4.1.7 ஆமின் சுவை - From abundance to morsels

பாசுரம்:
ஆமின் சுவையவை ஆறொடடிசிலுண் டார்ந்தபின்,
தூமென் மொழிமட வாரிரக்கப்பின்னும் துற்றுவார்,
ஈமின் எமக்கொரு துற் றென்றிடறுவ ராதலின்,
கோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே.

Audio Introduction:


Click here to listen to an explanation of the pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

After flavorous abundant meal having been consumed
when courtly dames insist - yet more was crammed.
Ah! "Provide me a morsel" - says he now - against doors slammed.
So, portray the glories of our Primal Lord who is Basil Domed.

பதம் பிரித்தது:

ஆமின் சுவைஅவை ஆறோடு அடிசில்உண்டு ஆர்ந்தபின்
தூமென் மொழிமட வார்இரக் கப்பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.

பொழிப்புரை:

பொருந்திய இனிய அந்த அறுசுவையோடு கூடின உணவை உண்டு வயிறு நிறைந்த பின், தூய்மை பொருந்திய மெல்லிய சொற்களைப் பேசுகின்ற பெண்கள் இரந்து கூறப் பின்னரும் உண்பார்கள் ; அவ்வாறு உண்டவர்கள், அந்நிலை கெட்டு, ‘எமக்கு ஒரு பிடி அன்னம் கொடுமின்,’ என்று தட்டித் திரிவார்கள் ; ஆதலின், திருத்துழாய் மாலையைத் தரித்த திருமுடியையுடைய ஆதி அம் சோதியான இறைவனுடைய கல்யாண குணங்களை அனுபவிக்கப் பாருங்கோள்

விளக்கம்:

1.   ‘ஆம் இன் அவை ஆறு சுவையோடு அடிசில் உண்டு’ எனப் பிரித்துக்கூட்டுக.
2.   தூ - பரிசுத்தம்.
3.   துற்றல் - உண்டல்.
4.   துற்றுவர் - பெயர்.
5.   ‘துற்றுவர் இடறுவர்’ என முடிக்க.
6.   இடறுவர் - முற்று (knocks the doors).
7.   கோமின் - தொகுத்துச் சொல்லுமின்.
8.   ‘குணங்கள் கோமின்’ என மாறுக.

No comments :

Post a Comment