Showing posts with label thiruvaymozhi. Show all posts
Showing posts with label thiruvaymozhi. Show all posts

4.1.6 வாழ்ந்தார்கள் - Life is like a bubble!

பாசுரம்:

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து,
ஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா,
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில்,
ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.

Audio Introduction:



Click here for an explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:
The Living lead a life like the bubbles in a torrent
Never stable - be assured - from the past till the present
Life isn't ever lasting - so if you desire eternity
Submit to the Lord, reclined in the deep sea ,with servility!

பதம் பிரித்தது:

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து
ஆழ்ந்தார்என்று அல்லால், அன்றுமுதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்என்பதுஇல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.

பொழிப்புரை:

வாழ்ந்திருந்தவர்கள் வாழ்ந்தது பெரிய மழை நீரிலே தோன்றுகிற குமிழி போன்று அழிந்து நரகத்திலே விழுந்து அழுந்தினார்கள் என்பதே; அது அல்லாமல், அன்று முதல் இன்று வரையிலும் வாழ்ந்தவர்கள் ஒரே தன்மையாக வாழ்ந்தே இருந்தார்கள் என்பது இல்லை; ஆதலால், நிலை பெற்ற பேற்றினைப் பெறவேண்டும் என்று இருந்தீர்களாகில், ஆழ்ந்து நிறைந்திருக்கின்ற கடலைப் படுக்கையாகவுடைய இறைவனுக்கு அடியவர் ஆகுங்கோள்

விளக்கம்:

1.  ‘வாழ்ந்தது மொக்குளின் மாய்ந்துமாய்ந்து ஆழ்ந்தார் என்பதே;
     அது அல்லால், வாழ்ந்தே நிற்பர் என்பது
2.  அன்று முதல் இன்று அறுதியா இல்லை ; ஆதலால், நிற்குறில், அண்ணல் அடியவர் ஆமின்,’ என்க.
3.  ‘நிற்குறில்’ என்பது, நிற்க உறில் என்பதன் விகாரம். (if you desire eternity)

2.5.11 கூறுதல் ஒன்று ஆரா - indescribable

கூறுதலொன்றாராக் குடக்கூத்தவம்மானை,
கூறுதலேமேவிக் குருகூர்ச்சடகோபன்,
கூறினவந்தாதி யோராயிரத்துளிப்பத்தும்,
கூறுதல்வல்லாருளரேல் கூடுவர்வைகுந்தமே.

Audio Introduction:



Translation (done by Late Mr. PS. Desikan):

Our Lord, indescribable and in an eternal play
of whom Kurukoor Cataopan had something to say
in a continuum of a thousand verses as an assay
and these ten of them leads one to His abode per se

பதம் பிரித்தது:

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே

Transliteration:

kooRuthalonRaaraak* kudakkooththa ammaanai,*
kooRuthalE mEvik* kurukoorchchadakOpan,*
kooRina andhaathi* OraayiraththuL ippaththum,*
kooRuthal vallaaruLarEl* kooduvar vaikundhamE.

பொழிப்புரை:

ஒரு குணத்தைச் சொல்லுதலும் முடியாத குடக் கூத்தாடின கண்ணபிரானைப்பற்றி சொல்லுவதில் ஆசை கொண்டு குருகூர்சடகோபன் கூறின அந்தாதி அந்தாதித் தொடையான ஆயிரம் பாசுரத்தினுள்ளே இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்கள் உண்டாகில்(அவர்) பரமபதம் சேரப்பெறுவர்

2.5.10 ஆணல்லன்பெண்ணல்லன் - Come, speak of Him

ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.

Audio Introduction:




Translation (done by Late Mr. PS. Desikan):

Neither a male, a female nor even a transgender,
None could see nor assert His being 'or never';
To seekers appears His form, but too could disappear
Great He is, our Lord, that what we could in short utter.

பதம் பிரித்தது:

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம்
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானைக் கூறுதலே

Transliteration:

aaNallan peNNallan* a_llaa aliyumallan,*
kaaNalumaakaan* uLaNnallan illaiyallan,*
pENungaalpENum* uruvaakum allanumaam,*
kONai perithudaiththu* empemmaanaikkooRuthalE.

