பாசுரம்:
அடிசேர் முடியின ராகியரசர்கள் தாம்தொழ,
இடிசேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்,
பொடிசேர் துகளாய்ப் போவர்களாதலின் நொக்கென
கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.
Click here for an explanation of the pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)
Translation:
Monarchs bow their heads at thy feet,
while the patio reverberates with drum blast!
Aha, such Mighty could become mere particles of dust!!
So reflect upon the Cool Basil Crowned Kannan's feet, fast!
பதம் பிரித்தது:
அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம்தொழ,
இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்,
பொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலின் நொக்கென

Audio Introduction:

பதவுரை:
தம்முடைய அடிகளிலே பொருந்திய முடியினையுடையவர்களாகி அரசர்கள் தாங்கள் தொழாநிற்க, இடியைப் போன்ற முரசங்கள் வீட்டின் முன்னிடத்திலே ஒலித்துக்கொண்டிருக்க வீற்றிருந்த சக்கரவர்த்திகள், (அந்நிலை கெட்டு) பொடியோடு சேர்ந்த தூளியாய்ப் போவார்கள்; ஆகையாலே வாசனை சேர்ந்திருக்கின்ற திருத்துழாயினைத் தரித்த முடியினையுடைய கண்ணபிரான் திருவடிகளை விரைவில் நினையுங்கோள்
விளக்கம்:
1. ‘முடியினராகித் தொழ இருந்தவர்’ என்க.
2. ‘இருந்தவர் துகளாய்ப் போவர்’ என முடிக்க;
3. ‘ஆதலின், கழல்கள் நினைமின்’ என்க.
4. நொக்கு என்பது, விரைவுக் குறிப்பினைக் காட்டுகின்ற இடைச்சொல்

No comments :
Post a Comment