பாசுரம்:
உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுலகாண்டவர், இம்மையே
Click here for an explanation of the pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)
Translation:
"Lay thy bounty - to stay alive" - so says some ruler
Alas, losing their lovely ladies to some plunderer
reach flaming forest and suffer. So, hurry
உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுலகாண்டவர், இம்மையே
தம்மின் சுவைமட வாரைப்பிறர் கொள்ளத் தாம்விட்டு
வெம்மி னொளிவெயில் கானகம்போய்க்குமை தின்பர்கள்,
செம்மின் முடித்திரு மாலைவிரைந்தடி சேர்மினோ.
Click here for an explanation of the pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)
Translation:
"Lay thy bounty - to stay alive" - so says some ruler
Alas, losing their lovely ladies to some plunderer
reach flaming forest and suffer. So, hurry
and reach the blazing crowned Sri Hari.
பதம் பிரித்தது:
"உய்ம்மின், திறைகொணர்ந்து" என்று உலகாண்டவர், இம்மையே
தம் இன்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மி ஒளிவெயில் கானகம் போய்க் குமை தின்பர்கள்,
செம்மின் முடித் திருமாலை விரைந்தடி சேர்மினோ.
பதவுரை:
‘திறைப்பொருளைக் கொணர்ந்து கொடுத்து உயிர் வாழ்ந்து போமின்’ என்று கூறி, உலகத்தை எல்லாம் ஒரு குடையின் கீழே ஆண்ட சக்கரவர்த்திகள் இன்பத்தை அளிக்கின்ற தம் பெண்களை இப்பிறவியிலேயே பிறர் கொள்ளும்படியாகத் தாமே விட்டு, கொடிய மின் ஒளி பரக்கின்ற காட்டிற்குச் சென்று, அங்கும் பகைவர்களாலே துன்புறுத்தப்படுவார்கள்; ஆகையாலே, ஒளி பொருந்திய திருமுடியைத் தரித்த திருமகள் கேள்வனுடைய திருவடிகளை விரைந்து சேர்மின்,’
விளக்கம்:
1. ‘திறை கொணர்ந்து உய்ம்மின்’ என மாறுக.
2. திறை - கப்பம்.
3. தம்மின் - தம்முடைய. இனி, தம் இன் என்பதில் ‘இன்’ என்பதனைச் சுவைக்கு அடையாக்கலுமாம். 4. குமைதின்பர் - நலியப்படுவர்.
5. ‘திருமாலை அடி விரைந்து சேர்மின்,’ எனக் கூட்டுக.
6. திருமாலை உருபு மயக்கம்.
No comments :
Post a Comment