பொழிப்புரை:

எம்பெருமானைப் பற்றிச் சொல்லுவதானது மிகவும் ப்ரயாஸமுடையதாயிருக்கிறது; (ஏனென்னில், அப்பெருமான்)ஆணுமல்லன், பெண்ணுமல்லன் இவ்விரண்டுமல்லாத நபும் ஸயனுமல்லன் கண்ணாற் பார்க்கவும் முடியாதவன் உள்ளவனல்லன் இல்லாதவனுமல்லன் (அடியார்) விரும்பின காலத்து அவர்கள் விரும்பின வடிவை யுடையவனாவன் அப்படியல்லாதவனாயுமிருப்பன் (ஆதலால் என்க)

2.5.9 சொல்லீர் - Come, speak of Him

சொல்லீரென்னம்மானை யென்னாவியாவிதனை,
எல்லையில்சீரென் கருமாணிக்கச்சுடரை,
நல்லவமுதம்பெற்றற்கரிய வீடுமாய்,
அல்லிமலர்விரையொத் தாணல்லன்பெண்ணல்லனே.

Audio Introduction: 



Translation (done by Late Mr. PS. Desikan):

Come, speak of Him, my Lord who is my soul
That darkish gem, a flame with no limiting goal
An ambrosia to all and a rare liberator He sole
neither male nor female, like a lily bud, us he stole!

பதம் பிரித்தது:

சொல்லீர் என் அம்மானை என் ஆவி ஆவிதனை
எல்லை இல் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய்
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே

Transliteration:

chollIr ennammaanai* ennaaviyaavithanai,*
ellaiyilsIr* en karumaaNikkachchudarai,*
nallavamutham* peRaRkariya vIdumaay,*
allimalar viraiyoththu* aaNallan peNNallanE.

பொழிப்புரை:

எனக்கு ஸ்வாமியாய் என் ஆத்மாவுக்கும் ஆத்மாவாயிருப்பவனாய் எல்லையற்ற குணங்களையுடைய எனது நீலரத்னம் போன்ற      வொளியுருவையுடையனான பெருமானை சொல்லுங்கள். நல்ல அம்ருதமர்ய் எளிதாகப் பெறுவதற்கு முடியாத மோக்ஷ நிலத்திற்கும் தலைவனாய் தாமரைப் பூவிலுள்ள பாரிமளம் போல் பரமபோக்யனாய் ஆணுருவ மல்லாதவனாய்ப் பெண்ணுருவமு மல்லாதவனாயிருக்கின்றனவன்.

2.5.8 பொன்முடியம் - The golden crowned

பொன்முடியம் போரேற்றை யெம்மானைநால்தடந்தோள்,
தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை,
என்முடிவுகாணாதே யென்னுள் கலந்தானை,
சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே.

Audio Introduction: 


Translation (done by Late Mr. PS. Desikan):

A roaring lion golden crowned, four shoulders each a like mound
eternally manifesting Himself with tulasi garland worn around
Merged He in me caring so little for my lowly background!
To describe Him how, I wonder, looking for words and sound!

பதம் பிரித்தது:

பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல்முடிவு காணேன் நான் சொல்லுவது என்? சொல்லீரே

Transliteration:

ponmudiyam pOrERRai* emmaanai _naalthadandhOL,*
thanmudi onRillaatha* than thuzaay maalaiyanai,*
enmudivu kaaNaathE* ennuL kalandhaanai,*
chol mudivu kaaNEn_naan* cholluvathu en _chollIrE.

பொழிப்புரை:

பொன் மயமான திருமுடியை யுடையனாய் அழகிய போரேறு போன்றவனாய் எனக்கு நாதனாய் நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனாய் தன் பெருமைக்கு முடிவு ஒன்றுமில்லாதவனாய் குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையவனாய் எனது தாழ்வைக் கணிசியாமல் என்னோடு கலவி செய்தவனுமான பெருமானை நான் சொல்லி முடிக்கும் வகையறிகின்றிலேன்! என்னவென்று சொல்லலாம்!நீங்களே சொல்லுங்கள்

2.5.7 பாம்பணைமேல் - Upon a coiled-cobra

பாம்பணைமேல்பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும்,
காம்பணைதோள்பின்னைக்கா எறுடனேழ்செற்றதுவும்,
தேம்பணையசோலை மராமரமேழெய்ததுவும்,
பூம்பிணையதண்துழாய்ப் பொன்முடியம் போரேறே

Audio Introduction: 



Translation (done by Late Mr. PS. Desikan):

Upon a coiled-cobra in the milky ocean though reclined
For the tender-shouldered Nappinnai seven oxen he killed
And then seven trees with copious flora he once felled
He adorning cool tulasi upon his crest like a bull wild!

