4.01 ஒரு நாயகமாய்

4.1 செல்வம் நிலையாதது ; நாரணன் அடிமையே நிலைபெற்றது எனல்

கலி நிலைத்துறை

Audio Introduction:



Click here for an Introduction by U.Ve. Dr. M.A. Venkatakrishnan

திருவாய்மொழி நூற்றந்தாதி:

ஒருநா யகமாய் உலகுக்கு, வானோர்
இருநாட்டில் ஏறியுய்க்கும் இன்பம் - திரமாகா,
மன்னுயிர்ப்போ கந்தீது மாலடிமை யேயினிதாம்,
பன்னியிவை மாறனுரைப் பால்.

பொழிப்புரை:

இவ்வுலக இன்பங்களும் (ஒரு நாயகமாய் உலகுக்கு) அதே போல், சுவர்க்க இன்பங்களும் (வானோர் இரு நாட்டில் ஏறி உய்க்கும் இன்பம்) ஸ்திரமாகா (திரமாகா). மேலும் ஸ்திரமாக (மன்னு) இருக்ககூடிய ஆத்மாவை அனுபவிக்கும் (உயிர் போகம்) இன்பமும் தீமையே (தீது).

திருமாலவனுக்கு அடிமை செய்வதே (மாலடிமையே) இனிமையானது (இனிதாம்) (என்று) இவைகளை (இவை) விளக்கி (பன்னி) நம்மாழ்வார் உரைப்பது இந்த திருவாய்மொழி (உரைப்பால்)

இத் திருவாய்மொழியின் பத்துப்பாசுரங்களில் கூறப்படும் பொருள் பற்றி:

பகவானை அடைந்ததால், தாம் ஒரு குறையும் இல்லாதவராய் இருப்பதாக உணர்ந்த ஆழ்வார், தம்மைப் போலவே பூமியிலுள்ளோர் அனைவரும் குறைவின்றி வாழவேண்டும் என்று நினைத்தார். எனவே, பகவானை அடைவதைத் தவிர மற்றவை நிலையில்லாதவை என்று ஈண்டுக் கூறுகிறார்.

ஸ்ரீ ராமாநுஜர் இத்திருவாய்மொழித் பகுதியைத் திரு நாராயணபுரத்திலுள்ள திருநாராயணப்பெருமாளுக்கு ஸமர்ப்பித்ததாகக் கூறுவர்.

கீழ்க்கண்ட வரிகளை Mouse ல் சொடுக்கினால் ஒவ்வொரு பாட்டுக்குமான விளக்கம் பெறலாம்:

4.1.1 திருநாரணன் தாள் பெறச் சிந்திக்கவேண்டும்

4.1.2 திருமால் திருவடிகளை விரைந்து பணியுங்கள்

4.1.3 கண்ணன் கழலிணைக் கருதுக

4.1.4 குவலயா பீடத்தை அழித்தவனை வணங்குக

4.1.5 மாயவன் பேர் சொல்லி வாழுங்கள்

4.1.6 எதுவும் நிலையாது : எனவே அண்ணல் அடிகளை அடைக

4.1.7 பகவானின் திருக்குணங்களையே அநுபவியுங்கள்

4.1.8 அரவணையான் திருநாமங்களைச் சொல்லுங்கள்

4.1.9 கருடவாகனனின் திருவடிகளை அணுகுக

4.1.10 பகவானை அடைதலே சிறந்த புருஷார்த்தம்

4.1.11 இவற்றைப் பாடுதலே உய்யும் வழி

No comments :

Post a Comment