2.6.10 போகின்றகாலங்கள் (Ever mine henceforth)

பாசுரம்:

போகின்றகாலங்கள்போயகாலங் கள்போகுகாலங்கள், தாய்தந்தையுயி
ராகின்றாய் உன்னைநானடைந்தேன்விடுவேனோ,
பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே. பரமா, தண்வேங்கட
மேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே.

Audio Introduction:


English Translation (by Mr. P.S. Desikan):

O Lord, of three worlds, time-honourd and divine!
In past, present and future, ever as you remain
as father, mother and soul, now that I could attain
thee over cool Venkadam, could I miss you again?

பதம் பிரித்தது:

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர்
ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கடம்
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே

பொழிப்புரை:

எங்கும் பரவுகின்ற பழமையான புகழையுடைய மூன்று உலகங்கட்கும் தலைவனே! குளிர்ந்த வேங்கடத்தில் எழுந்தருளியிருப்பவனே! வாசனை வீசுகின்ற குளிர்ந்த துழாய் மாலையை யுடையவனே! நிகழ்காலம் இறந்த காலம் எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் தாயும் தந்தையும் உயிரும் ஆகின்றவனே! உன்னை நான் அடைந்தேன்; இனி, விடுவேனோ? விடேன்

ஈடு விளக்கம்:

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர் ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ - முக்காலத்திலும், பரிவுடைய தாய் செய்வதும் செய்து, ஹிதத்தைச் செய்கின்ற தமப்பன் செய்வதும் செய்து, ‘அந்தக் காகாசுரன் தகப்பனாலும் விடப்பட்டான்’ என்கிறபடியே. அவர்கள் விடுமளவிலும், தான் தனக்குப் பார்க்கும் ஹிதமும் பார்க்கும்படி எல்லா வகையாலும் அடையத் தக்கவனுமாய், உபகாரத்தைச் செய்கிறவனுமாய் உள்ள உன்னை, உதவியை நினையாநின்ற நான் கிட்டப் பெற்று வைத்து, விடக் காரணம் உண்டோ?  (In past, present and future, ever as you remain as father, mother and soul, now that I could attain like Lord Rama excused Kakasura's grave sin even when all others gave up on him)

பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே- (பாகின்ற = well spread) பரம்பி இருப்பதாய், இயல்பிலே அமைந்த (தொல் புகழ் = inherent good natured, time-honourd) நற்குணங்களையுடையையாய், மூன்று உலகங்கட்கும் நிர்வாஹகன் ஆனவனே! ‘பெருமாள் தர்மத்தையுடையவர்; சரணாகதி புகுந்தவனிடத்தில் அன்புடையவர்; எல்லாராலும் அறியப்பட்டவர்; ஆகையால், பிழைத்திருப்பதற்கு நீ விரும்புவாயேயானால் உனக்கு அவ்விராமனோடு நட்பு உண்டாகவேண்டும்’ என்கிறபடியே, பகைவர்கள் கூட்டத்திலும் பிரசித்தமாம்படி பரந்திருத்தலின் ‘பாகின்ற புகழ்’ என்கிறார்.

பரமா - (Superior, divine) குணங்களுக்கும் காத்தலுக்கும் உன்னை எண்ணினால், பின்னை எண்ணலாவார் இல்லாதபடி சர்வாதிகனாய் இருக்குமவனே! 

தண் திருவேங்கடம் மேகின்றாய் -‘இப்படி எல்லார்க்கும் மேம்பட்ட வனாயிருந்து வைத்து, என்னை அடிமை கொள்ளுகைக்காக, சிரமத்தை நீக்குகிற திருமலையிலே வந்து அண்மையில் இருப்பவனே! உன்னை நான் அடைந்தேன், விடுவேனோ?’ என மேலே கூட்டுக. 

தண்துழாய் விரை நாறு கண்ணியனே - இவருடைய துன்பமெல்லாம் தீரும்படியாக வந்து அங்கீகரித்துத் தன்னை நுகர்வித்து, இவர் தன்னை விடின் செய்வது என் என்ற ஐயமும் தீர்ந்து, தோளில் இட்ட மாலையும் வாசனை உள்ளதாய், பிடித்து மோந்த இலைத் தொடைமாலையும் (a ball made of garland) தானுமாய் நின்ற நிலையைத் தெரிவிக்கிறார். 

No comments :

Post a Comment