2.04 ஆடியாடி

வஞ்சி விருத்தம்

Audio Introduction:



திருவாய்மொழி நூற்றந்தாதி:

ஆடிமகிழ் வானி லடியார் குழாங்களுடன்,
கூடியின்ப மெய்தாக் குறையதனால், -வாடிமிக
அன்புற்றார் தந்நிலைமை யாய்ந்துரைக்க மோகித்துத்,
துன்புற்றான் மாறனந் தோ!

இத் திருவாய்மொழியின் பத்துப்பாசுரங்களில் கூறப்படும் பொருள் பற்றி:

பகவானே!தேவரீர் எப்போதும் எல்லோருடைய துன்பங்களையும் நீக்குவதையே இயல்பாகக் கொண்டிருக்கிறீர்!தங்கள்மீது கொண்ட பேரன்பின் காரணமாக என் பெண் அவதிப்படுகிறாளே!இவளுக்காக நீர் என்ன செய்ய நினைத்திருக்கிறீர்!' என்று தாய் தன் பெண்ணாகிய பராங்குச நாயகியைப் பற்றி எம்பெருமானிடம் கேட்பதுபோல் அமைந்துள்ளது இப்பகுதி.

கீழ்க்கண்ட வரிகளை Mouse ல் சொடுக்கினால் ஒவ்வொரு பாட்டுக்குமான விளக்கம் பெறலாம்:

2.4.1 ஆடியாடி - நரசிங்கா என்று பாடி வாடுகிறாள் என் மகள்

2.4.2 வாணுதலிம் மடவரல் - கண்ணபிராணே!நின்னைக் காண என் மகள் ஆசைப்படுகிறாள்

2.4.3 இரக்க மனத்தோ - நுமக்காக என் மகள் உருகுகிறாள்

2.4.4 இலங்கைசெற்றவனே - நுமது நினைவால் என் மகள் புலம்புகிறாள்

2.4.5 இவளிராப் பகல் -நும் திருத்துழாயை என் மகள் விரும்புகிறாள்

2.4.6 தகவுடையவனே - என் மகள் உள்ளூர உருகுகிறாள்

2.4.7 உள்ளுளாவி யுலர்ந்து - என் மகள் கண்ணன் பெருமையையே பேசுவாள்

2.4.8 வஞ்சனே! என்னும் - என் மகள் நின்னையே அடைக்கலம் அடைந்தாள்

2.4.9 பட்ட போதெழு - என் மகள் பற்றி நுங்கள் இஷ்டம் என்ன?

2.4.10 ஏழை பேதை - கண்ணா!என் மகளை வாட்டாதே

2.4.11 வாட்ட மில்புகழ் வாமனனை - இவற்றை பாடி திருமாலைத் துதியுங்கள்

No comments :

Post a Comment