பதம் பிரித்தது:

பாம்பு அணைமேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய் ஏறு உடன் ஏழ் செற்றதுவும்
தேம் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும்
பூம் பிணைய தண் துழாய்ப் பொன் முடி அம் போர் ஏறே

Transliteration:

paampaNaimEl paaRkadaluL* paLLi amarndhathuvum,*
kaampaNaithOL pinnaikkaa* ERudan EzcheRRathuvum,*
thEmpaNaiya chOlai* maraamaram Ezeythathuvum,*
poompiNaiya thaNdhuzaay* ponmudiyam pOrERE.

பொழிப்புரை:

திருப்பாற்கடலில் பாம்பாகிய படுக்கையின்மேல் அறிதுயில் பொருந்தியதும், மூங்கில் போன்ற தோள்களையுடைய நப்பின்னைப்பிராட்டிக்காக இடபங்கள் ஏழனையும் அழித்ததும், தேன் பொருந்திய கிளைகளையுடைய சோலையாகத் தழைத்த மராமரங்கள் ஏழனையும் ஓர் அம்பால் தொளை செய்ததும், அழகினையுடைய கட்டப்பட்ட குளிர்ந்த திருத்துழாயினை அணிந்த பொன்னாற்செய்யப்பட்ட திருமுடியினையுடைய, அழகிய போரைச் செய்கிற இடபமேயாம்

விளக்கம்:

அமரந்ததுவும், செற்றதுவும், எய்ததுவும் என்பன உகரம் கெடாது உடம்படுமெய் பெற்று வந்தன.

‘ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும்’, ‘தன்முக மாகத் தான்அழைப் பதுவே’ என்றார் நன்னூலார்.

‘காம்பு அணை’ என்பதின் ‘அணை’ உவமை உருபு. ‘ஏறு’ என்பது சொல்லால் அஃறிணையாதலின், ‘அமர்ந்தது’ என அஃறிணை முடிபு கொடுத்து ஓதினார்.

2.5.6 பல பலவே - Many Ornaments

பலபலவேயாபரணம் பேரும்பலபலவே,
பலபலவேசோதிவடிவு பண்பெண்ணில்,
பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்,
பலபலவேஞானமும் பாம்பணைமேலாற்கேயோ

Audio Introduction: 


Translation (done by Late Mr. PS. Desikan):

With many names and many ornaments to adorn
Many His attributes and in many ways truth - he informs!
To see, listen, smell and partake in His plural forms
How joyous Oh, He reclining over a coiled-cobra calm!

பதம் பிரித்தது:

பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம்
பலபலவே ஞானமும் பாம்பு அணை மேலாற்கேயோ

Transliteration:

palapalavE aaparaNam* pErum palapalavE,*
palapalavE chOthi* vadivu paNbu eNNil,*
palapala kandundu* kEttuRRumOndhinbam,*
palapalavE NYaanamum* paampaNaimElaaRkEyO.

பொழிப்புரை:

பாம்பணையின்மேல் அறிதுயில் செய்கின்ற இறைவனுடைய பண்புகளை எண்ணுமிடத்து, ஆபரணங்கள் பலபலவாம்; பேரும் பலபலவாம்; ஒளி உருவமான திருமேனியும் பலபலவாம்; கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து அனுபவிக்கிற இன்பங்களும் பல பலவாம்; ஞானமும் பலபலவாம்

விளக்கம்:

‘கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து’ என்பது உம்மைத் தொகை.

‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்’ என்றார் திருவள்ளுவர்.

‘உண்டு கேட்டு உற்று மோந்து பார்க்கும் ஐவர்’ என்றார் திவ்வியகவி.

‘பாம்பணை மேலாற்கு’ என்ற தொடர் மொழி, ஒரே காலத்தில் ஐம்பொறிகட்கும் ஒருசேர இன்பத்தை ஊட்ட வல்ல பரிகரத்தை உடையவன் இறைவன் என்ற கருத்தை உட்கொண்டு நிற்கிறது.

ஏகாரம். ஈற்றசை. ஓகாரம் - சிறப்புப் பொருளின் கண் வந்தது.

2.5.5 ஆரா அமுதமாய் - Ambrosia

ஆராவமுதமா யல்லாவியுள்கலந்த,
காரார்க்கருமுகில்போ லென்னம்மான்கண்ணனுக்கு,
நேராவாய்செம்பவளம் கண்பாதம்கைகமலம்,
பேராரநீண்முடிநாண் பின்னுமிழைபலவே.

