Showing posts with label Thiruvaymozhi. Show all posts
Showing posts with label Thiruvaymozhi. Show all posts

4.1.10 குறுக மிக - Even Saints need Him

பாசுரம்:

குறுக மிகவுணர் வத்தொடு நோக்கியெல் லாம்விட்ட,
இறுக லிறப்பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லையேல்,
சிறுக நினைவதோர் பாசமுண்டாம்பின்னும் வீடில்லை,
மறுபகலில் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே

(கலி நிலைத்துறை)

Audio Introduction:


Click -> here <- for an explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

Nonchalant and with vision towards his élan vital
the Saint has become a mortal.
Yet without Him, he's caught in the confines of his soul,
So, hold on to the eternal Lord's feet for that Paradise Real.


பதம் பிரித்தது:

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம்விட்ட,
இறுகல் இறப்பென்னும் ஞானிக்கும் அப்பயனில்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடில்லை,
மறுபகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே.

பொழிப்புரை:

(மனமானது) தன்னைச் சார (தன் வசப்பட்ட அம்மனத்தினை) ஞான சொரூபமாக உள்ள ஆத்துமாவோடு சேர்த்து நன்றாகப் பார்த்து எல்லாப்பற்றுகளையும் அடியோடே விட்ட, குறுகிய ஆத்தும அனுபவத்தையே மோக்ஷமாக நினைத்திருக்கும் ஞானிகளுக்கும் பகவானை உபாயமாகப் பற்றுதல் இல்லையாகில் சிறிய பேறுகளை நினைப்பதற்குக் காரணமான ஒரு பற்று உண்டாகும்; அதற்குமேல், அம்மோக்ஷமும் இல்லை; ஆன பின் ஒரு விதக் குற்றமும் இல்லாத இறைவனை அடைந்து அகலாதொழிவானேயானால், அதுவே பரமபுருஷார்த்தமான மோக்ஷமாகும். ஆதலால், மேற்பாசுரத்தில் கூறிய ‘அண்ணல் கழல்கள் குறுகுமினோ’ என்ற அதுவே மோக்ஷமாகும்

விளக்கம்:

1.  ‘குறுக நோக்கி விட்ட ஞானி’ என்க.
2.  உணர்வு - ஞானம்; ஆத்துமா.
3.  இறுகல் - இறுகப்பிடித்தல்.
4.  இறப்பு - மோக்ஷம்.
5.  பாசம் - பற்று.
6.  மறுகல் - குற்றம்.
7.  ‘பற்றி விடாவிடில் பின்னும் வீடு இல்லை’ எனக் கூட்டுக.
8.  இங்கே, ‘வீடு’ என்றது, கைவல்யத்தை.
9.  ‘அஃதே வீடு’ என மாறுக.

4.1.9 படிமன்னு - No permanent heaven without Him

பாசுரம்:

படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார்,
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை,
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ.

Audio Introduction:



Click -> here <- for an explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

Devoid of desire for Ornaments with the senses subdued
Cycle of Rebirth is Conquered  - Yet not being His favoured,
though attaining heaven is attained - staying there isn't endured 
Ergo, reach for the Garuda-banner adorned Lord

பதம் பிரித்தது:

படிமன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து, ஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனைஇல்லார்
குடிமன்னும் இன்சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வுஇல்லை;
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ

பொழிப்புரை:

பூமியையும் பொருந்திய பல ஆபரணங்களையும் அவற்றிலுள்ள வாசனையோடு நீக்கி, ஐந்து இந்திரியங்களையும் வென்று, தூறு மண்டும்படி இச்சரீரத்தை ஒறுத்துத் தவம் செய்தவர்களும், அவ்விஷயத்தில் அவனுடைய திருவருள் இல்லாதவர்கள் குடிகள் பொருந்தி இருக்கின்ற இனிமையையுடைய சுவர்க்கலோகத்தை அடையினும் மீண்டு வருவார்கள்; ஆதலால், நிலைபெற்ற கொடியிலே கருடப்பறவையையுடைய சர்வேசுவரனுடைய திருவடிகளைச் சேருங்கோள்; சேர்ந்தால், மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய உலகத்தைப் பெறலாம்.

