அங்ஙனம் கூறினால், பின்னர் மீண்டு வருதல் இல்லை ; அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டினை அடையலாம்

விளக்கம்:

1.  ‘மன்னர் கொடைக்கடன் பூண்டு இணங்கி இருந்து உலகு ஆக்கிலும்’ எனக் கூட்டுக.
2.  ‘திருநாமம் படிமின் ; மீள்வில்லை,’ என்க.
3.  படித்தல் - கற்றல். ஆனால்,
4.  ‘திருநாமம் படிமின் - கல்யாண குணங்களாகிய கடலில் மூழ்குங்கோள்’ என்னலுமாம்.
     ‘நற்குணக்கடல் ஆடுதல் நன்றரோ,’ என்றார் கம்பநாட்டாழ்வார்.

4.1.7 ஆமின் சுவை - From abundance to morsels

பாசுரம்:
ஆமின் சுவையவை ஆறொடடிசிலுண் டார்ந்தபின்,
தூமென் மொழிமட வாரிரக்கப்பின்னும் துற்றுவார்,
ஈமின் எமக்கொரு துற் றென்றிடறுவ ராதலின்,
கோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே.

Audio Introduction:


Click here to listen to an explanation of the pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

After flavorous abundant meal having been consumed
when courtly dames insist - yet more was crammed.
Ah! "Provide me a morsel" - says he now - against doors slammed.
So, portray the glories of our Primal Lord who is Basil Domed.

பதம் பிரித்தது:

ஆமின் சுவைஅவை ஆறோடு அடிசில்உண்டு ஆர்ந்தபின்
தூமென் மொழிமட வார்இரக் கப்பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.

பொழிப்புரை:

பொருந்திய இனிய அந்த அறுசுவையோடு கூடின உணவை உண்டு வயிறு நிறைந்த பின், தூய்மை பொருந்திய மெல்லிய சொற்களைப் பேசுகின்ற பெண்கள் இரந்து கூறப் பின்னரும் உண்பார்கள் ; அவ்வாறு உண்டவர்கள், அந்நிலை கெட்டு, ‘எமக்கு ஒரு பிடி அன்னம் கொடுமின்,’ என்று தட்டித் திரிவார்கள் ; ஆதலின், திருத்துழாய் மாலையைத் தரித்த திருமுடியையுடைய ஆதி அம் சோதியான இறைவனுடைய கல்யாண குணங்களை அனுபவிக்கப் பாருங்கோள்

விளக்கம்:

1.   ‘ஆம் இன் அவை ஆறு சுவையோடு அடிசில் உண்டு’ எனப் பிரித்துக்கூட்டுக.
2.   தூ - பரிசுத்தம்.
3.   துற்றல் - உண்டல்.
4.   துற்றுவர் - பெயர்.
5.   ‘துற்றுவர் இடறுவர்’ என முடிக்க.
6.   இடறுவர் - முற்று (knocks the doors).
7.   கோமின் - தொகுத்துச் சொல்லுமின்.
8.   ‘குணங்கள் கோமின்’ என மாறுக.

4.1.6 வாழ்ந்தார்கள் - Life is like a bubble!

பாசுரம்:

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து,
ஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா,
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில்,
ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.

Audio Introduction:



Click here for an explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:
The Living lead a life like the bubbles in a torrent
Never stable - be assured - from the past till the present
Life isn't ever lasting - so if you desire eternity
Submit to the Lord, reclined in the deep sea ,with servility!

பதம் பிரித்தது:

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து
ஆழ்ந்தார்என்று அல்லால், அன்றுமுதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்என்பதுஇல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.

பொழிப்புரை:

வாழ்ந்திருந்தவர்கள் வாழ்ந்தது பெரிய மழை நீரிலே தோன்றுகிற குமிழி போன்று அழிந்து நரகத்திலே விழுந்து அழுந்தினார்கள் என்பதே; அது அல்லாமல், அன்று முதல் இன்று வரையிலும் வாழ்ந்தவர்கள் ஒரே தன்மையாக வாழ்ந்தே இருந்தார்கள் என்பது இல்லை; ஆதலால், நிலை பெற்ற பேற்றினைப் பெறவேண்டும் என்று இருந்தீர்களாகில், ஆழ்ந்து நிறைந்திருக்கின்ற கடலைப் படுக்கையாகவுடைய இறைவனுக்கு அடியவர் ஆகுங்கோள்

விளக்கம்:

1.  ‘வாழ்ந்தது மொக்குளின் மாய்ந்துமாய்ந்து ஆழ்ந்தார் என்பதே;
     அது அல்லால், வாழ்ந்தே நிற்பர் என்பது
2.  அன்று முதல் இன்று அறுதியா இல்லை ; ஆதலால், நிற்குறில், அண்ணல் அடியவர் ஆமின்,’ என்க.
3.  ‘நிற்குறில்’ என்பது, நிற்க உறில் என்பதன் விகாரம். (if you desire eternity)

4.1.5 பணிமின் - From Soft Mattress to Loin Cloth

பாசுரம்:

பணிமின் திருவருள் என்னும்அஞ் சீதப் பைம்பூம்பள்ளி,
அணிமென் குழலார் இன்பக்கலவி அமுதுண்டார்,
துணிமுன்பு நாலப்பல் லேழையர் தாமிழிப் பச்செல்வர்,
மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ.

Audio Introduction:



Click here to listen to a explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan

Translation:

They once ate the nectar of love with dames of tender coiffure
Upon cool soft mattresses uttering "Render me a favour!"
Alas, they are now object of ridicule with barely a loin cloth as cover!!
So conduct thy life chanting the names of our Gem  Sparkling Conjurer.


பதம் பிரித்தது:

"பணிமின், திருவருள்"என்று அம் சீதப் பைம் பூம் பள்ளி,
அணி மென் குழலார் இன்பக்கலவி அமுது உண்டார்,
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்,
மணி மின்னும் மேனி நம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ.

பொழிப்புரை:

"திருவருள் புரிதல் வேண்டும்" என்று கூறுகின்ற அழகிய மிருதுவான கூந்தலையுடைய பெண்களோடு அழகிய குளிர்ந்த பரந்த பூக்களாலான படுக்கையிலே சேர்க்கையால் உண்டான இன்பமாகிய அமுதை உண்டவர்கள், அந்நிலை கெட்டு, துணி முன்னே தொங்கவும் பெண்டிர் பலர் இழித்துக் கூறவும் செல்லுவார்கள்; ஆதலால், நீலமணி போன்று பிரகாசிக்கின்ற திருமேனியையுடைய நம் மாயவனது திருநாமத்தைச் சொல்லி வாழுங்கோள்

விளக்கம்:

1. ‘என்னும் குழலாரோடு பூம்பள்ளியிலே இன்ப அமுது உண்டார்’ என்க.
2.  உண்டார் - பெயர்.
3.  ‘உண்டார் செல்வர்’ என முடிக்க.
4.  ‘நால இழிப்பச் செல்வர்’ என்க. (go around wearing nothing but loin-cloth)
5.  செல்வர் - முற்று.
6. இப்பாசுரத்திற்குப் பட்டர் அருளிச்செய்யும் வியாக்கியானம் இன்பச் சுவையிலே தோய்ந்தது; நவில்தொறும் இன்பம் பயப்பது. ‘அம் சீதம் பைம்பூம்பள்ளியிலே கிடக்கும் அணி மென்குழலாரைப் பார்த்துத் ‘திருவருள் பணிமின்’ என்னும்  இன்ப அமுது உண்டார்’

4.1.4 நினைப்பான் புகில் - Points to ponder

பாசுரம்:

நினைப்பான் புகில்கடல் எக்கலின் நுண்மண லிற்பலர்,
எனைத்தோ ருகங்களும் இவ்வுல காண்டு கழிந்தவர்,
மனைப்பால் மருங்கற மாய்தலல்லால்மற்றுக் கண்டிலம்,
பனைத்தாள் மதகளி றட்டவன் பாதம் பணிமினோ.

