2.6.6. உன்னைச் சிந்தைசெய்துசெய்து ( Vulnerable I'm no more)

பாசுரம்:

உன்னைச் சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன்
முன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான்,
உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் அகல்மார்வங்கீண்ட,என்
முன்னைகோளரியே, முடியாததென்னெனக்கே?

Audio Introduction:


Translation (by Mr. P.S. Desikan):

I sing and dance while my mind ever keeps you afore.
You uprooted all those sins I committed since before.
The robust chest of Hiranyan, thy detractor of yore,
in the form of a lion you tore! Ah! Vulnerable I'm no more!

பதம் பிரித்தது:

உன்னைச் சிந்தை செய்துசெய் துன்நெடு மாமொழியிசை பாடியாடியென்
முன்னைத் தீவினைகள் முழுவே ரரிந்தனன்யான்
உன்னைச் சிந்தையினானா லிகழ்ந்த விரணிய னகல்மார்வம் கீண்டஎன்
முன்னைக் கோளரியே மு டியாத தென்னெனக்கே?

பொழிப்புரை:

உன்னை மனத்தால் இகழ்ந்த இரணியனுடைய அகன்ற மார்வைப்பிளந்த, என்னுடைய முன்னை நரசிங்கமே! உன்னை நினைத்து நினைத்து உன்னுடைய பெருமை பொருந்திய திருவாய்மொழியைப் பெருமை பொருந்திய இசையோடு பாடி, அதற்குத் தக ஆடி, என்னுடைய பழமையான கொடிய பாவங்களை அடியோடு அழித்தேன் யான்; இனி, எனக்கு முடியாத காரியம் யாது உளது

விளக்கம்:

1.   ‘சிந்தைசெய்து பாடி ஆடி அரிந்தனன்’ எனக்கூட்டுக.
2.   ‘முன்னை’ என்பது, ‘அடியனான பிரஹ்லாதன் நினைவுக்கு முற்கோலினவன்’ என்னும் பொருளது.
3.   ‘என்’ என்பது, ‘எவன்’ என்னும் பொருளது.
4.   ‘என்’ என்பது, ‘எவன்’ என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது.

ஈடு விளக்கம்:

உன்னைச் சிந்தை செய்து செய்து – இனிமையாலே விட ஒண்ணாது இருக்கிற உன்னை மாறாமல் நினைத்து. (my mind ever keeps afore)
உன்னை – இனியனுமாய் அடையத் தகுந்தவனுமான உன்னை.  (thou)
சிந்தை செய்து செய்து - ‘தியானம் செய்யத் தக்கவன்’ என்கிற ஒரு விதியினாலே தூண்டப்பட்டவனாயல்லாமல், இனிமையாலே விடமாட்டாமல் எப்பொழுதும் நினைத்து.
உன் நெடு மா மொழி இசை பாடி ஆடி – இயலும் இசையும் கரை காண ஒண்ணாதபடி இருக்கிற மொழியைப் பாடி, அது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையால் ஆடி.  (I sing your praise in ancient and great language)
‘நெடு, மா’ என்ற இரண்டும், மொழிக்கும் இசைக்கும் அடைமொழிகள்; இயலின் பெருமையையும் இசையின் பெருமையையும் சொல்ல வந்தன.
என் முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான் – என்னுடைய பல காலமாக ஈட்டப்பட்ட கர்மங்களை வாசனையோடே போக்கினேன். (You uprooted all those sins)
முழு வேர்-வேர் முழுக்க. அதாவது, ‘பக்க வேரோடே’ என்றபடி. பாவங்களைப் போக்கினவன் இறைவன் ஆயினும், பலத்தை அடைந்தவர் தாம் ஆகையாலே ‘அரிந்தனன் யான்’ எனத் தம் தொழிலாகக் கூறுகிறார்.
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த – வார்த்தையோடு நில்லாது நெஞ்சினாலும் இகழ்ந்தவன். இத்தால், அவன் விடுவது, மனம் அறிந்தே தீவினைகளைச் செய்தவர்களை; கைக்கொள்ளுகைக்கு நட்புத்தன்மையே அமையும் என்றபடி.  (thy detractor of yore - by words as well as by thought)
இரணியன் அகன் மார்வம் கீண்ட – இரணியனுடைய அகன்ற மார்வைப் பிளந்த. வரபலம் தோள் பலம் ஊட்டியாக வளர்ந்த சரீரமானது திரு உகிருக்கு இரை போராமையாலே, வருத்தம் இன்றிக் கிழித்துப் பொகட்டான் என்பார், ‘அகன் மார்வம் கீண்ட’ என்கிறார்.  (The robust chest of Hiranyan - thou tore)
என் முன்னைக் கோள் அரியே- நரசிம்ஹமாய் உதவியதும் தமக்கு என்று இருக்கிறார்; அடியார்களில் ஒருவருக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்து இராத அன்று பகவத் சம்பந்தம் இல்லையாம் இத்தனை. இதனால், ‘எனக்குப் பண்டே உதவி செய்தவனே’ என்கிறார் என்றபடி. (in the form of a lion)
கோளரி -‘மஹாவிஷ்ணும்’ என்கிற மிடுக்கையுடைய சிங்கம் என்னுதல். ‘ஜ்வலந்தம்’ என்கிற ஒளியையுடைய சிங்கம் என்னுதல்.
மூடியாதது என் எனக்கே – நீ சூளுறவு செய்த அக்காலத்திலேயே தோற்றுவாய் ஆயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ? (Ah! Vulnerable I'm no more!)

No comments :

Post a Comment