பாசுரம்:
கண்ணித்தண்ணந்துழாய்முடிக் கமலத்தடம்பெருங் கண்ணனை, புகழ்
நண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன,
எண்ணில்சோர்விலந்தாதியாயிரத் துள்ளிவையுமோர்பத்திசையொடும்,
பண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே.
Audio Introduction:
English Translation (by Mr. P.S. Desikan):
Spake Kurukoor Catakopan of South also called Maran,
of that Lord , lotus-eyed with tulasi cool, He Kannan
in these ten of thousand verses set as a cascading span.
Whoever recites, shall be deemed as His acclaimed fan!
பதம் பிரித்தது:
கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணி தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே

பொழிப்புரை:
குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலையையுடைய திருமுடியினையும் தாமரை போன்ற விசாலமான பெரிய கண்களையுமுடைய இறைவனது நற்குணங்களிலே தாம் ஈடுபட்டு. அழகிய திருக்குருகூரில் அவதரித்த மாறனாகிய ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த எண்ணத்தில் தப்பாத அந்தாதியாக அமைந்த ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களையும் இசையோடும் பண்ணோடும் பாடுவதற்கு வல்லார் எவர்? அவர் கேசவன் தமர் ஆவர்.
விளக்கம்:
1. கண்ணனை - வேற்றுமை மயக்கம்.
2. ‘சடகோபன், மாறன்’ என்பன இரண்டும், ஆழ்வாருடைய திருப்பெயர்கள்.
3. ‘இசையொடும் பண்ணில்’ என்று அருளிச்செய்வதால் இசை வேறு, பண் வேறு என அறியலாம்.
இவ்விரண்டன் வேறுபாட்டினை வியாக்கியானத்திற் காண்க
இவ்விரண்டன் வேறுபாட்டினை வியாக்கியானத்திற் காண்க
ஈடு விளக்கம்:
கண்ணி தண் அம் துழாய் முடிக் கமலம் தடம் பெரும் கண்ணனை - இப்போதாயிற்று மாலை செவ்வி பெற்றதும், முடி நன்கு தரித்ததும், திருக்கண்கள் மலர்ச்சி பெற்றதும்.
(That Lord , lotus-eyed with tulasi cool - He - Kannan)
(That Lord , lotus-eyed with tulasi cool - He - Kannan)
புகழ் நண்ணி - இறைவன், தம் பக்கல் செய்த காதலாகிய குணத்திலே மூழ்கி. (Sung his praise keeping in mind all that He has done to Azhwar)
தென்குருகூர்ச் சடகோபன் மாறன் - ஒன்று திருப்பெயர்; ஒன்று பகைவர் கூட்டத்துக்கு யமனாக உள்ளவர் என்பதனைக் காட்ட வந்தது. (Satagopan is the name of the Azhwar and 'Maran' signifies that he is the nemesis to all adversaries)
எண்ணில் சோர்வு இல் (countless as a cascading span) அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து - இறைவன் தம் பக்கல் பண்ணின வியாமோகத்தின் மிகுதியை நினைத்து, அவற்றில் ஒன்றும் குறையாமல் அருளிச்செய்த ஆயிரத்தில் இப் பத்து.
இசையொடும் பண்ணில் பாட வல்லார்- இதில் ஆசையாலே இசையோடும் பண்ணோடும் பாட வல்லவர்கள். பண்ணாவது, கானம். இசையாவது, குருத்துவம் லகுத்துவம் முதலானவைகள் தம்மிலே நெகிழ்ந்து பொருந்துகை. ‘தொனியாலும் திறத்தாலும்’ என்றபடி (தொனி என்றது, பண். திறம் என்றது, இசை).
அவர் கேசவன் தமரே - அவர்கள் யாரேனுமாகவுமாம், குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் பயன் அற்றவைகள்; ‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ (விண்ணப்பஞ்செய்வார் - அரையர்) என்னுமாறு போன்று, இத்தன்மையாலே அவர்கள் பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள். (shall be deemed as His acclaimed fan)
No comments :
Post a Comment