Audio Introduction:



Click here for an explanation of the pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

To ponder, countless as sand granules on a sea shore,
there were those, who ruled this earth, for aeons before.

But - none we saw - to leave a vestige or last forever.
So worship the feet of the Lord who razed the monster tusker!

பதம் பிரித்தது:

நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண் மணலிற்பலர்,
எனைத்தோர் யுகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்,
மனைப்பால் மருங்கற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்,
பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ.

பொழிப்புரை:

நினைப்பதற்குப் புகுந்தால், பல யுகங்களும் இந்த உலகத்தை எல்லாம் ஆண்டு இறந்து போனவர்கள், கடல் எக்கலிலே உள்ள நுண்மையான மணல்களைக்காட்டிலும் பலர் ஆவர்; அவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடமும் தெரியாதபடி அழிந்தார்களே அன்றி, வேறு ஒன்றனையும் பார்த்தோம் இல்லை; ஆதலால், பனைமரம் போன்ற கால்களையுடைய மதம் பொருந்திய யானையைக் கொன்ற கிருஷ்ணன் திருவடிகளை வணங்குங்கள்

விளக்கம்:

1. ‘நினைப்பான் - வினையெச்சம்.
2. எக்கல் - மணல் மேடு.
3. ‘ஆண்டு கழிந்தவர் பலர்’ என்க.
4. மனைப்பால் - மனை இடம்
5. மனைப்பால் மருங்கற மாய்தல் - refers to leaving no trace / vestige after death

4.1.3 அடிசேர் முடியினர் - From Monarch to Dust

பாசுரம்:

அடிசேர் முடியின ராகியரசர்கள் தாம்தொழ,
இடிசேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்,
பொடிசேர் துகளாய்ப் போவர்களாதலின் நொக்கென
கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.

Audio Introduction:


Click here for an explanation of the pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

Monarchs bow their heads at thy feet,
while the patio reverberates with drum blast!
Aha, such Mighty could become mere particles of dust!!
So reflect upon the Cool Basil Crowned Kannan's feet, fast!

பதம் பிரித்தது:

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம்தொழ,
இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்,
பொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலின் நொக்கென
கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.


பதவுரை:

தம்முடைய அடிகளிலே பொருந்திய முடியினையுடையவர்களாகி அரசர்கள் தாங்கள் தொழாநிற்க, இடியைப் போன்ற முரசங்கள் வீட்டின் முன்னிடத்திலே ஒலித்துக்கொண்டிருக்க வீற்றிருந்த சக்கரவர்த்திகள், (அந்நிலை கெட்டு) பொடியோடு சேர்ந்த தூளியாய்ப் போவார்கள்; ஆகையாலே வாசனை சேர்ந்திருக்கின்ற திருத்துழாயினைத் தரித்த முடியினையுடைய கண்ணபிரான் திருவடிகளை விரைவில் நினையுங்கோள்

விளக்கம்:

1. ‘முடியினராகித் தொழ இருந்தவர்’ என்க.
2. ‘இருந்தவர் துகளாய்ப் போவர்’ என முடிக்க;
3. ‘ஆதலின், கழல்கள் நினைமின்’ என்க.
4. நொக்கு என்பது, விரைவுக் குறிப்பினைக் காட்டுகின்ற இடைச்சொல்

4.1.2 உய்ம்மின் - Protect your family!

பாசுரம்:

உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுலகாண்டவர், இம்மையே
தம்மின் சுவைமட வாரைப்பிறர் கொள்ளத் தாம்விட்டு
வெம்மி னொளிவெயில் கானகம்போய்க்குமை தின்பர்கள்,
செம்மின் முடித்திரு மாலைவிரைந்தடி சேர்மினோ.



"Lay thy bounty - to stay alive" - so says some ruler
Alas, losing their lovely ladies to some plunderer
reach flaming forest and suffer. So, hurry 
and reach the blazing crowned Sri Hari.

பதம் பிரித்தது:

"உய்ம்மின், திறைகொணர்ந்து" என்று உலகாண்டவர், இம்மையே
தம் இன்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மி ஒளிவெயில் கானகம் போய்க் குமை தின்பர்கள்,
செம்மின் முடித் திருமாலை விரைந்தடி சேர்மினோ.

பதவுரை:

 ‘திறைப்பொருளைக் கொணர்ந்து கொடுத்து உயிர் வாழ்ந்து போமின்’ என்று கூறி, உலகத்தை எல்லாம் ஒரு குடையின் கீழே ஆண்ட சக்கரவர்த்திகள் இன்பத்தை அளிக்கின்ற தம் பெண்களை இப்பிறவியிலேயே பிறர் கொள்ளும்படியாகத் தாமே விட்டு, கொடிய மின் ஒளி பரக்கின்ற காட்டிற்குச் சென்று, அங்கும் பகைவர்களாலே துன்புறுத்தப்படுவார்கள்; ஆகையாலே, ஒளி பொருந்திய திருமுடியைத் தரித்த திருமகள் கேள்வனுடைய திருவடிகளை விரைந்து சேர்மின்,’ 

விளக்கம்:

1. ‘திறை கொணர்ந்து உய்ம்மின்’ என மாறுக. 
2. திறை - கப்பம். 
3. தம்மின்  - தம்முடைய. இனி, தம் இன் என்பதில் ‘இன்’ என்பதனைச் சுவைக்கு அடையாக்கலுமாம். 4. குமைதின்பர் - நலியப்படுவர். 
5. ‘திருமாலை அடி விரைந்து சேர்மின்,’ எனக் கூட்டுக. 
6. திருமாலை உருபு மயக்கம்.

4.1.1 ஒரு நாயகமாய் - Wealth of a Sovereign Ruler

பாசுரம்:
ஒருநா யகமாய் ஓடவுலகுட னாண்டவர்,
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
பெருநா டுகாண இம்மையிலே பிச்சை தாம்கொள்வர்,
திருநா ரணன்தாள் காலம் பெறச்சிந் தித்துய்ம்மினோ.

குரல்  ஒலி : 


Introduction - Audio (Long):


Click here for an explanation of the pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

Once he ruled the world as one sovereign
Soon the masses behold him seeking offerings
Bitten by stray-dogs 'n holding broken urns.
So rush to mull the feet of Thirunaranan!

Audio: 


பதம் பிரித்தது:
ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர், சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்.
திரு நாரணன் தாள் காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.

பொழிப்புரை:

பூமண்டலம் முழுமைக்கும் அத்விதீயப்ரபுவாய் வெகுகாலமளவும் உலகங்களை யெல்லாம் அரசாட்சி புரிந்தவர்கள் (ஒரு காலவிசேஷத்திலே தரித்ரர்களாகி) கரிய நாய்களால் கவ்வப்பட்ட கால்களையுடையவராயும் உடைந்த பிச்சைப் பாத்திரத்தையுடைவர்களாயும் ஆகி உலகமெல்லாம் திரண்டுவந்து காணும்படியாக இப்பிறவியிலேயே தாங்களே பிச்சை யெடுப்பர் (செல்வத்தின் தன்மை இத்தகையதாதலால்) திருநாராயணனுடைய திருவடிகளை விரைவாக தியானித்து உஜ்ஜூவியுங்கோள்.