விளக்கம்:

1.  ‘அறுத்து வென்று செற்றார்களும் அவனை இல்லார் எய்தியும் மீள்வர்கள்,’ என்க. 
2.  ‘அண்ணல் கழல்கள் குறுகுமின்; மீள்வு இல்லை,’ எனக் கூட்டுக.
3.  படி - பூமி. 
4.  மன்னு பல்கலன் - முறையாக வந்த பல வகைப்பட்ட ஆபரணங்களின் கூட்டம்

4.1.8 குணங்கொள் - No Permnent bliss without him

பாசுரம்:

குணங்கொள் நிறைபுகழ் மன்னர்க் கொடைக்கடன் பூண்டிருந்து,
இணங்கி யுலகுட னாக்கிலும் ஆங்கவ னையில்லார்,
மணங்கொண்ட போகத்து மன்னியு மீள்வர்கள் மீள்வில்லை,
பணங்கொள் அரவணை யான்திரு நாமம் படிமினோ.

Audio Introduction:


Click -> here <- for an explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

Virtuous, famed and altruist by inherent demeanour
Compatible with Everyone - yet without Him in his favour
Fragrant bliss will engulf them only to expire.
Learn the names of the serpent-couch Lord, for bliss of no-expire!


பதம் பிரித்தது:

குணங்கொள் நிறைபுகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகுடன் ஆக்கிலும்,ஆங்கு அவனைஇல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வுஇல்லை;
பணங்கொள் அரவணையான் திருநாமம் படிமினோ.

பொழிப்புரை:

நல்ல குணங்கள் பொருந்திய நிறைந்த புகழையுடைய மன்னர்கள் தர்மம் செய்தலாகிய கடமையை மேற்கொண்டு உலகத்தாரோடு பொருந்தி இருந்து உலகத்தை எல்லாம் தமக்கே உரியதாகச் செய்து அரசாண்டாலும், அந்த அரசச் செல்வமானது இறைவன் திருவருளால் வந்தது என்று நினையாதவர்கள், செவ்வையையுடைத்தான இன்பத்திலே நிலைபெற்று இருப்பவர்களாயினும், அந்த இன்பத்தினின்றும் நீங்குவார்கள்; ஆதலால், படத்தைக்கொண்ட பாம்பினைப் படுக்கையாகவுடைய இறைவனது திருநாமத்தைப் படியுங்கோள் ; அங்ஙனம் கூறினால், பின்னர் மீண்டு வருதல் இல்லை ; அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டினை அடையலாம்

விளக்கம்:

1.  ‘மன்னர் கொடைக்கடன் பூண்டு இணங்கி இருந்து உலகு ஆக்கிலும்’ எனக் கூட்டுக.
2.  ‘திருநாமம் படிமின் ; மீள்வில்லை,’ என்க.
3.  படித்தல் - கற்றல். ஆனால்,
4.  ‘திருநாமம் படிமின் - கல்யாண குணங்களாகிய கடலில் மூழ்குங்கோள்’ என்னலுமாம்.
     ‘நற்குணக்கடல் ஆடுதல் நன்றரோ,’ என்றார் கம்பநாட்டாழ்வார்.

4.1.7 ஆமின் சுவை - From abundance to morsels

பாசுரம்:
ஆமின் சுவையவை ஆறொடடிசிலுண் டார்ந்தபின்,
தூமென் மொழிமட வாரிரக்கப்பின்னும் துற்றுவார்,
ஈமின் எமக்கொரு துற் றென்றிடறுவ ராதலின்,
கோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே.

Audio Introduction:


Click here to listen to an explanation of the pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

After flavorous abundant meal having been consumed
when courtly dames insist - yet more was crammed.
Ah! "Provide me a morsel" - says he now - against doors slammed.
So, portray the glories of our Primal Lord who is Basil Domed.

பதம் பிரித்தது:

ஆமின் சுவைஅவை ஆறோடு அடிசில்உண்டு ஆர்ந்தபின்
தூமென் மொழிமட வார்இரக் கப்பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.

