பாசுரம்:
எந்தாய்தண் திருவேங்கடத் துள்நின்றாய்! இலங்கை செற்றாய், மராமரம்
பைந்தாளே ழுருவவொரு வாளிகோத் தவில்லா!
கொந்தார்தண் ணந்துழாயி னாயமுதே! உன்னையென் னுள்ளேகு ழைத்தவெம்
மைந்தா! வானேறே, இனியெங்குப் போகின்றதே?
Audio Introduction:
English Translation (by Mr. P.S. Desikan):
My father, of Venkadam, you then conquered that Lanka!
Ere, with a single dart uprooted the seven trees flora!
Cool tulasi on, sank into me as my child, you my ambrosia!
King of heavens, from here on what further, your saga?
பதம் பிரித்தது:
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா வான் ஏறே இனி எங்குப் போகின்றதே?
According to Panner Ayira Padi vyakyaanam, in this verse Azhwar identifies eight distinct qualities of the Lord -
1. Having an Extraordinary relationship அஸாதாரண ஸம்பந்தம் (எந்தாய்),
2. Ease சௌலப்யம் (தண் திருவேங்கடத்துள் நின்றாய்),
3. Quelling of the opposition விரோதி நிவர்த்வகத்வம் (இலங்கை செற்றாய்) &
Acquiring Loyalty விஸ்வஸிப்பது (மராமரம் பைந்தாள் ஏழ் உருவ, ஒரு வாளி கோத்த வில்லா),
4. Showing off embellishments - ஒப்பனை அழகை காட்டுவது (கொந்து ஆர் தண் அம் துழாயினாய்),
5. Being an eternal benefactor நித்திய போக்யன் (அமுதே),
6. Mingling inseperably பிரிக்கவொண்ணாதபடி கலத்தல் (உன்னை என்னுள் குழைத்த),
7. Being young இளகிப்பதிப்பது (மைந்தா),
8. Being the Superior நித்தியசூரிகளுக்கும் மேலான மேன்மை (வானேறே)

பொழிப்புரை:
என் தமப்பனே, குளிர்ந்த திருவேங்கடத்தில் நிற்கின்றவனே, இலங்கையை அழித்தவனே, மராமரங்களினுடைய பரந்த அடிப்பாகம் ஏழும் ஊடுரும்படி ஒப்பற்ற பாணத்தை விடுத்த வில்லையுடையவனே, குளிர்ந்த அழகிய கொத்துகளையுடைய திருத்துழாய் மாலையை உடையவனே, அமுதம் போன்றவனே, உன்னை என்னுள்ளே கலந்த இளமைப்பருவம் உடையவனே நித்தியசூரிகளுக்கு ஏறு போன்றவனே, இப்பொழுது இக்கலவியை விட்டு எங்கே போகின்றாய்?
According to Panner Ayira Padi vyakyaanam, in this verse Azhwar identifies eight distinct qualities of the Lord -
1. Having an Extraordinary relationship அஸாதாரண ஸம்பந்தம் (எந்தாய்),
2. Ease சௌலப்யம் (தண் திருவேங்கடத்துள் நின்றாய்),
3. Quelling of the opposition விரோதி நிவர்த்வகத்வம் (இலங்கை செற்றாய்) &
Acquiring Loyalty விஸ்வஸிப்பது (மராமரம் பைந்தாள் ஏழ் உருவ, ஒரு வாளி கோத்த வில்லா),
4. Showing off embellishments - ஒப்பனை அழகை காட்டுவது (கொந்து ஆர் தண் அம் துழாயினாய்),
5. Being an eternal benefactor நித்திய போக்யன் (அமுதே),
6. Mingling inseperably பிரிக்கவொண்ணாதபடி கலத்தல் (உன்னை என்னுள் குழைத்த),
7. Being young இளகிப்பதிப்பது (மைந்தா),
8. Being the Superior நித்தியசூரிகளுக்கும் மேலான மேன்மை (வானேறே)
விளக்கம்:
1. வான் - இடவாகுபெயர்.