Audio Introduction: 


Translation (done by Late Mr. PS. Desikan):

Kannan, my lord like dark clouds, His lips coral red
with eyes, feet and arms like a lotus flower-bud
His long tress bejeweled and waistline with a thread
Merged He in me as ambrosia, my soul fully filled.

பதம் பிரித்தது:

ஆரா அமுதமாய் அல் ஆவியுள் கலந்த
கார் ஆர் கருமுகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
நேரா வாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேர் ஆரம் நீள் முடி நாண் பின்னும் இழை பலவே

Transliteration:

aaraavamuthamaay* allaaviyuLkalandha,*
kaaraar karumukilpOl* ennammaan _kaNNanukku,*
nEraavaay sempavaLam* kaNpaatham kaikamalam,*
pEraara _nIL mudi_naaN* pinnum izaipalavE.

பொழிப்புரை:

உண்ணத் தெவிட்டாத அமுதமாய், ஒரு பொருளாக மதிஅத்தற்குத் தகுதி இல்லாத என்னுடைய உயிருள் கலந்த, கார் காலத்தில் எழுகின்ற கரியமேகம் போன்ற என் தலைவனாகிய கண்ணபிரானுடைய திருஅதரத்தினைச் செம்பவளம் ஒப்பாகமாட்டது; திருக்கண்கள் திருவடிகள் திருக்கரங்களாகிய இவற்றைத் தாமரை மலர்கள் ஒப்பாகமாட்டா; பெரிய ஆரமும் நீண்ட திருமுடியும் அரைநாணும் மற்றுமுள்ள ஆபரணங்களும் மேலும் பலபலவேயாய் இருக்கின்றன

விளக்கம்:

கார் கருமை; காலத்திற்கு ஆயிற்று; இருமடியாகு பெயர். கண்ணனுக்கு -ஆறாம் வேற்றுமையில் நான்காவது மயங்கிய மயக்கம். ‘நேரா’ என்னும் பன்மைப்பயனிலைக்கு, பவளம் கமலம்.

2.5.4 எப்பொருளும்தானாய் - Nectar Unsatiated

எப்பொருளும்தானாய் மரகதக்குன்றமொக்கும்,
அப்பொழுதைத்தாமரைப்பூக் கண்பாதம்கைகமலம்,
எப்பொழுதும்நாள்திங்க ளாண்டூழியூழிதொறும்,
அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே

Audio Introduction: 


Translation (done by Late Mr. PS. Desikan):

Resting omnipresent in me like a huge emerald hill
as just-bloomed lotus those eyes, hands and feet swell!
Days, months, years, why aeons after aeons as a jewel
time in and time out as nectar unsatiated, me, He thrills

பதம் பிரித்தது:

எப் பொருளும் தான் ஆய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப்பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே

Transliteration:

epporuLum thaanaay* marathakak kunRamokkum,*
appozuthaiththaamaraippook* kaNpaatham gaikamalam,*
eppozuthum _naaLthingaL* aandu ooziyoozithoRum,*
appozuthaik appozuthu* ennaaraavamuthamE.

பொழிப்புரை:

எத்துணைச் சிறிய நேரமும் நாளும் மாதமும் வருடமும் ஊழி ஊழிகள்தோறும் அவ்வக்காலங்களில் எனக்குத் தெவிட்டாத அமுதமாய் இருக்கின்ற இறைவன், எல்லாப் பொருள்களும் தனக்குள் அடங்கப் பெற்றவனாய் மரகதமலையினை ஒத்திருக்கிறான்; அவனுடைய திருக்கண்கள் அப்பொழுது மலர்ந்த தாமரைப்பூவினை ஒத்திருக்கின்றன; திருவடிகளும் அப்பொழுது மலர்ந்த தாமரைகள் ஆவனவாம்.

விளக்கம்:

ஆரா அமுதம் குன்றம் ஒக்கும்’ என்க. அமுதம் சொல்லால் அஃறிணையாதலின், ‘ஒக்கும்’ என்கிறார்.

