2.6.4 வள்ளலே!மதுசூதனா! - Saviour! How can I Leave you?

பாசுரம்:

வள்ளலே! மதுசூதனா! என்மரகத மலையே! உனை நினைந்து,
தெள்கல்தந்த வெந்தாயுன்னை யெங்ஙனம் விடுகேன்,
வெள்ள மேபுரை நின்புகழ் குடைந்தாடிப் பாடிக்களித் துகந்துகந்து
உள்ளநோய்க ளெல்லாம்துரந் துய்ந்து போந்திருந்தே.

(இது முதலடியும் மூன்றமடியும் அறுசீராய் அயலடியும் ஈற்றடியும் நாற்சீரான ஆசிரியத்துறை)

Audio Introduction:



Translation (by Mr. P.S. Desikan):

O Madusudhanan, generous, you like an emerald hill!              
Loathes all else, me as you fill, and to part nஒer I will.      
Drowned in thy traits flooding in swirl, in ecstasy I whirl

My woes all annulled, hopes of deliverance hence fulfill.

பதம் பிரித்தது:

வள்ளலே, மதுசூதனா, என் மரகத மலையே, உனை நினைந்து,
தெள்கல் தந்த எந்தாய் உன்னை எங்ஙனம் விடுகேன்,
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக்களித்து உகந்துகந்து
உள்ளநோய்களேல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே.

பொழிப்புரை:

வள்ளலே! மதுசூதனா! என்னுடைய மரதக மலையே! உன்னை நினைத்தலால், மற்றைப்பொருள்களை இகழும்படியான தன்மையை எனக்குக் கொடுத்த எந்தையே! வெள்ளத்தைப் போன்ற நின் புகழ்களில் மூழ்கி ஆடிப்பாடி மகிழ்ந்து அம்மகிழ்ச்சியிலே உயர்ந்து என்னிடத்திலுள்ள நோய்களை எல்லாம் நீக்கி அதனால் உயர்வு பெற்று உன்னிடத்திற்போந்திருந்தேன்; ஆதலால். இனி, உன்னை எங்ஙனம் விடுகேன்!

விளக்கம்:

1.  நினைந்து -செயவென் எச்சத்திரிபு.
2.  ‘நினைத்தலால் எள்கல் தந்த எந்தாய்’ என்க.
3.  புரை - உவம உருபு.
4.  உகத்தல் - உயர்தல்;
5.  ‘உகப்பே உயர்தல் உவப்பே உவகை’ என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்.
6.  இருந்து - வினைமுற்று.
7.  ‘கழிந்தது பொழிந்தென வான் கண் மாறினும், தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்’ ( புறம். 203 ) என்ற இடத்துக் கழிந்து, பொழிந்து என்பன, வினை முற்றுப்பொருளவாதல் காண்க. அன்றி, இதனை எச்சமாகக் கோடலுமாம்.

Transliteration:

vaLLalE mathusoothanA* enmarathaka malaiyE,* unai_ninaindhu,
eLkalthandha endhaay* unnai eNGNGanam vidugEn,?*
veLLamE purai_ninpugaz kudaindhaadippaadi* kaLiththu ukandhugandhu*
uLLa _nOygaL ellaam thurandhu* uyndhu pOndhirundhE.

No comments :

Post a Comment