4.1.5 பணிமின் - From Soft Mattress to Loin Cloth

பாசுரம்:

பணிமின் திருவருள் என்னும்அஞ் சீதப் பைம்பூம்பள்ளி,
அணிமென் குழலார் இன்பக்கலவி அமுதுண்டார்,
துணிமுன்பு நாலப்பல் லேழையர் தாமிழிப் பச்செல்வர்,
மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ.

Audio Introduction:



Click here to listen to a explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan

Translation:

They once ate the nectar of love with dames of tender coiffure
Upon cool soft mattresses uttering "Render me a favour!"
Alas, they are now object of ridicule with barely a loin cloth as cover!!
So conduct thy life chanting the names of our Gem  Sparkling Conjurer.


பதம் பிரித்தது:

"பணிமின், திருவருள்"என்று அம் சீதப் பைம் பூம் பள்ளி,
அணி மென் குழலார் இன்பக்கலவி அமுது உண்டார்,
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்,
மணி மின்னும் மேனி நம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ.

பொழிப்புரை:

"திருவருள் புரிதல் வேண்டும்" என்று கூறுகின்ற அழகிய மிருதுவான கூந்தலையுடைய பெண்களோடு அழகிய குளிர்ந்த பரந்த பூக்களாலான படுக்கையிலே சேர்க்கையால் உண்டான இன்பமாகிய அமுதை உண்டவர்கள், அந்நிலை கெட்டு, துணி முன்னே தொங்கவும் பெண்டிர் பலர் இழித்துக் கூறவும் செல்லுவார்கள்; ஆதலால், நீலமணி போன்று பிரகாசிக்கின்ற திருமேனியையுடைய நம் மாயவனது திருநாமத்தைச் சொல்லி வாழுங்கோள்

விளக்கம்:

1. ‘என்னும் குழலாரோடு பூம்பள்ளியிலே இன்ப அமுது உண்டார்’ என்க.
2.  உண்டார் - பெயர்.
3.  ‘உண்டார் செல்வர்’ என முடிக்க.
4.  ‘நால இழிப்பச் செல்வர்’ என்க. (go around wearing nothing but loin-cloth)
5.  செல்வர் - முற்று.
6. இப்பாசுரத்திற்குப் பட்டர் அருளிச்செய்யும் வியாக்கியானம் இன்பச் சுவையிலே தோய்ந்தது; நவில்தொறும் இன்பம் பயப்பது. ‘அம் சீதம் பைம்பூம்பள்ளியிலே கிடக்கும் அணி மென்குழலாரைப் பார்த்துத் ‘திருவருள் பணிமின்’ என்னும்  இன்ப அமுது உண்டார்’

No comments :

Post a Comment