2.5.3 என்னுள் கலந்தவன் - One who fused into me

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்,
மின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம்,
மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள,
தன்னுள்கலவாத்து தெப்பொருளும்தானிலையே

Audio Introduction: 




Translation (done by Late Mr. PS. Desikan):

Fused into me Himself like a shiny mount colossus
His lips, eyes, arms and feet gleaming as lotus
Holding the seven worlds in His stomach enormous
with nothing left anywhere undissolved in His campus

பதம் பிரித்தது:

என்னுள் கலந்தவன் செங்கனி வாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னும் முழு ஏழ் உலகும் வயிற்றின் உள
தன்னுள் கலவாதது எப் பொருளும் தான் இலையே

Transliteration:

ennuLkalandhavan* chenganivaaychengamalam,*
minnum chudar malaikku* kaNpaathamkaikamalam,*
mannumuzuvEz ulakum* vayiRRinuLa,*
thannuLkalavaathathu* epporuLumthaanilaiyE.

பொழிப்புரை:

‘என்னுள் வந்து கலந்தவனாகி மின்னுகின்ற ஒளி மயமான மலை போன்ற இறைவனுக்கு, சிவந்து கனிந்த திருவதரம் செந்தாமரையைப் போன்றதாகும்; திருக்கண்களும் திருவடிகளும் திருக்கைகளும் தாமரை மலர்களேயாம்; நிலைபெற்ற பதினான்கு உலகங்களும் திருவயிற்றிலே உள்ளன; ஆதலால், இறைவனாகிய தனக்குள் கலவா தனவாகிய எப்பொருள்களும் இல்லை

விளக்கம்:

உலகு -இடவாகுபெயர்.
மலை என்றது, உருவகம்.
மூன்றாம் அடியில் ‘வயிற்றின் உள’ என உடன்பாட்டாற்கூறிய அதனை நான்காமடியில் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என எதிர் மறை முகத்தால் அருளிச்செய்கிறார். ‘கலவாத அது எப்பொருளும்’ என்பது ஒருமையோடு பன்மை மயங்கி வந்தது.

2.5.1 அந்தாமத் தன்பு - Love on par with celestials

அந்தாமத் தன்புசெய்தென் னாவிசேர் அம்மானுக்கு,
அந்தாம வாழ்முடிசங் காழிநூ லாரமுள,
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்,
செந்தா மரையடிகள் செம்பொன் திருவுடம்பே.

Audio Introduction: 



Audio Explanation (Long):



Translation (done by Late Mr. PS. Desikan):

My lord, his love on par with celestials, to my soul unfolding
His flowery crown, conch, holy thread and wreath displaying
His roseate eyes like a floral pond and his ruddy lips gleaming
With His lotus-like feet there he's his golden frame glittering!

பதம் பிரித்தது:

அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு
அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள
செந்தாமரைத்தடம் கண் செங்கனி வாய் செங்கமலம்
செந்தாமரை அடிகள் செம்பொன் திரு உடம்பே

Transliteration:

andhaamaththu anpuseythu* ennaavisEr ammaanukku,*
anthaamavaazmudisa_NGku* aazi_nool aaramuLa,*
sendhaamaraith thadamkaN* seNGkanivaay seNGkamalam,*
sendhaamaraiyadikkaL* sempon_ thiruvudampE.

பொழிப்புரை:

என் ஆத்மாவிலே பரமபதத்ததிற் பண்ணும் விருப்பத்தைப்பண்ணி வந்து பொருந்தின அம்மானுக்கு அழகிய மாலையை யணிந்த ஒறியுள்ள திருவபிஷேகமும் சங்கு சக்கரங்களும் பூணூலும் ஹாரமும் உள்ளன; திருக்கண்கள் செந்தாமரைத் தடதகமபோன்றுள் சிவந்து கனிந்த திருவதரம் செந்காமரையாகவே யிரா நின்றது; திருவடிகளும் செந்தாமரை மலராகவே திருமேனி செம்பொன்னாயிராநின்றது.

2.4.11 வாட்டம் இல் புகழ் - Bliss Unseen

வாட்ட மில்புகழ் வாமனனை,இசை
கூட்டி வண்சட கோபன்சொல்,அமை
பாட்டோ ராயிரத் திப்பத்தால், அடி
சூட்ட லாகுமூமந் தாமமே

Audio Introduction:


Translation: (done by Late Mr. PS. Desikan)

Of that dwarfy Lord with impeccable lien
sang Catakopan in a melodious vien
in thousand verses of which ten you've seen
which placing at his feet begets a bliss unseen

பதம் பிரித்தது:

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப் பத்தால் அடி
சூட்டலாகும் அம் தாமமே

Transliteration:

vaattamilpugaz* vaamananai,* isai
kootti* vaNsadakOpan sol,* amai
paattu* Oraayiraththu ip paththaal,* adi
sUttalaakum* andhaamamE.

