4.1.10 குறுக மிக - Even Saints need Him

பாசுரம்:

குறுக மிகவுணர் வத்தொடு நோக்கியெல் லாம்விட்ட,
இறுக லிறப்பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லையேல்,
சிறுக நினைவதோர் பாசமுண்டாம்பின்னும் வீடில்லை,
மறுபகலில் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே

(கலி நிலைத்துறை)

Audio Introduction:


Click -> here <- for an explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

Nonchalant and with vision towards his élan vital
the Saint has become a mortal.
Yet without Him, he's caught in the confines of his soul,
So, hold on to the eternal Lord's feet for that Paradise Real.


பதம் பிரித்தது:

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம்விட்ட,
இறுகல் இறப்பென்னும் ஞானிக்கும் அப்பயனில்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடில்லை,
மறுபகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே.

பொழிப்புரை:

(மனமானது) தன்னைச் சார (தன் வசப்பட்ட அம்மனத்தினை) ஞான சொரூபமாக உள்ள ஆத்துமாவோடு சேர்த்து நன்றாகப் பார்த்து எல்லாப்பற்றுகளையும் அடியோடே விட்ட, குறுகிய ஆத்தும அனுபவத்தையே மோக்ஷமாக நினைத்திருக்கும் ஞானிகளுக்கும் பகவானை உபாயமாகப் பற்றுதல் இல்லையாகில் சிறிய பேறுகளை நினைப்பதற்குக் காரணமான ஒரு பற்று உண்டாகும்; அதற்குமேல், அம்மோக்ஷமும் இல்லை; ஆன பின் ஒரு விதக் குற்றமும் இல்லாத இறைவனை அடைந்து அகலாதொழிவானேயானால், அதுவே பரமபுருஷார்த்தமான மோக்ஷமாகும். ஆதலால், மேற்பாசுரத்தில் கூறிய ‘அண்ணல் கழல்கள் குறுகுமினோ’ என்ற அதுவே மோக்ஷமாகும்

விளக்கம்:

1.  ‘குறுக நோக்கி விட்ட ஞானி’ என்க.
2.  உணர்வு - ஞானம்; ஆத்துமா.
3.  இறுகல் - இறுகப்பிடித்தல்.
4.  இறப்பு - மோக்ஷம்.
5.  பாசம் - பற்று.
6.  மறுகல் - குற்றம்.
7.  ‘பற்றி விடாவிடில் பின்னும் வீடு இல்லை’ எனக் கூட்டுக.
8.  இங்கே, ‘வீடு’ என்றது, கைவல்யத்தை.
9.  ‘அஃதே வீடு’ என மாறுக.

No comments :

Post a Comment