பாசுரம்:
மாறிமாறிப்பலபிறப்பும்பிறந் தடியையடைந்துள்ளந்தேறி
ஈறிலின்பத்திருவெள்ளம் யான்மூழ்கினன்,
பாறிப்பாறியசுர ர்தம்பல்குழாங்கள்நீறெழ, பாய்பறவையொன்
றேறிவீற்றிருந்தாய் உன்னை யென்னுள்நீக்கேலெந்தாய்
Audio Introduction:
English Translation (by Shri. P.S. Desikan):
Flocks of Asuras swarming, you riding a giant bird
sent fleeing astray but now I hold you fast my lord!
Born again and again, and thy feet at last attained
my mind remains distilled, as in that joy I get drowned!
பதம் பிரித்தது:
மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி
ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப் பாறி அசுரர் தம் பல் குழாங்கள் நீறு எழ பாய் பறவை ஒன்று
ஏறி வீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்
பொழிப்புரை:
அசுரர்களுடைய பல கூட்டங்கள் நிலை கெட்டு ஓடவும், அவ்விடத்தில் புழுதி எழவும், பகைவர்கள் மேல் பாய்கின்ற ஒப்பற்ற கருடப்பறவையின் மேல் ஏறி வீற்றிருந்தவனே! மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து திருவடிகளை அடைந்து அதனால் உள்ளம் தெளிந்து முடிவு இல்லாத இன்பமாகிய பெரிய வெள்ளத்திலே யான் மூழ்கினன்; இனி, எந்தாய்! உன்னை என்னுள் நீக்கேல்.
விளக்கம்:
1. ‘மாறிப் பிறந்து அடைந்து தேறி மூழ்கினன்’ எனவும்,
2. ‘பாறி எழ ஏறி வீற்றிருந்தாய்’ எனவும் கூட்டுக.
3. ‘மாறிமாறி, பாறிப்பாறி’ என்பன, அடுக்குத்தொடர்; மிகுதிப்பொருளைக் காட்ட வந்தன.
4. பாறி - பாற. வீற்றிருத்தல் - வேறொன்றற்கு இல்லாத பெருமையோடு தங்கியிருத்தல்;
5. வீறு - வேறொன்றற்கு இல்லாத பெருமை. நீக்கேல் - எதிர்மறை முற்று.
ஈடு விளக்கம்:
மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து - ‘சம்பந்தி சம்பந்திகளோடு உம்மை ஏற்றுக்கொள்ளுவதற்கு நீர் செய்தது என்?’ என்ன, கடலுக்குள்ளே கிடந்த ஒரு துரும்பு திரைமேல் திரையாகத் தள்ள வந்து கரையிலே சேருமாறு போன்று, மாறிமாறிப் பிறந்து வாராநிற்க, திருவடிகளிலே கிட்டிக்கொண்டு நிற்கக் கண்டேன் இத்தனை. “பாவங்களை அனுபவித்து மீளுதல், பிராயஸ்சித்தம் பண்ணி மீளுதல் செய்யக் காலம் இல்லை’ என்பார், ‘மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து’ என்கிறார்.
In the previous verse, Azhwar proclaimed salvation not only for him but all those having affinity to him. Therefore, we asks him what has he done to reach the Lord along with all his flock. To this, Azhwar says that all that he has done was letting himself to undergo repeated pangs of birth - with no time for him to mend his sins - only to reach the Lord's feet. This is akin to a small scrap, letting itself being hauled and pulled by waves in a sea, to ultimately reach the shore!
அடியை அடைந்து உள்ளம் தேறி - இதனால், ‘உள்ளம் தேறி அடியை அடைந்தவன் அல்லன்: அடியை அடைந்து உள்ளம் தேறினவன்’ என்கிறார். நெடுநாள் உள்ள விஷய வாசனையாலும் பகவானைப் பற்றாத காரணத்தாலும் உள்ள மனத்தின் மயக்கம் நீங்கித் தெளிந்து. தெளிந்த அளவே அன்றியே,
Azhwars says that, he became purified of mind upon reaching the feet of the Lord - after undergoing these repeated births! It is to be noted that he is not saying that he became purified of mind and then reached those feet!
ஈறு இல் இன்பத்து இருவெள்ளம் மூழ்கினன் யான் - முடிவில்லாமல் இருக்கின்ற பெரிய ஆனந்தக்கடலிலே மூழ்கினேன். ‘திருவடி, திருவனந்தாழ்வான் இவர்கள் குமிழி நீர் உண்கிற விஷயத்திலே அன்றோ யான் மூழ்கினேன்?’ என்பார் ‘யான் மூழ்கினேன்’ என்கிறார்.
Azhwar says that he attained the kind of pleasure which is enjoyed by celestials like Hanuman and Garuda - such a deep ocean (of pleasure) where water bubbles do not exist!
அசுரர்தம் பல் குழாங்கள் பாறிப் பாறி நீறு எழப் பாய்பறவை ஒன்று ஏறி வீற்றிருந்தாய் - ‘ஆயின், உம்முடைய விரோதிகள் செய்த காரியம் என்?’ என்ன, ‘அதற்குக் கடவாரைக் கேண்மின்’ என்கிறார் மேல்: அசுர வர்க்கத்தினுடைய பல வகைப்பட்ட குழாங்களானவை பாறிப்பாறி நீறு எழுந்து போகும்படியாகப் பகைவர்கள் மேலே பாயாநின்றுள்ள அத்விதீயமான பறவையை மேற்கொண்டு உன்னுடைய சிறப்பின் வேறுபாடு தோன்ற இருந்தவனே! பெரிய திருவடிக்கு அத்விதீயமாவது, இறைவன் கருத்து அறிந்து நடத்தலில் தலைவனாதல். இறைவன் பகைவர்களை அழித்தற்குப் பண்ணின செயல், பெரிய திருவடி திருத்தோளில் பேராதே இருந்தது இத்தனையே’ என்பார், ‘ஏறி வீற்றிருந்தாய்’ என்கிறார்.
When we ask Azhwar what happens to your adversaries, now that you have attained the lotus feet, he replies that the adversaries are now the concern of the Lord, who is seated on the Garuda and flies up and down to tear off the adversaries into pieces!!
உன்னை என்னுள் நீக்கேல் - ஸ்வாமியான நீ, இனி ஒரு காலமும் உன்னை என் பக்கல்நின்றும் பிரித்துக்கொண்டு போகாது ஒழிய
Never leave me!

No comments :
Post a Comment