பொழிப்புரை:

வாட்டமற்ற புகழுடையனான வாமனனைக்குறித்து உதாரரான ஆழ்வார் இசையோடே சேர்த்து அருளிச்செய்த இலக்கணமமைந்த ஓராயிரம் பாசுரங்களுள் இப்பதிகத்தினால் (அந்த வாமனமூர்த்தியின்) திருவடிகளில் அழகிய புஷ்பங்களை ஸமாப்பிக்கும் படியான பேறு உண்டாகும்.

2.4.10 ஏழை பேதை - Innocent girl

ஏழை பேதை யிராப்பகல், தன
கேழிலொண் கண்ணநீர் கொண்டாள்,கிளர்
வாழ்வைவேவ இலங்கைசெற் றீர்,இவள்
மாழைநோக் கொன்றும் வாட்டேன் மினே.

Audio Introduction: 



Translation: (done by Late Mr. PS. Desikan)
Innocent she, night after day in anguish
Her impeccable eyes tears flow and tarnish,
Lord, affluent Lanka thou once vanquished;
Now let not her sweet fawn-like look vanish.

பதம் பிரித்தது:

ஏழை பேதை இராப்பகல் தன
கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே

Transliteration:

EzaipEthai* iraappakal,* thana
kEzil oN* kaNNa_nIr kondaaL,* kiLar
vaazvaivEva* ilangai cheRRIr,* ivaL
maazai_nOkku onRum* vaattEnminE.

பொழிப்புரை:

விஞ்சின (கிளர்) (இராவணனது) செல்வம் நீறாகும்படி லங்காபுரியை அழித்தவரே! எழையும் பேதையுமான இவள் இரவும் பகலும் தன்னுடைய ஒப்பற்ற நீரைக்கொண்டாள் (ஒண் கொண்டாள்); இவளுடைய இளநோக்கு ஒன்றையுமாவது (மாழை நோக்கு) வாடச்செய்யாமல் தளிர்ப்பிக்க வேணும்.

2.4.9 பட்ட போது எழு - Oblivious to dawns and dusks

பட்ட போதெழு போதறியாள்,'விரை
மட்டலர் தண்டுழாய்' என்னும்,சுடர்
வட்ட வாய்நுதி நேமியீர்,நும
திட்ட மென்கொலிவ் வேழைக்கே?

Audio Introduction: 


Translation: (done by Late Mr. PS. Desikan)

Oblivious to dawns and dusks she remains,
Remembers only thy cool tulasi that shines.
Reveal thy attitude 'wards poor she who pines
O Lord, thee holding a discus with sharply spines

பதம் பிரித்தது:

பட்ட போது எழு போது அறியாள் விரை
மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நுமது
இட்டம் என்கொல் இவ் ஏழைக்கே?

Transliteration:

pattapOthu* ezu pOthaRiyaaL,* virai
mattalar* _thaNdhuzaa yennum,* sudar
vattavaay* _nuthi nEmiyIr,* numathu
ittam en_kol* ivvEzaikkE.

பொழிப்புரை: 

ஒளி பொருந்திய வட்டமான வாயையும் கூர்மையையுமுடைய திருவாழியையுடையவரே! (பெண்பிள்ளை) ஸூர்யாஸ்தமன காலத்தையும் ஸூர்யோதய காலத்தையும் அறிகின்றாளில்லை; பாரிமளமும் தேனும் பரவின குளிர்ந்த திருத்துழாய் என்று வாய்வெருவுகின்றாள்; இப்படிப்பட்ட ஏழையின் திறத்திலே உம்முடைய இஷ்டம் என்ன? (நீர்என்ன செய்ய நினைத்திருக்கிறீர்!)

2.4.8 வஞ்சனே - You cheat!

'வஞ்சனே!' என்னும் கைதொழும்,தன்
நெஞ்சம்வே வநெடி துயிர்க்கும்,விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர்,உம்மைத்
தஞ்சமென் றிவள்பட் டனவே.

Audio Introduction: 



Translation: (done by Late Mr. PS. Desikan)

'You cheat!' thus admonishing though, she prays.
Heart throbbing she sighs, her soul in dismay
'You debunked that Kamsan' she reminds to say.
Oh enough! in total surrender at you she lays.