பொழிப்புரை:

பொருந்திய இனிய அந்த அறுசுவையோடு கூடின உணவை உண்டு வயிறு நிறைந்த பின், தூய்மை பொருந்திய மெல்லிய சொற்களைப் பேசுகின்ற பெண்கள் இரந்து கூறப் பின்னரும் உண்பார்கள் ; அவ்வாறு உண்டவர்கள், அந்நிலை கெட்டு, ‘எமக்கு ஒரு பிடி அன்னம் கொடுமின்,’ என்று தட்டித் திரிவார்கள் ; ஆதலின், திருத்துழாய் மாலையைத் தரித்த திருமுடியையுடைய ஆதி அம் சோதியான இறைவனுடைய கல்யாண குணங்களை அனுபவிக்கப் பாருங்கோள்

விளக்கம்:

1.   ‘ஆம் இன் அவை ஆறு சுவையோடு அடிசில் உண்டு’ எனப் பிரித்துக்கூட்டுக.
2.   தூ - பரிசுத்தம்.
3.   துற்றல் - உண்டல்.
4.   துற்றுவர் - பெயர்.
5.   ‘துற்றுவர் இடறுவர்’ என முடிக்க.
6.   இடறுவர் - முற்று (knocks the doors).
7.   கோமின் - தொகுத்துச் சொல்லுமின்.
8.   ‘குணங்கள் கோமின்’ என மாறுக.

3.4.1 புகழு நல் ஒருவனென்கோ - Kannan and the five elements

பாசுரம்:

புகழுநல் லொருவ னென்கோ - பொருவில்சீர்ப் பூமி யென்கோ
திகழுந்தண் பரவை யென்கோ - தீயென்கோ வாயு வென்கோ
நிகழுமா காச மென்கோ - நீள்சுட ரிரண்டு மென்கோ
இகழ்விலிவ் வனைத்து மென்கோ - கண்ணனைக் கூவுமாறே!

குரல்  ஒலி:



Translation:

The Famed One - Do I declare! The Blemishless earth - Do I assert!!
The Cool Wide Ocean - Do I testify! The fire or the Wind - Do I state!!
All Containing Space - Do I stress! The Twin Bright Lights - Do I vouch!!
All these and the rest - Do I call! How do I address my Krishna - as such?

Audio:




பதம் பிரித்தது:

புகழுநல் ஒருவன் என்கோ - பொருவில் சீர்ப் பூமி என்கோ
திகழும் தண் பரவை என்கோ - தீ என்கோ வாயு என்கோ
நிகழும்  ஆகாசம் என்கோ - நீள்சுடர் இரண்டும் என்கோ
இகழ்வில் இவ் அனைத்தும் என்கோ - கண்ணனைக் கூவுமாறே!

பொழிப்புரை:

(உலகத்து எல்லாப் பொருள்களையும் தனக்குச் சரீரமாகவுடைய) எம்பெருமானை வேதங்கள் இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றால்) புகழ்ந்து கூறப்பெற்ற விலக்ஷணமான குணங்கள் முதலியவற்றையுடைய ஒப்பற்றவன் என்று சொல்வேனோ? ஒப்பில்லாத சிறப்புக்களையுடைய பூமியென்று சொல்வேனோ?விளங்குகிற நீர்நிலையென்று சொல்வேனோ?அக்கினியென்பேனோ? காற்று என்பேனோ? எங்குமுள்ளதான ஆகாசமென்பேனோ? (ஸூர்யன் சந்திரன்) என்ற இரண்டு சுடர்களுமென்பேனோ? இகழப்படுதலில்லாத (வேண்டும் பொருள்களாகக் கைக் கொள்ளுதற்கு உரிய) இவையெல்லாப் பொருள்களுமென்பேனோ? (எம்பெருமானைச்) சொல்லியழைக்கும் விதம் (என்னே) (யான் இன்னதென்று உணறேன் என்றபடி.)

Transliteration:

pugazhu nalloruvanenkO poruvil sIr bhUmi enkO
thigazhumthaN paravaiyenkO - theeyenkO vAyuvenkO
nigazhumAkAsamenkO - nILsudari reNdumenkO
igazhvillanaiththumenkO - kaNNanaikkUvumARE!