3.4.1 புகழு நல் ஒருவனென்கோ - Kannan and the five elements

பாசுரம்:

புகழுநல் லொருவ னென்கோ - பொருவில்சீர்ப் பூமி யென்கோ
திகழுந்தண் பரவை யென்கோ - தீயென்கோ வாயு வென்கோ
நிகழுமா காச மென்கோ - நீள்சுட ரிரண்டு மென்கோ
இகழ்விலிவ் வனைத்து மென்கோ - கண்ணனைக் கூவுமாறே!

குரல்  ஒலி:



Translation:

The Famed One - Do I declare! The Blemishless earth - Do I assert!!
The Cool Wide Ocean - Do I testify! The fire or the Wind - Do I state!!
All Containing Space - Do I stress! The Twin Bright Lights - Do I vouch!!
All these and the rest - Do I call! How do I address my Krishna - as such?

Audio:




பதம் பிரித்தது:

புகழுநல் ஒருவன் என்கோ - பொருவில் சீர்ப் பூமி என்கோ
திகழும் தண் பரவை என்கோ - தீ என்கோ வாயு என்கோ
நிகழும்  ஆகாசம் என்கோ - நீள்சுடர் இரண்டும் என்கோ
இகழ்வில் இவ் அனைத்தும் என்கோ - கண்ணனைக் கூவுமாறே!

பொழிப்புரை:

(உலகத்து எல்லாப் பொருள்களையும் தனக்குச் சரீரமாகவுடைய) எம்பெருமானை வேதங்கள் இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றால்) புகழ்ந்து கூறப்பெற்ற விலக்ஷணமான குணங்கள் முதலியவற்றையுடைய ஒப்பற்றவன் என்று சொல்வேனோ? ஒப்பில்லாத சிறப்புக்களையுடைய பூமியென்று சொல்வேனோ?விளங்குகிற நீர்நிலையென்று சொல்வேனோ?அக்கினியென்பேனோ? காற்று என்பேனோ? எங்குமுள்ளதான ஆகாசமென்பேனோ? (ஸூர்யன் சந்திரன்) என்ற இரண்டு சுடர்களுமென்பேனோ? இகழப்படுதலில்லாத (வேண்டும் பொருள்களாகக் கைக் கொள்ளுதற்கு உரிய) இவையெல்லாப் பொருள்களுமென்பேனோ? (எம்பெருமானைச்) சொல்லியழைக்கும் விதம் (என்னே) (யான் இன்னதென்று உணறேன் என்றபடி.)

Transliteration:

pugazhu nalloruvanenkO poruvil sIr bhUmi enkO
thigazhumthaN paravaiyenkO - theeyenkO vAyuvenkO
nigazhumAkAsamenkO - nILsudari reNdumenkO
igazhvillanaiththumenkO - kaNNanaikkUvumARE!

2.6.11 கண்ணித் தண்ணந்துழாய் முடி (Become His acclaimed fan!)

பாசுரம்:

கண்ணித்தண்ணந்துழாய்முடிக் கமலத்தடம்பெருங் கண்ணனை, புகழ்
நண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன,
எண்ணில்சோர்விலந்தாதியாயிரத் துள்ளிவையுமோர்பத்திசையொடும்,
பண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே.

Audio Introduction:



English Translation (by Mr. P.S. Desikan):

Spake Kurukoor Catakopan of South also called Maran,
of that Lord , lotus-eyed with tulasi cool, He Kannan
in these ten of thousand verses set as a cascading span.
Whoever recites, shall be deemed as His acclaimed fan!

பதம் பிரித்தது:

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணி தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே

பொழிப்புரை:

குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலையையுடைய திருமுடியினையும் தாமரை போன்ற விசாலமான பெரிய கண்களையுமுடைய இறைவனது நற்குணங்களிலே தாம் ஈடுபட்டு. அழகிய திருக்குருகூரில் அவதரித்த மாறனாகிய ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த எண்ணத்தில் தப்பாத அந்தாதியாக அமைந்த ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களையும் இசையோடும் பண்ணோடும் பாடுவதற்கு வல்லார் எவர்? அவர் கேசவன் தமர் ஆவர்.

விளக்கம்:

1.  கண்ணனை - வேற்றுமை மயக்கம். 
2.  ‘சடகோபன், மாறன்’ என்பன இரண்டும், ஆழ்வாருடைய திருப்பெயர்கள். 
3.  ‘இசையொடும் பண்ணில்’ என்று அருளிச்செய்வதால் இசை வேறு, பண் வேறு என அறியலாம்.
     இவ்விரண்டன் வேறுபாட்டினை வியாக்கியானத்திற் காண்க

ஈடு விளக்கம்:

கண்ணி தண் அம் துழாய் முடிக் கமலம் தடம் பெரும் கண்ணனை - இப்போதாயிற்று மாலை செவ்வி பெற்றதும், முடி நன்கு தரித்ததும், திருக்கண்கள் மலர்ச்சி பெற்றதும்.
(That Lord , lotus-eyed with tulasi cool - He - Kannan)

புகழ் நண்ணி - இறைவன், தம் பக்கல் செய்த காதலாகிய குணத்திலே மூழ்கி. (Sung his praise keeping in mind all that He has done to Azhwar)

தென்குருகூர்ச் சடகோபன் மாறன் - ஒன்று திருப்பெயர்; ஒன்று பகைவர் கூட்டத்துக்கு யமனாக உள்ளவர் என்பதனைக் காட்ட வந்தது. (Satagopan is the name of the Azhwar and 'Maran' signifies that he is the nemesis to all adversaries)

எண்ணில் சோர்வு இல் (countless as a cascading span) அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து - இறைவன் தம் பக்கல் பண்ணின வியாமோகத்தின் மிகுதியை நினைத்து, அவற்றில் ஒன்றும் குறையாமல் அருளிச்செய்த ஆயிரத்தில் இப் பத்து. 

இசையொடும் பண்ணில் பாட வல்லார்- இதில் ஆசையாலே இசையோடும் பண்ணோடும் பாட வல்லவர்கள். பண்ணாவது, கானம். இசையாவது, குருத்துவம் லகுத்துவம் முதலானவைகள் தம்மிலே நெகிழ்ந்து பொருந்துகை. ‘தொனியாலும் திறத்தாலும்’ என்றபடி (தொனி என்றது, பண். திறம் என்றது, இசை). 

அவர் கேசவன் தமரே - அவர்கள் யாரேனுமாகவுமாம், குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் பயன் அற்றவைகள்; ‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ (விண்ணப்பஞ்செய்வார் - அரையர்) என்னுமாறு போன்று, இத்தன்மையாலே அவர்கள் பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள். (shall be deemed as His acclaimed fan)

2.6.10 போகின்றகாலங்கள் (Ever mine henceforth)

பாசுரம்:

போகின்றகாலங்கள்போயகாலங் கள்போகுகாலங்கள், தாய்தந்தையுயி
ராகின்றாய் உன்னைநானடைந்தேன்விடுவேனோ,
பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே. பரமா, தண்வேங்கட
மேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே.