பதம் பிரித்தது:

வஞ்சனே என்னும் கைதொழும் தன
நெஞ்சம் வேவ நெடிது உயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே

Transliteration:

vanchanE ennum* kaithozum,* thana
nenchamvEva* nedithuyirkkum,* viRal
kanchanai* vanchanai cheythIr,* ummaith
thanchamenRu* ivaL pattanavE.
பொழிப்புரை: 



எனக்குத் தெரியாமலே என்னை அடிமைப்படுத்திக் கொண்டவனே ! என்கிறாள்; (அந்த நன்றிக்குத் தோற்றுக்) கைகூப்புகின்றாள் தனது நெஞ்சு வேகும்படியாக பெருமூச்செறிகின்றாள்; மிடுக்கனான கம்ஸனை கொன்றொழித்த பெருமானே! உம்மை புகலாகப்பற்றி இவள் பட்டபாடு என்னே!

2.4.6 தகவுடை யவனே! - O my merciful Lord!

'தகவுடை யவனே!' என்னும்,பின்னும்
'மிகவிரும் பும்பிரான்!' என்னும், 'என
தகவுயிர்க் கமுதே!' என்னும்,உள்ளம்
உகவு ரகிநின் றுள்ளுளே.

Audio Introduction: 


Translation: (done by Late Mr. PS. Desikan)

'O my merciful Lord!' she would whimper
'My darling thou art!' she would blubber
'Like ambrosia in my inner soul' she murmurs
As her heart melts deep within with fervour.

பதம் பிரித்தது:

தகவு உடையவனே என்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் எனது
அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உக உருகிநின்று உள் உளே

Transliteration:

thakavudaiyavanE ennum,* pinnum
mikavirumpum* piraaNn ennum,* enathu
akavuyirkku* amuthE ennum,* uLLam
ukavuruki* ninRu uLLuLE.

பொழிப்புரை:

தன் நெஞ்சு அழியுமாறு (உக)  நீர்ப்பண்டமாகி (உருகி)  தன்னில் தான் நின்று (உள்ளுள்ளே நின்று)  தயவு குறைவற்றவனே! (தகவு உடையவனே) என்கிறாள். மேலும் மிகவும் குதுர்ஹலங் கொள்ளா நின்றாள்; உபகாரனே! (பிரான்) என்று சொல்லுகின்றாள்; ‘எனது உள்ளுயிர்க்கு அம்ருதமே!’ (எனது அகம் உயிர்க்கு அமுதே) என்கின்றாள் 

2.4.5 இவளிராப் பகல் - Is so cruel thy heart?

இவளிராப் பகல்வாய் வெரீஇ,தன
குவளையண் கண்ணநீர் கொண்டாள்,வண்டு
திவளும்தண் ணந்துழாய் கொடீர்,என
தவள வண்ணர் தகவுகளே.

Audio Introduction:


Translation: (done by Late Mr. PS. Desikan)

Night after day ever her mouth blabbers
her lily-like eyes flooding with profuse tears.
That cool tulasi wreath where honey-bees hover
to deny her, is so cruel thy heart I do wonder!

பதம் பிரித்தது:

இவள் இராப்பகல் வாய்வெரீ இத் தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண் அம் துழாய் கொடீர் என
தவள வண்ணர் தகவுகளே?

Transliteration:

ivaL iraappakal* vaayverIi,* thana
kuvaLaiyoN* kaNNa_nIr kondaaL,* vandu
thivaLum* thaNNan^ thuzaaykodIr,* ena
thavaLavaNNar* thakavugaLE.

பொழிப்புரை: 

இப் பெண்பிள்ளை இரவும் பகலும் வாய்பிதற்றி தன்னுடைய நெய்தல் மலர்போன்றழகிய கண்களில் நீரையுடையளானாள்; வண்டுகள் படிகின்ற குளிர்ந்தழகிய தருத் துழாய் மாலையை தருகின்றீரில்லை; பாரிசுத்தாத்மாவான தேவரீருடைய கிருபைமுதலிய குணங்கள் என்னே!

2.4.4 இலங்கை செற்றவனே - Conquerer of Lanka

'இலங்கைசெற் றவனே!' என்னும்,பின்னும்
'வலங்கொள் புள்ளுயர்த்தாய்!' என்னும்,உள்ளம்
மலங்கவெவ் வுயிர்க்கும், கண்ணீர்மிகக்
கலங்கிக் கைதொழும் நின்றிவளே.

