4.1.9 படிமன்னு - No permanent heaven without Him

பாசுரம்:

படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார்,
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை,
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ.

Audio Introduction:



Click -> here <- for an explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

Devoid of desire for Ornaments with the senses subdued
Cycle of Rebirth is Conquered  - Yet not being His favoured,
though attaining heaven is attained - staying there isn't endured 
Ergo, reach for the Garuda-banner adorned Lord

பதம் பிரித்தது:

படிமன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து, ஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனைஇல்லார்
குடிமன்னும் இன்சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வுஇல்லை;
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ

பொழிப்புரை:

பூமியையும் பொருந்திய பல ஆபரணங்களையும் அவற்றிலுள்ள வாசனையோடு நீக்கி, ஐந்து இந்திரியங்களையும் வென்று, தூறு மண்டும்படி இச்சரீரத்தை ஒறுத்துத் தவம் செய்தவர்களும், அவ்விஷயத்தில் அவனுடைய திருவருள் இல்லாதவர்கள் குடிகள் பொருந்தி இருக்கின்ற இனிமையையுடைய சுவர்க்கலோகத்தை அடையினும் மீண்டு வருவார்கள்; ஆதலால், நிலைபெற்ற கொடியிலே கருடப்பறவையையுடைய சர்வேசுவரனுடைய திருவடிகளைச் சேருங்கோள்; சேர்ந்தால், மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய உலகத்தைப் பெறலாம்.

விளக்கம்:

1.  ‘அறுத்து வென்று செற்றார்களும் அவனை இல்லார் எய்தியும் மீள்வர்கள்,’ என்க. 
2.  ‘அண்ணல் கழல்கள் குறுகுமின்; மீள்வு இல்லை,’ எனக் கூட்டுக.
3.  படி - பூமி. 
4.  மன்னு பல்கலன் - முறையாக வந்த பல வகைப்பட்ட ஆபரணங்களின் கூட்டம்

No comments :

Post a Comment