2. இனி - இப்பொழுது. ‘போகின்றதே!’ என்பது, போகாதே என்னும் பொருளது.
2. இனி - இப்பொழுது. ‘போகின்றதே!’ என்பது, போகாதே என்னும் பொருளது.
ஈடு விளக்கம்:
Introduction (அவதாரிகை): Azhwar says: "Earlier I was unaware of you. It was thee that identified thyself and thy status and qualities to me and made me incapable of going anywhere else. Now, thou shall not leave me."

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் - சிரமத்தைப் போக்குகிற திருமலையிலே வந்து நின்று உன் ஸ்வாமித்துவத்தைக் காட்டி என்னைச் சேஷத்துவத்திலே நிறுத்தினவனே!
இலங்கை செற்றாய் - பிராட்டியுடைய சேர்க்கைக்கு விரோதியாயிருந்தவனைப் போக்கியது போன்று என்னுடைய சேஷத்துவ விரோதியைப் போக்கினவனே!
மராமரம் பைந்தாள் ஏழ் உருவ, ஒரு வாளி கோத்த வில்லா - பரந்த வடிவையுடையனவான மராமரங்கள் ஏழும் மறுபாடுருவும்படியாகப் பண்டே தொளையுள்ளது ஒன்றில் ஒட்டியது போன்று, அம்பைக் கோத்த வில் வலியையுடையவனே! இதனால், அடியார்கள் திறத்தில் மழுவேந்திக் கொடுத்துக் காரியம் செய்தமையைத் தெரிவித்தபடி.
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் -வைத்த வளையத்தோடே நின்று மராமரம் எய்தானாதலின், ‘கோத்த வில்லா’ என்றதனைச் சார்த்துத் ‘தண்அம் துழாயினாய்’ என்கிறார். ‘ஆயின், அவ்வவதாரத்தில் துழாய் உண்டோ?’ எனின், அவதாரத்துக்குச் சேர ஏதாவது ஒன்றாலே வளையம் வைக்கிலும், திருத்துழாய் அல்லது தோற்றாது இவர்க்கு. கொந்துஆர் - தழைத்திருக்கை. அமுதே - மராமரம் எய்கிற போது இலக்குக் குறித்து நின்ற நிலை இவர்க்கு இனிதாய் இருந்தபடி
உன்னை என்னுள் குழைத்த எம்மைந்தா - கலக்கிற இடத்தில் ‘ஒரே பொருள்’ என்னலாம்படி கலந்து அதனால் வந்த புதுமையான யௌவனத்தை உடையவனே! இதனால், ‘இனி, ‘போவேன்’ என்றால், போகப் போமோ? போகிலும், கூடப் போமித்தனை’ என்பதனைத் தெரிவித்தபடி.
வான் ஏறே - தன் இனிமையை நித்திய சூரிகளை அனுபவிப்பித்து, அதனாலே வந்த மேன்மை தோன்ற இருக்குமாறு போன்று, இவரை அனுபவித்து மேன்மை தோன்ற இருக்கின்றபடி.
இனி எங்குப் போகின்றதே -‘உன்னால் அல்லது செல்லாதபடியான என்னை விட்டு உன்னை ஒழிய வாழ வல்லார் பக்கல் போகவோ? நித்தியசூரிகளை விடிலன்றோ என்னை விடலாவது?’ என்கிறார். ‘இவர் நம்மை விடிற்செய்வது என்?’ என்று இறைவனுக்கு உண்டான ஐயத்தைப் போக்குகிற இவ்விடத்தில், ‘நீ என்னை விட்டுப் போகாதே கொள்’ என்னும் இதற்குக் கருத்து என் என்னில், விலக்ஷண விஷயம் தானும் காற்கட்டி, எதிர்த்தலையையும் காற்கட்டப் பண்ணுமாயிற்று.
No comments :
Post a Comment