(வஞ்சி விருத்தம்)

Audio Introduction:


Translation: (done by Late Mr. PS. Desikan)

'Oh conquerer of Lanka!' thus she wails
'Raise thy pennon carrying divine bird' she hails!
Her hot breath fuming as her mind fails
stands she baffled with folded hands nailed.

பதம் பிரித்தது:

இலங்கை செற்றவனே என்னும் பின்னும்
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ் உயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கைதொழும் நின்று இவளே

Transliteration:

ilangaiseRRavanE ennum,* pinnum
valangoL* puLLuyarththaay ennum,* uLLam
malanga* vevvuyirkkum,* kaNNIrmikak
kalangik* kaithozum ninRu ivaLE.

பொழிப்புரை:

இப்பராங்குசநாயகி. (என்னோடொத்த ஒருத்திக்காக) லங்காபுரியை யழித்தவனே! என்கிறாள் அதற்குமேலும் வலிமைமிக்க கருடனைக் கொடியாகக் கொண்டவனே! என்கிறாள். மனம் சுழலும்படி உஷ்ணமாக மூச்சுவிடுகின்றாள்; கண்ணீரானது அதிகமானவாறே (அதனால்) அறிவுகலங்கப் பெற்று ஸ்தம்பித்து நின்று அஞ்ஜலிபண்ணா நின்றாள்

2.4.3 இரக்க மனத்தோடு - Languishing like melting wax

இரக்க மனத்தோ டெரியணை,
அரக்கு மெழுகுமொக் குமிவள்,
இரக்க மெழீரிதற் கென்செய்கேன்,
அரக்க னிலங்கைசெற் றீருக்கே.

(வஞ்சி விருத்தம்)

Audio Introduction:


Translation: (done by Late Mr. PS. Desikan)

What is the way out to fetch for her thy mercy,
thou who vanquished Lanka's Arakkan and his frenzy
as she languishes like a melting wax, oh, pity,
in a miserable state ever with the thought of thee?

பதம் பிரித்தது:

இரக்க மனத்தோடு எரி அணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே?

Transliteration:

irakka manaththOdu* eriyaNai,*
arakkum mezukum* okkumivaL,*
irakkamezIr* ithaRku en_seykEn,*
arakkanilangai* seRRIrukkE.

பொழிப்புரை:

நெகிழ்ச்சியையுடைய நெஞ்சோடு (கூடிய) இப்பெண்பிள்ளை நெருப்போடு ஸம்பந்தப்பட்ட (வன்மையான) அரக்கையும் மெழுகையும் ஒத்திருக்கின்றாள்; (இவள் திறத்து) இரக்கம் உண்டாகப் பெறுகின்றிலீர்; இராவணனுடைய லங்காபுரியை (ஒரு பிராட்டிக்காக) த்வம்ஸம் செய்தருளின உமக்கு இவள் திறத்திலுண்டான உபேக்ஷைக்கு என்ன பாரிஹாரம் பண்ணுவேன்?

2.4.2 வாள் நுதல் இம்மடவரல் - Daughter pines for Krishna

வாணுதலிம் மடவரல் உம்மைக்
காணுமாசையுள் நைகின் றாள்விரல்
வாணனாயிரந் தோள்துணித் தீர்உம்மைக்
காணநீ ரிரக்க மிலீரே

(வஞ்சி விருத்தம்)

Audio Introduction:


Translation: (done by Late Mr. PS. Desikan)

Pines she, this one with brows bright like a lune
itching to have a glimpse of thee Lord of renown
nipper of thousand shoulders of VaaNan - a demon!
Pity - won't thee, 'wards this poor languishing woman?

பதம் பிரித்தது:

வாள் நுதல் இம் மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கம் இலீரே (2)

பொழிப்புரை:

ஒளிமிக்க நெற்றியையுடைய (பராங்குசநாயகி யென்னும்) இம்மடத்தை (அழகிற்சிறந்த) உம்மை காணவேணுமென்ற ஆசையிலரகப்பட்டு சிதிலையாகின்றாள்; வலிமையையுடைய பாணாஸசரனுடைய ஆயிரம் புஜங்களையும் அறுத்தொழித்தவரே! (இவன்) உம்மைக்காணுமாறு நீர்தயை செய்யாமலிருக்கின்றீர்.

Transliteration:

vaaNuthal immadavaral, ummaik
kaaNum aasaiyuL naikinRaaL, viRal
vaaNan aayirandhOLthuNiththIr, ummaik
kaaNa nIr irakkamilIrE.