2.3.05 இனி யார் ஞானங்களால்

பாசுரம்:

இனியார் ஞானங்களா லெடுக்க லெழாதவெந்தாய்
கனிவார் வீட்டின்பமே! யென்கடற் படாவமுதே
தனியேன் வாழ்முதலே! பொழிலேழு மேனமொன்றாய்
நுனியார்க் கோட்டில்வைத்தா யுன்பாதம் சேர்ந்தேனே

குரல்  ஒலி :

Translation:

Intellect can't fathom thou, devoid of devotion!
To the  pious - nectar -pure and chaste - in delectation!
Bedrock of this hermit! As a Boar thy bore
The cosmos Upon Thy tusk - O! To Thy feet, I restore!

Audio:

பதம் பிரித்தது:

இனியார் ஞானங்களால் எடுக்கல்எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என்கடற்படா அமுதே!
தனியேன் வாழ்முதலே!! பொழில்ஏழும் ஏனம்ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுனபாதம் சேர்ந்தேனே.

பொழிப்புரை:

எத்தகைய பெரியோர்களுடைய ஞானங்களாலும் அளவிட்டு அறிய முடியாதபடி இருக்கின்ற என் நாயனே! பத்தி நிறைந்து அதனால் கனிந்த மனம் உடையவர்களுக்கு மோக்ஷ சுகமானவனே! எனக்குக் கடலில் உண்டாகாத அமிர்தம் போன்றவனே! யான் பெற்ற இப் பேற்றுக்கு மூல காரணம் ஆனவனே! உலகங்கள் ஏழனையும் ஒப்பற்ற வராக அவதாரமாகிக் கூர்மை மிக்க தந்தத்தில் வைத்துத் தூக்கி வந்தவனே! இப்பொழுது உன்னுடைய திருவடிகைளைச் சேர்ந்ததேனே அன்றோ?

Transliteration:

iniyAr gnAnanggaLA ledukkalezhAtha venthAy
kanivAr vIttinbamE! yen kadaRppadA vamuthE
thaniyEn vAzhmudhalE!! pozhilEzhum yEnamondrAy
nuniyArkOttil vayththa yunapAdham dErnthEnE.

பன்னிராயிரப்படி பதவுரை: (Word by word meaning as per 12000 Padi vyakyaanam)






























































































அவதாரிகை:அநந்தரம், உன்னுடைய அப்ப்ராகிருத போக்யதையைக் காட்டி ருசி ஜனகனானபடியால் உன் திருவடிகளைப் பெற்றேனல்லேனோ? என்கிறார்
யார்எத்தனையேனும் அதிஸயிதரரானார்களுடைய
ஞானங்களால்ஜ்ஞானங்களால்
எடுக்கல்எடுக்கைக்கு
எழாதஎடுப்புண்ணாத
கனிவார்(உன் பக்கல் ஸ்நேஹத்தாலே)பரிபக்வ ஹ்ருதயரானவர்களுக்கு
வீட்டின்பமேமோக்ஷானந்தபூதனாய்
என்(உபய வ்யாவ்ருத்தனான) எனக்கு (மதனாதியத்நத்தால்)
கடல்கடலிலே
படாஉண்டாகாத
அமுதே(அப்ப்ராக்ருதமான) அம்ருதமாய்
தனியேன்(சம்சாரத்திலே பொருந்தாமையாலே) தனியனான என்னுடைய
வாழ்(த்வதனுபவ ரூபமான) வாழ்வுக்கு
முதலே(ருசிஜனகத்வாதியாலே) ப்ரதமஹெதுபூதனாய் (என்னை ஸம்ஸாரார்ணவத்தினின்றும் எடுக்கைக்கு ஸுசகமாக)
பொழிலேழும்ஸப்தத்வீபயுக்தமான ஜகத்தை
ஒன்றுஅத்விதீயமான
ஏனமாய்மகாவராஹமாய்க்கொண்டு
நுனியார்கூர்மைமிக்க
கோட்டில்கொம்பிலே
வைத்தாய்வைத்தவனே
இனிஇனி (நீயே ஹெதுபூதனாய் நிர்வஹிக்கிற பின்பு)
உன பாதம்உன் திருவடிகளை
சேர்ந்தேனேப்ராபித்தேனேயன்றோ. ஏகாரம் தேற்றம்