4.1.8 குணங்கொள் - No Permnent bliss without him

பாசுரம்:

குணங்கொள் நிறைபுகழ் மன்னர்க் கொடைக்கடன் பூண்டிருந்து,
இணங்கி யுலகுட னாக்கிலும் ஆங்கவ னையில்லார்,
மணங்கொண்ட போகத்து மன்னியு மீள்வர்கள் மீள்வில்லை,
பணங்கொள் அரவணை யான்திரு நாமம் படிமினோ.

Audio Introduction:


Click -> here <- for an explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

Virtuous, famed and altruist by inherent demeanour
Compatible with Everyone - yet without Him in his favour
Fragrant bliss will engulf them only to expire.
Learn the names of the serpent-couch Lord, for bliss of no-expire!


பதம் பிரித்தது:

குணங்கொள் நிறைபுகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகுடன் ஆக்கிலும்,ஆங்கு அவனைஇல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வுஇல்லை;
பணங்கொள் அரவணையான் திருநாமம் படிமினோ.

பொழிப்புரை:

நல்ல குணங்கள் பொருந்திய நிறைந்த புகழையுடைய மன்னர்கள் தர்மம் செய்தலாகிய கடமையை மேற்கொண்டு உலகத்தாரோடு பொருந்தி இருந்து உலகத்தை எல்லாம் தமக்கே உரியதாகச் செய்து அரசாண்டாலும், அந்த அரசச் செல்வமானது இறைவன் திருவருளால் வந்தது என்று நினையாதவர்கள், செவ்வையையுடைத்தான இன்பத்திலே நிலைபெற்று இருப்பவர்களாயினும், அந்த இன்பத்தினின்றும் நீங்குவார்கள்; ஆதலால், படத்தைக்கொண்ட பாம்பினைப் படுக்கையாகவுடைய இறைவனது திருநாமத்தைப் படியுங்கோள் ; அங்ஙனம் கூறினால், பின்னர் மீண்டு வருதல் இல்லை ; அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டினை அடையலாம்

விளக்கம்:

1.  ‘மன்னர் கொடைக்கடன் பூண்டு இணங்கி இருந்து உலகு ஆக்கிலும்’ எனக் கூட்டுக.
2.  ‘திருநாமம் படிமின் ; மீள்வில்லை,’ என்க.
3.  படித்தல் - கற்றல். ஆனால்,
4.  ‘திருநாமம் படிமின் - கல்யாண குணங்களாகிய கடலில் மூழ்குங்கோள்’ என்னலுமாம்.
     ‘நற்குணக்கடல் ஆடுதல் நன்றரோ,’ என்றார் கம்பநாட்டாழ்வார்.

No comments :

Post a Comment