Audio Introduction:


English Translation (by Mr. P.S. Desikan):

O Lord, of three worlds, time-honourd and divine!
In past, present and future, ever as you remain
as father, mother and soul, now that I could attain
thee over cool Venkadam, could I miss you again?

பதம் பிரித்தது:

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர்
ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கடம்
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே

பொழிப்புரை:

எங்கும் பரவுகின்ற பழமையான புகழையுடைய மூன்று உலகங்கட்கும் தலைவனே! குளிர்ந்த வேங்கடத்தில் எழுந்தருளியிருப்பவனே! வாசனை வீசுகின்ற குளிர்ந்த துழாய் மாலையை யுடையவனே! நிகழ்காலம் இறந்த காலம் எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் தாயும் தந்தையும் உயிரும் ஆகின்றவனே! உன்னை நான் அடைந்தேன்; இனி, விடுவேனோ? விடேன்

ஈடு விளக்கம்:

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர் ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ - முக்காலத்திலும், பரிவுடைய தாய் செய்வதும் செய்து, ஹிதத்தைச் செய்கின்ற தமப்பன் செய்வதும் செய்து, ‘அந்தக் காகாசுரன் தகப்பனாலும் விடப்பட்டான்’ என்கிறபடியே. அவர்கள் விடுமளவிலும், தான் தனக்குப் பார்க்கும் ஹிதமும் பார்க்கும்படி எல்லா வகையாலும் அடையத் தக்கவனுமாய், உபகாரத்தைச் செய்கிறவனுமாய் உள்ள உன்னை, உதவியை நினையாநின்ற நான் கிட்டப் பெற்று வைத்து, விடக் காரணம் உண்டோ?  (In past, present and future, ever as you remain as father, mother and soul, now that I could attain like Lord Rama excused Kakasura's grave sin even when all others gave up on him)

பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே- (பாகின்ற = well spread) பரம்பி இருப்பதாய், இயல்பிலே அமைந்த (தொல் புகழ் = inherent good natured, time-honourd) நற்குணங்களையுடையையாய், மூன்று உலகங்கட்கும் நிர்வாஹகன் ஆனவனே! ‘பெருமாள் தர்மத்தையுடையவர்; சரணாகதி புகுந்தவனிடத்தில் அன்புடையவர்; எல்லாராலும் அறியப்பட்டவர்; ஆகையால், பிழைத்திருப்பதற்கு நீ விரும்புவாயேயானால் உனக்கு அவ்விராமனோடு நட்பு உண்டாகவேண்டும்’ என்கிறபடியே, பகைவர்கள் கூட்டத்திலும் பிரசித்தமாம்படி பரந்திருத்தலின் ‘பாகின்ற புகழ்’ என்கிறார்.

பரமா - (Superior, divine) குணங்களுக்கும் காத்தலுக்கும் உன்னை எண்ணினால், பின்னை எண்ணலாவார் இல்லாதபடி சர்வாதிகனாய் இருக்குமவனே! 

தண் திருவேங்கடம் மேகின்றாய் -‘இப்படி எல்லார்க்கும் மேம்பட்ட வனாயிருந்து வைத்து, என்னை அடிமை கொள்ளுகைக்காக, சிரமத்தை நீக்குகிற திருமலையிலே வந்து அண்மையில் இருப்பவனே! உன்னை நான் அடைந்தேன், விடுவேனோ?’ என மேலே கூட்டுக. 

தண்துழாய் விரை நாறு கண்ணியனே - இவருடைய துன்பமெல்லாம் தீரும்படியாக வந்து அங்கீகரித்துத் தன்னை நுகர்வித்து, இவர் தன்னை விடின் செய்வது என் என்ற ஐயமும் தீர்ந்து, தோளில் இட்ட மாலையும் வாசனை உள்ளதாய், பிடித்து மோந்த இலைத் தொடைமாலையும் (a ball made of garland) தானுமாய் நின்ற நிலையைத் தெரிவிக்கிறார். 

2.6.9 எந்தாய்! தண்திருவேங்கடத்துள் நின்றாய் (Where can I go?)

பாசுரம்:

எந்தாய்தண் திருவேங்கடத் துள்நின்றாய்! இலங்கை செற்றாய், மராமரம்
பைந்தாளே ழுருவவொரு வாளிகோத் தவில்லா!
கொந்தார்தண் ணந்துழாயி னாயமுதே! உன்னையென் னுள்ளேகு ழைத்தவெம்
மைந்தா! வானேறே, இனியெங்குப் போகின்றதே?

Audio Introduction:



English Translation (by Mr. P.S. Desikan):

My father, of Venkadam, you then conquered that Lanka!
Ere, with a single dart uprooted the seven trees flora!
Cool tulasi on, sank into me as my child, you my ambrosia!
King of heavens, from here on what further, your saga?

பதம் பிரித்தது:

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா வான் ஏறே இனி எங்குப் போகின்றதே?

பொழிப்புரை:

என் தமப்பனே, குளிர்ந்த திருவேங்கடத்தில் நிற்கின்றவனே, இலங்கையை அழித்தவனே, மராமரங்களினுடைய பரந்த அடிப்பாகம் ஏழும் ஊடுரும்படி ஒப்பற்ற பாணத்தை விடுத்த வில்லையுடையவனே, குளிர்ந்த அழகிய கொத்துகளையுடைய திருத்துழாய் மாலையை உடையவனே, அமுதம் போன்றவனே, உன்னை என்னுள்ளே கலந்த இளமைப்பருவம் உடையவனே நித்தியசூரிகளுக்கு ஏறு போன்றவனே, இப்பொழுது இக்கலவியை விட்டு எங்கே போகின்றாய்?

According to Panner Ayira Padi vyakyaanam, in this verse Azhwar identifies eight distinct qualities of the Lord -

1.  Having an Extraordinary relationship அஸாதாரண ஸம்பந்தம் (எந்தாய்),
2.  Ease சௌலப்யம் (தண் திருவேங்கடத்துள் நின்றாய்),
3.  Quelling of the opposition விரோதி நிவர்த்வகத்வம் (இலங்கை செற்றாய்) &
     Acquiring Loyalty விஸ்வஸிப்பது (மராமரம் பைந்தாள் ஏழ் உருவ, ஒரு வாளி கோத்த வில்லா),
4.  Showing off embellishments - ஒப்பனை அழகை காட்டுவது (கொந்து ஆர் தண் அம் துழாயினாய்),
5.  Being an eternal benefactor நித்திய போக்யன் (அமுதே),
6.  Mingling inseperably பிரிக்கவொண்ணாதபடி கலத்தல் (உன்னை  என்னுள் குழைத்த),
7.  Being young இளகிப்பதிப்பது (மைந்தா),
8.  Being the Superior நித்தியசூரிகளுக்கும் மேலான மேன்மை (வானேறே)

விளக்கம்:

1. வான் - இடவாகுபெயர்.
2. இனி - இப்பொழுது. ‘போகின்றதே!’ என்பது, போகாதே என்னும் பொருளது.

ஈடு விளக்கம்:

Introduction (அவதாரிகை): Azhwar says: "Earlier I was unaware of you. It was thee that identified thyself and thy status and qualities to me and made me incapable of going anywhere else. Now, thou shall not leave me."

