2.03 ஊனில்வாழுயிரே

2.3 அடியார் குழாத்தைக் கூடும் ஆசை (Desire to join the congregation of worshipers)

திருவாய்மொழி நூற்றந்தாதி:
ஊனம்அற வேவந்து உள்கலந்த மால்இனிமை
யானது அனுபவித்தற்கு ஆம்துணையா -வானில்
அடியார் குழாம்கூட ஆசையுற்ற மாறன்
அடியா ருடன்நெஞ்சே! ஆடு.

இத் திருவாய்மொழியின் பத்துப்பாசுரங்களில் கூறப்படும் பொருள் பற்றி:

தாம் பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்;  எல்லாம் வல்ல இறைவன் காரணமாக வந்ததாகலின் அவ்வின்பம் கனத்திருந்தது. ஒப்பும் உயர்வும் அற்றதாய் இருந்தது; 'இத்தகைய பேற்றுக்கு துணையாவார் யார்?' என்று பார்த்த இடத்தில் சம்சாரத்திலே ஆள் இல்லாமையாலே,  அவனை நித்தியாநுபவம் பண்ணாநிற்பாருமாய், பகவானுடைய அநுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற நித்திய சூரிகள் திரளிலே சென்று புக்கு ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு அநுபவிக்கப்பெறுவது எப்பொழுதோ?’ என்னும் அநவாப்தியோடே இத்திருவாய் மொழியினைத் தலைக்கட்டுகிறார்.

கீழ்க்கண்ட வரிகளை Mouse ல் சொடுக்கினால் ஒவ்வொரு பாட்டுக்குமான விளக்கம் பெறலாம்:

2.3.6  இராமபிரானே!நின்னையே அடைந்தேன்
2.3.7  கண்ணா!என்னை நினைவில் வை
2.3.8  பிறவித்துயர் கடிந்து நின்னை எய்தினேன்
2.3.9  பவித்திரனைப் பாடிக் களித்தேன்
2.3.10 அடியார் கூட்டத்தை எப்பொழுது கூடுவேன்?
2.3.11 அடியாருடன் கூடி நின்றாடுமின்

No comments :

Post a Comment