3.04 புகழுநல்லொருவன்

3.4 பகவான் உலகிலுள்ள எல்லாப் பொருள்களாக இருக்கிறான்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருவாய்மொழி நூற்றந்தாதி:

புகழொன்று மாலெப் பெருள்களுந் தானாய்,
நிகழ்கின்ற நேர்காட்டி நிற்க - மகிழ்மாறன்,
எங்கும் அடிமைசெய இச்சித்து வாசிகமாய்,
அங்கடிமை செய்தான்மொய்ம் பால்

இத் திருவாய்மொழியின் பத்துப்பாசுரங்களில் கூறப்படும் பொருள் பற்றி:

மேலே ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்,’ என்று அடிமை செய்யப் பாரித்தார்; இவர் பாரித்த பாரிப்புக்கெல்லாம் போரும்படி ஈசுவரனும் தன்னுடைய சர்வாத்ம பாவத்தைக் காட்டிக் கொடுத்தான்; அதனை அநுசந்தித்துச் சொற்களைக்கொண்டு அடிமை செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

இவர்க்கு, இறைவன் தன் ஸ்வரூப குண விபூதி முதலானவைகளை அடையக் காட்டிக்கொடுக்கக் கண்டு,

(1) விபூதி காரணமான பூதங்கள்,
(2) பௌதிகங்கள்,
(3) அவற்றில் பிரகாசிக்கின்ற மாணிக்கம் முதலானவைகள்,
(4) சுவைப்பொருள்கள்,
(5) செவிக்கு இனிய இசை முதலானவைகள்,
(6) மோக்ஷம் முதலான புருஷார்த்தங்கள்,
(7) இவ்வுலகிற்குப் பிரதானரான பிரமன் முதலானோர்,
(8) இவற்றுக்கு அடையக் காரணமான பிரகிருதி புருஷர்கள்

ஆகிய இவை முழுதினையும் விபூதியாகவுடையனாய்  காட்டுகிறார்.

இவற்றினுள்ளே அந்தராத்துமாவாய் அநுப்பிரவேசித்து இவற்றோடே கலந்து நிற்கச் செய்தேயும் இவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாதவனாய், ’ஈசுவரன் தான் கர்மபலத்தைப் புசியாமல் மிக அதிகமாகப் பிரகாசிக்கிறான்,’ என்கிற பிரமாண பலத்தாலே இவ்வாத்துமாவுக்கு வரக்கூடியதான இன்ப துன்பம் முதலானவைகள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கையன்றிக்கே,

எல்லாப்பொருள்களையும் ஏவுகின்ற தன்மையால் வந்த புகரையுடையவனுமாய்   காட்டுகிறார்.  ஆக, இத்தால், ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்று தாம் பாரித்தபடியே அடிமைசெய்து தலைக்கட்டுகிறார்.

கீழ்க்கண்ட வரிகளை Mouse ல் சொடுக்கினால் ஒவ்வொரு பாட்டுக்குமான விளக்கம் பெறலாம்:

3.4.1 கண்ணனை என்னவென்று கூறியழைப்பேன்?

3.4.2 எல்லாமாக இருப்பவனை என்ன சொல்லி அழைப்பது?

3.4.3 சக்கரதாரியை நான் எப்படி வர்ணிப்பேன்?

3.4.4 அச்சுதனை நான் எப்படிப் புகழுவேன்?

3.4.5 அறுசுவை அமுது அன்னவன் அச்சுதன்

3.4.6 கண்ணனை முற்றமுடியப் புகழமுடியாது

3.4.7 தேவர்கட்கெல்லாம் தலைவன் மணிவண்ணன்

3.4.8 கண்ணனே மும்மூர்த்தி ஸ்வரூபன்

3.4.9 கண்ணனை உள்ளவாறு உணர்ந்து நினைத்தல் அரிது

3.4.10 ஞான ஸ்வரூபியைக் கூடும் வழி

3.4.11 இவற்றைப் படித்தால் சுவர்க்க போகம் கிட்டும்

No comments :

Post a Comment