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் - சிரமத்தைப் போக்குகிற திருமலையிலே வந்து நின்று உன் ஸ்வாமித்துவத்தைக் காட்டி என்னைச் சேஷத்துவத்திலே நிறுத்தினவனே! 

இலங்கை செற்றாய்  - பிராட்டியுடைய சேர்க்கைக்கு விரோதியாயிருந்தவனைப் போக்கியது போன்று என்னுடைய சேஷத்துவ விரோதியைப் போக்கினவனே! 

மராமரம் பைந்தாள் ஏழ் உருவ, ஒரு வாளி கோத்த வில்லா - பரந்த வடிவையுடையனவான மராமரங்கள் ஏழும் மறுபாடுருவும்படியாகப் பண்டே தொளையுள்ளது ஒன்றில் ஒட்டியது போன்று, அம்பைக் கோத்த வில் வலியையுடையவனே! இதனால், அடியார்கள் திறத்தில் மழுவேந்திக் கொடுத்துக் காரியம் செய்தமையைத் தெரிவித்தபடி. 

கொந்து ஆர் தண் அம் துழாயினாய் -வைத்த வளையத்தோடே நின்று மராமரம் எய்தானாதலின், ‘கோத்த வில்லா’ என்றதனைச் சார்த்துத் ‘தண்அம் துழாயினாய்’ என்கிறார். ‘ஆயின், அவ்வவதாரத்தில் துழாய் உண்டோ?’ எனின், அவதாரத்துக்குச் சேர ஏதாவது ஒன்றாலே வளையம் வைக்கிலும், திருத்துழாய் அல்லது தோற்றாது இவர்க்கு. கொந்துஆர் - தழைத்திருக்கை. அமுதே - மராமரம் எய்கிற போது இலக்குக் குறித்து நின்ற நிலை இவர்க்கு இனிதாய் இருந்தபடி

உன்னை  என்னுள் குழைத்த எம்மைந்தா - கலக்கிற இடத்தில் ‘ஒரே பொருள்’ என்னலாம்படி கலந்து அதனால் வந்த புதுமையான யௌவனத்தை உடையவனே! இதனால், ‘இனி, ‘போவேன்’ என்றால், போகப் போமோ? போகிலும், கூடப் போமித்தனை’ என்பதனைத் தெரிவித்தபடி. 

வான் ஏறே - தன் இனிமையை நித்திய சூரிகளை அனுபவிப்பித்து, அதனாலே வந்த மேன்மை தோன்ற இருக்குமாறு போன்று, இவரை அனுபவித்து மேன்மை தோன்ற இருக்கின்றபடி. 

இனி எங்குப் போகின்றதே -‘உன்னால் அல்லது செல்லாதபடியான என்னை விட்டு உன்னை ஒழிய வாழ வல்லார் பக்கல் போகவோ? நித்தியசூரிகளை விடிலன்றோ என்னை விடலாவது?’ என்கிறார். ‘இவர் நம்மை விடிற்செய்வது என்?’ என்று இறைவனுக்கு உண்டான ஐயத்தைப் போக்குகிற இவ்விடத்தில், ‘நீ என்னை விட்டுப் போகாதே கொள்’ என்னும் இதற்குக் கருத்து என் என்னில், விலக்ஷண விஷயம் தானும் காற்கட்டி, எதிர்த்தலையையும் காற்கட்டப் பண்ணுமாயிற்று.

2.6.8 மாறிமாறிப்பலபிறப்பும் (Don't separate me from thee)

பாசுரம்:

மாறிமாறிப்பலபிறப்பும்பிறந் தடியையடைந்துள்ளந்தேறி
ஈறிலின்பத்திருவெள்ளம் யான்மூழ்கினன்,
பாறிப்பாறியசுர ர்தம்பல்குழாங்கள்நீறெழ, பாய்பறவையொன்
றேறிவீற்றிருந்தாய் உன்னை யென்னுள்நீக்கேலெந்தாய்

Audio Introduction:



English Translation (by Shri. P.S. Desikan):

Flocks of Asuras swarming, you riding a giant bird
sent fleeing astray but now I hold you fast my lord!
Born again and again, and thy feet at last attained
my mind remains distilled, as in that joy I get drowned!

பதம் பிரித்தது:

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி
ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப் பாறி அசுரர் தம் பல் குழாங்கள் நீறு எழ பாய் பறவை ஒன்று
ஏறி வீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்

பொழிப்புரை:

அசுரர்களுடைய பல கூட்டங்கள் நிலை கெட்டு ஓடவும், அவ்விடத்தில் புழுதி எழவும், பகைவர்கள் மேல் பாய்கின்ற ஒப்பற்ற கருடப்பறவையின் மேல் ஏறி வீற்றிருந்தவனே! மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து திருவடிகளை அடைந்து அதனால் உள்ளம் தெளிந்து முடிவு இல்லாத இன்பமாகிய பெரிய வெள்ளத்திலே யான் மூழ்கினன்; இனி, எந்தாய்! உன்னை என்னுள் நீக்கேல்.

விளக்கம்:

1.  ‘மாறிப் பிறந்து அடைந்து தேறி மூழ்கினன்’ எனவும்,
2.  ‘பாறி எழ ஏறி வீற்றிருந்தாய்’ எனவும் கூட்டுக.
3.  ‘மாறிமாறி, பாறிப்பாறி’ என்பன, அடுக்குத்தொடர்; மிகுதிப்பொருளைக் காட்ட வந்தன.
4.  பாறி - பாற. வீற்றிருத்தல் - வேறொன்றற்கு இல்லாத பெருமையோடு தங்கியிருத்தல்;
5.  வீறு - வேறொன்றற்கு இல்லாத பெருமை. நீக்கேல் - எதிர்மறை முற்று.

ஈடு விளக்கம்:

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து - ‘சம்பந்தி சம்பந்திகளோடு உம்மை ஏற்றுக்கொள்ளுவதற்கு நீர் செய்தது என்?’ என்ன, கடலுக்குள்ளே கிடந்த ஒரு துரும்பு திரைமேல் திரையாகத் தள்ள வந்து கரையிலே சேருமாறு போன்று, மாறிமாறிப் பிறந்து வாராநிற்க, திருவடிகளிலே கிட்டிக்கொண்டு நிற்கக் கண்டேன் இத்தனை. “பாவங்களை அனுபவித்து மீளுதல், பிராயஸ்சித்தம் பண்ணி மீளுதல் செய்யக் காலம் இல்லை’ என்பார், ‘மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து’ என்கிறார்.
In the previous verse, Azhwar proclaimed salvation not only for him but all those having affinity to him. Therefore, we asks him what has he done to reach the Lord along with all his flock. To this, Azhwar says that all that he has done was letting himself to undergo repeated pangs of birth - with no time for him to mend his sins - only to reach the Lord's feet. This is akin to a small scrap, letting itself being hauled and pulled by waves in a sea, to ultimately reach the shore!

அடியை அடைந்து உள்ளம் தேறி - இதனால், ‘உள்ளம் தேறி அடியை அடைந்தவன் அல்லன்: அடியை அடைந்து உள்ளம் தேறினவன்’ என்கிறார். நெடுநாள் உள்ள விஷய வாசனையாலும் பகவானைப் பற்றாத காரணத்தாலும் உள்ள மனத்தின் மயக்கம் நீங்கித் தெளிந்து. தெளிந்த அளவே அன்றியே,
Azhwars says that, he became purified of mind upon reaching the feet of the Lord - after undergoing these repeated births! It is to be noted that he is not saying that he became purified of mind and then reached those feet!

