4.1.6 வாழ்ந்தார்கள் - Life is like a bubble!

பாசுரம்:

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து,
ஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா,
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில்,
ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.

Audio Introduction:



Click here for an explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:
The Living lead a life like the bubbles in a torrent
Never stable - be assured - from the past till the present
Life isn't ever lasting - so if you desire eternity
Submit to the Lord, reclined in the deep sea ,with servility!

பதம் பிரித்தது:

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து
ஆழ்ந்தார்என்று அல்லால், அன்றுமுதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்என்பதுஇல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.

பொழிப்புரை:

வாழ்ந்திருந்தவர்கள் வாழ்ந்தது பெரிய மழை நீரிலே தோன்றுகிற குமிழி போன்று அழிந்து நரகத்திலே விழுந்து அழுந்தினார்கள் என்பதே; அது அல்லாமல், அன்று முதல் இன்று வரையிலும் வாழ்ந்தவர்கள் ஒரே தன்மையாக வாழ்ந்தே இருந்தார்கள் என்பது இல்லை; ஆதலால், நிலை பெற்ற பேற்றினைப் பெறவேண்டும் என்று இருந்தீர்களாகில், ஆழ்ந்து நிறைந்திருக்கின்ற கடலைப் படுக்கையாகவுடைய இறைவனுக்கு அடியவர் ஆகுங்கோள்

விளக்கம்:

1.  ‘வாழ்ந்தது மொக்குளின் மாய்ந்துமாய்ந்து ஆழ்ந்தார் என்பதே;
     அது அல்லால், வாழ்ந்தே நிற்பர் என்பது
2.  அன்று முதல் இன்று அறுதியா இல்லை ; ஆதலால், நிற்குறில், அண்ணல் அடியவர் ஆமின்,’ என்க.
3.  ‘நிற்குறில்’ என்பது, நிற்க உறில் என்பதன் விகாரம். (if you desire eternity)

No comments :

Post a Comment