ஈறு இல் இன்பத்து இருவெள்ளம் மூழ்கினன் யான் - முடிவில்லாமல் இருக்கின்ற பெரிய ஆனந்தக்கடலிலே மூழ்கினேன். ‘திருவடி, திருவனந்தாழ்வான் இவர்கள் குமிழி நீர் உண்கிற விஷயத்திலே அன்றோ யான் மூழ்கினேன்?’ என்பார் ‘யான் மூழ்கினேன்’ என்கிறார்.
Azhwar says that he attained the kind of pleasure which is enjoyed by celestials like Hanuman and Garuda - such a deep ocean (of pleasure) where water bubbles do not exist!

அசுரர்தம் பல் குழாங்கள் பாறிப் பாறி நீறு எழப் பாய்பறவை ஒன்று ஏறி வீற்றிருந்தாய் - ‘ஆயின், உம்முடைய விரோதிகள் செய்த காரியம் என்?’ என்ன, ‘அதற்குக் கடவாரைக் கேண்மின்’ என்கிறார் மேல்: அசுர வர்க்கத்தினுடைய பல வகைப்பட்ட குழாங்களானவை பாறிப்பாறி நீறு எழுந்து போகும்படியாகப் பகைவர்கள் மேலே பாயாநின்றுள்ள அத்விதீயமான பறவையை மேற்கொண்டு உன்னுடைய சிறப்பின் வேறுபாடு தோன்ற இருந்தவனே! பெரிய திருவடிக்கு அத்விதீயமாவது, இறைவன் கருத்து அறிந்து நடத்தலில் தலைவனாதல். இறைவன் பகைவர்களை அழித்தற்குப் பண்ணின செயல், பெரிய திருவடி திருத்தோளில் பேராதே இருந்தது இத்தனையே’ என்பார், ‘ஏறி வீற்றிருந்தாய்’ என்கிறார்.
When we ask Azhwar what happens to your adversaries, now that you have attained the lotus feet, he replies that the adversaries are now the concern of the Lord, who is seated on the Garuda and flies up and down to tear off the adversaries into pieces!!

உன்னை என்னுள் நீக்கேல் - ஸ்வாமியான நீ, இனி ஒரு காலமும் உன்னை என் பக்கல்நின்றும் பிரித்துக்கொண்டு போகாது ஒழிய
Never leave me!

2.6.7 முடியாததென் எனக்கே (What is impossible to me)

பாசுரம்:

முடியாத்தென்னெக்கேலினி முழுவேழுலகு முண்டான் * உகந்துவந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானு மல்லனினி *
செடியார்நோய்களெல்லாந்துரந்து எமர்கீழ்மேலெழுபிறப்பும் *
விடியாவெந்நகரத்து என்றும் சேர்ந்தல்மாறினரே

Audio Introduction:



Translation (by Mr. P.S. Desikan):

Oh! He entered deep into me, never to part!
Sins I inherited during seven births of past
through forefathers absolved, no more hell at last!
Nothing holds me henceforth, I clinch him fast!

பதம் பிரித்தது:

முடியாதது என் எனக்கேல் இனி? முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும்
விடியா வெம் நரகத்து என்றும் சேர்தல் மாறினரே

பொழிப்புரை:

ஏழ் உலகங்கள் முழுதினையும் உண்டவன், விரும்பி வந்து அடியேன் மனத்திலே புகுந்தான்; இனி, நீங்குமவனும் அல்லன்; கீழ் எழு பிறப்புகளிலும் மேல் எழு பிறப்புகளிலும் உள்ள என்னுடைய உறவினர், பாவங்கள் காரணமாக வருகின்ற துன்பங்கள் எல்லாம் நீங்கி, ஒரு நாளும் விடியாத கொடிய நரகத்திலே சேர்தலை எப்பொழுதும் நீங்கினர்; ஆதலால், எனக்கு முடியாதது என்?

விளக்கம்:

1.  ‘முழு’ என்பது, எஞ்சாமையைக் காட்ட வந்தது;
2.  ‘முழுதுஎன் கிளவு எஞ்சாப் பொருட்டே’ என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்,
3.  உண்டான் - வினையாலணையும் பெயர்.
4.  ‘எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப், பண்புடை மக்கட் பெறின்’ என்ற திருக்குறளுக்கு
      விரிவுரையாகவும் உதாரணமாகவும் அமைந்தது இப்பாசுரம் எனலாம்.
5.  ‘எமர் துறந்து சேர்தல் மாறினர்’ என முடிக்க

ஈடு விளக்கம்:

முடியாதது. என் எனக்கேல் இனி – (Nothing holds me henceforth, I clinch him fast) எனக்காகில் இனி முடியாதது உண்டோ? ‘எனக்கு இனி அநவாப்தமாய் இருப்பது ஒன்று உண்டோ?’ என்றபடி -

முழு ஏழ்உலகும் உண்டான் உகந்து வந்து அடியேன் உள் புகுந்தான் – (Oh! -The one who held all seven worlds in his stomach during the deluge- HE entered deep into me) ‘நீர் இது என் கொண்டு சொல்லுகிறீர்?’ என்ன - பிரளய ஆபத்திலே அகப்பட்ட பூமி, தன் வயிற்றில் புகாத போது படும் பாடு அடங்க, தான் என் பக்கல் புகாத போது படுவானாய் வந்து புகுந்தான்; எனக்கு இனி முடியாதது உண்டோ? சம்பந்தத்தைப் பார்த்துப் புகுந்தான் என்பார்,  - ‘அடியேன் உள் புகுந்தான்’ என்கிறார். ஒரு நீராகப் கலந்தான் என்பார், ‘உள் புகுந்தான்’ என்கிறார். தன் பக்கல் உலகம் புக்கது போன்று அன்றி, மகிழ்ந்து புக்கானாதலின், ‘உகந்து புகுந்தான்’ என்கிறார். ஆயின், இவனுக்கும் உலகத்துக்கும் செல்லாமை ஒக்கும், உவப்பே இவ் விஷயத்தில் தன் ஏற்றம்.

இனி அகல்வானும் அல்லன் – (never to part) அந்தப் பூமிக்குப் பிரளயம் நீங்கினவாறே அகலவேண்டும்; இவனுக்கு அதுவும் இல்லை.  ‘அகல ஒண்ணாமைக்குக் காரணம் என்?’ எனின், சேதநரைப் போலே பாவத்தாலே அகன்று ஒரு புண்ணியத்தாலே கிட்டுமது இல்லையே இவனுக்கு? ஆதலின், ‘அகல்வானும் அல்லன்’ என்கிறார். ஆக, ‘முதலிலே பிரிவைப் பற்றிப் பேசவும் உடன் படுகின்றிலன்’ என்றபடி.

செடியார் நோய்கள் எல்லாம் துரந்து – (Sins I inherited during seven births of past - no more) ‘உம்மை அவன் இப்படி விரும்பினான் ஆகில், பனை நிழல் போலே உம்மை நோக்கிக் கொண்டுவிட அமையுமோ?’ என்ன, பாவங்களாலே நிறைந்த துக்கங்களை வாசனையோடே ஓட்டி. செடி – பாவம். இனி, ‘செடியார் நோய்’ என்பதற்கு, ‘தூறு மண்டின நோய்கள்’ என்று பொருள் கூறலுமாம். செடி – தூறு. விஷயப் பிராவண்யத்தால் வந்த நோய், தமது தாழ்வினை நினைத்தலால் வந்த நோய், பகவானுடைய அனுபவத்தைப் பிரிந்த பிரிவால் வந்த நோய் ஆகிய இவற்றை எல்லாம் நினைத்து, ‘நோய்கள் எல்லாம்’ என்கிறார். ‘ஆயின், ‘உள்ள நோய்கள் எல்லாம் துரந்து’ என்ற இடத்திலும் கூறிற்றிலரோ இவற்றை?’ என்னில், அங்குக் கூறியது, தம் அளவு. இங்குக் கூறுவது, தம் சம்பந்தி சம்பந்திகளுடைய விஷயம். ‘இப்படி இவர்கள் ஒட்டியது எதனாலே?’ என்னில், எமர் – வேறு ஒன்றால் அன்று; என்னுடைய சம்பந்தமே காரணமாக.

கீழ் மேல் எழு பிறப்பும் – ‘சம்பந்தம் எவ்வளவு?’ என்னில், கீழ் எழுபடி காலும் மேல் எழுபடி காலும் 2தம்முடன் எழுபடி காலும் ஆக இருபத்தொருபடி கால்.

விடியா வெம்நரகத்து – (Hell - no more) ஒருநாள் வரையிலே பாவங்கள் குறைந்தவாறே விடியும் தன்மையையுடையது எமன் தண்டம்; இது விடியாத நரகம் ஆதலின், ‘விடியா நரகம்’ என்கிறார். ‘நரகம்’ என்று புத்தி பிறக்கும் அந்நரகத்தில், தண்மை தோற்றாத நரகம் இது ஆதலின், ‘வெம்நரகம்’ என்கிறார். என்றும் சேர்தல்மாறினர் – என்றும் கிட்டக்கூடிய தண்மை தவிர்ந்தனர். ‘நானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை; அவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை’ என்பார்,

‘மாறினர்’ என்று அவர்கள் வினையாக அருளிச்செய்கின்றார். ‘எதனாலே?’ என்னில், ‘என் பக்கல் அவன் பண்ணின பக்ஷபாத ராஜகுலத்தாலே மாறிக்கொண்டு நின்றார்கள்’ என்றபடி.                        

தம்முடன் எழுபடி கால்’ என்றது, தமக்கு முன்னே மூன்று பேரும், பின்னே மூன்றுபேரும், தாமுமாக எழுவர். இருபத்தொருபடி கால் – இருபத்தொரு தலைமுறை.  என் அளவில் விஷயீ காரம் -சம்பந்த சம்பந்திகளுக்கும் கிட்டும் -என்கிறார் இதில் பொசிந்து காட்டுகிறது இங்கு -இது தானே அடுத்த திருவாய் மொழி - கேசவன் தமர் -விஷயம்

2.6.6. உன்னைச் சிந்தைசெய்துசெய்து ( Vulnerable I'm no more)

பாசுரம்:

உன்னைச் சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன்
முன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான்,
உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் அகல்மார்வங்கீண்ட,என்
முன்னைகோளரியே, முடியாததென்னெனக்கே?

Audio Introduction:


Translation (by Mr. P.S. Desikan):

I sing and dance while my mind ever keeps you afore.
You uprooted all those sins I committed since before.
The robust chest of Hiranyan, thy detractor of yore,
in the form of a lion you tore! Ah! Vulnerable I'm no more!

பதம் பிரித்தது:

உன்னைச் சிந்தை செய்துசெய் துன்நெடு மாமொழியிசை பாடியாடியென்
முன்னைத் தீவினைகள் முழுவே ரரிந்தனன்யான்
உன்னைச் சிந்தையினானா லிகழ்ந்த விரணிய னகல்மார்வம் கீண்டஎன்
முன்னைக் கோளரியே மு டியாத தென்னெனக்கே?

பொழிப்புரை:

உன்னை மனத்தால் இகழ்ந்த இரணியனுடைய அகன்ற மார்வைப்பிளந்த, என்னுடைய முன்னை நரசிங்கமே! உன்னை நினைத்து நினைத்து உன்னுடைய பெருமை பொருந்திய திருவாய்மொழியைப் பெருமை பொருந்திய இசையோடு பாடி, அதற்குத் தக ஆடி, என்னுடைய பழமையான கொடிய பாவங்களை அடியோடு அழித்தேன் யான்; இனி, எனக்கு முடியாத காரியம் யாது உளது

விளக்கம்:

1.   ‘சிந்தைசெய்து பாடி ஆடி அரிந்தனன்’ எனக்கூட்டுக.
2.   ‘முன்னை’ என்பது, ‘அடியனான பிரஹ்லாதன் நினைவுக்கு முற்கோலினவன்’ என்னும் பொருளது.
3.   ‘என்’ என்பது, ‘எவன்’ என்னும் பொருளது.
4.   ‘என்’ என்பது, ‘எவன்’ என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது.

ஈடு விளக்கம்:

உன்னைச் சிந்தை செய்து செய்து – இனிமையாலே விட ஒண்ணாது இருக்கிற உன்னை மாறாமல் நினைத்து. (my mind ever keeps afore)
உன்னை – இனியனுமாய் அடையத் தகுந்தவனுமான உன்னை.  (thou)
சிந்தை செய்து செய்து - ‘தியானம் செய்யத் தக்கவன்’ என்கிற ஒரு விதியினாலே தூண்டப்பட்டவனாயல்லாமல், இனிமையாலே விடமாட்டாமல் எப்பொழுதும் நினைத்து.
உன் நெடு மா மொழி இசை பாடி ஆடி – இயலும் இசையும் கரை காண ஒண்ணாதபடி இருக்கிற மொழியைப் பாடி, அது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையால் ஆடி.  (I sing your praise in ancient and great language)
‘நெடு, மா’ என்ற இரண்டும், மொழிக்கும் இசைக்கும் அடைமொழிகள்; இயலின் பெருமையையும் இசையின் பெருமையையும் சொல்ல வந்தன.
என் முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான் – என்னுடைய பல காலமாக ஈட்டப்பட்ட கர்மங்களை வாசனையோடே போக்கினேன். (You uprooted all those sins)
முழு வேர்-வேர் முழுக்க. அதாவது, ‘பக்க வேரோடே’ என்றபடி. பாவங்களைப் போக்கினவன் இறைவன் ஆயினும், பலத்தை அடைந்தவர் தாம் ஆகையாலே ‘அரிந்தனன் யான்’ எனத் தம் தொழிலாகக் கூறுகிறார்.
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த – வார்த்தையோடு நில்லாது நெஞ்சினாலும் இகழ்ந்தவன். இத்தால், அவன் விடுவது, மனம் அறிந்தே தீவினைகளைச் செய்தவர்களை; கைக்கொள்ளுகைக்கு நட்புத்தன்மையே அமையும் என்றபடி.  (thy detractor of yore - by words as well as by thought)
இரணியன் அகன் மார்வம் கீண்ட – இரணியனுடைய அகன்ற மார்வைப் பிளந்த. வரபலம் தோள் பலம் ஊட்டியாக வளர்ந்த சரீரமானது திரு உகிருக்கு இரை போராமையாலே, வருத்தம் இன்றிக் கிழித்துப் பொகட்டான் என்பார், ‘அகன் மார்வம் கீண்ட’ என்கிறார்.  (The robust chest of Hiranyan - thou tore)
என் முன்னைக் கோள் அரியே- நரசிம்ஹமாய் உதவியதும் தமக்கு என்று இருக்கிறார்; அடியார்களில் ஒருவருக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்து இராத அன்று பகவத் சம்பந்தம் இல்லையாம் இத்தனை. இதனால், ‘எனக்குப் பண்டே உதவி செய்தவனே’ என்கிறார் என்றபடி. (in the form of a lion)
கோளரி -‘மஹாவிஷ்ணும்’ என்கிற மிடுக்கையுடைய சிங்கம் என்னுதல். ‘ஜ்வலந்தம்’ என்கிற ஒளியையுடைய சிங்கம் என்னுதல்.
மூடியாதது என் எனக்கே – நீ சூளுறவு செய்த அக்காலத்திலேயே தோற்றுவாய் ஆயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ? (Ah! Vulnerable I'm no more!)

2.6.5 உய்ந்து போந்தென் - I have become your servant!

பாசுரம்:

உய்ந்து போந்தென் உலப்பிலாத வெந்தீவினைகளை நாசஞ் செய்து,உன
தந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ ஐந்து
பைந்தலை யாடர வணைமேவிப் பாற்கடல் யோக நித்திரை,
சிந்தை செய்த எந்தாய்! உன்னைச் சிந்தை செய்து செய்தே.

Audio Introduction:




Translation (by Mr. P.S. Desikan):

Uplifted as I, unlike others, my sins all undone              
I've become thy slave forever, can I unfasten?    
Lay as you, over a five-hooded cobra 'midst a milky ocean
It's Thee ever in my mind, my lord in timeless contemplation.

பதம் பிரித்தது:

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந் தீவினைகளை நாசம் செய்து, உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் - விடுவேனோ? ஐந்து
பைந்தலை ஆடு அரவணை மேவிப் பாற்கடல் யோக நித்திரை,
சிந்தை செய்த எந்தாய்! உன்னைச் சிந்தை செய்து செய்தே.

பொழிப்புரை:

திருப்பாற்கடலில் பசிய ஐந்து தலைகளையுடைய ஆடுகின்ற ஆதிசேஷ சயனத்தில் பொருந்தி யோக நித்திரையில் காக்கும் வகையைச் சிந்தை செய்த என் சுவாமியே! உன்னை நினைத்து நினைத்து அதனால் உய்வு பெற்று, உலக மக்களில் வேறுபட்டு, என்னுடைய அளவு இல்லாத கொடிய பாவங்களை அழித்து, உன்னுடைய முடிவு இல்லாத நித்தியமான கைங்காரியத்திலே சேர்ந்துள்ள நான், இனி விடுவேனோ?

My Father! I have obtained salvation by thinking about You always; (எந்தாய்! உன்னைச் சிந்தை செய்து செய்தே) I have learnt the nature of my athmA and have found the difference from others' thinking of the same; (சிந்தை செய்த எந்தாய்)

Hence, I have been granted by You the servitude to perform kainkaryam at Your feet with You as my Lord! (அந்தமில் அடிமை அடைந்தேன்)

Thus, the sins accrued over the ages due to my past karmaas could be destroyed; (உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந் தீவினைகளை நாசம் செய்து)

Hereafter, I will NEVER EVER LEAVE YOU. (விடுவேனோ?) What GREAT Help You have done to me , my Lord, the One who sleeps on the AdhisEshA (ஐந்து பைந்தலை ஆடு அரவணை மேவிப் பாற்கடல் யோக நித்திரை)! I will always THINK OF YOU, LORD

விளக்கம்:

1.  ‘சிந்தைசெய்து உய்ந்து போந்து நாசஞ்செய்து அடிமை அடைந்தேன்’ எனக் கூட்டுக.
2.  அடைந்தேன் - வினையாலணையும் பெயர்.
3.  ‘சிந்தைசெய்து, நாசஞ்செய்து’ என்பன ஒரு சொல் நீர்மைய.
4.  செய்து செய்து -அடுக்கு.
5.  மேவிச்சிந்தை செய்த’ எனக் கூட்டுக.
6.  அந்தம்இல் அடிமை - நித்தியமான அடிமை.

2.6.4 வள்ளலே!மதுசூதனா! - Saviour! How can I Leave you?

பாசுரம்:

வள்ளலே! மதுசூதனா! என்மரகத மலையே! உனை நினைந்து,
தெள்கல்தந்த வெந்தாயுன்னை யெங்ஙனம் விடுகேன்,
வெள்ள மேபுரை நின்புகழ் குடைந்தாடிப் பாடிக்களித் துகந்துகந்து
உள்ளநோய்க ளெல்லாம்துரந் துய்ந்து போந்திருந்தே.

(இது முதலடியும் மூன்றமடியும் அறுசீராய் அயலடியும் ஈற்றடியும் நாற்சீரான ஆசிரியத்துறை)

Audio Introduction:



Translation (by Mr. P.S. Desikan):

O Madusudhanan, generous, you like an emerald hill!              
Loathes all else, me as you fill, and to part nஒer I will.      
Drowned in thy traits flooding in swirl, in ecstasy I whirl

My woes all annulled, hopes of deliverance hence fulfill.

பதம் பிரித்தது:

வள்ளலே, மதுசூதனா, என் மரகத மலையே, உனை நினைந்து,
தெள்கல் தந்த எந்தாய் உன்னை எங்ஙனம் விடுகேன்,
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக்களித்து உகந்துகந்து
உள்ளநோய்களேல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே.

பொழிப்புரை:

வள்ளலே! மதுசூதனா! என்னுடைய மரதக மலையே! உன்னை நினைத்தலால், மற்றைப்பொருள்களை இகழும்படியான தன்மையை எனக்குக் கொடுத்த எந்தையே! வெள்ளத்தைப் போன்ற நின் புகழ்களில் மூழ்கி ஆடிப்பாடி மகிழ்ந்து அம்மகிழ்ச்சியிலே உயர்ந்து என்னிடத்திலுள்ள நோய்களை எல்லாம் நீக்கி அதனால் உயர்வு பெற்று உன்னிடத்திற்போந்திருந்தேன்; ஆதலால். இனி, உன்னை எங்ஙனம் விடுகேன்!

விளக்கம்:

1.  நினைந்து -செயவென் எச்சத்திரிபு.
2.  ‘நினைத்தலால் எள்கல் தந்த எந்தாய்’ என்க.
3.  புரை - உவம உருபு.
4.  உகத்தல் - உயர்தல்;
5.  ‘உகப்பே உயர்தல் உவப்பே உவகை’ என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்.
6.  இருந்து - வினைமுற்று.
7.  ‘கழிந்தது பொழிந்தென வான் கண் மாறினும், தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்’ ( புறம். 203 ) என்ற இடத்துக் கழிந்து, பொழிந்து என்பன, வினை முற்றுப்பொருளவாதல் காண்க. அன்றி, இதனை எச்சமாகக் கோடலுமாம்.

Transliteration:

vaLLalE mathusoothanA* enmarathaka malaiyE,* unai_ninaindhu,
eLkalthandha endhaay* unnai eNGNGanam vidugEn,?*
veLLamE purai_ninpugaz kudaindhaadippaadi* kaLiththu ukandhugandhu*
uLLa _nOygaL ellaam thurandhu* uyndhu pOndhirundhE.