2.6.3 தாமரைக் கண்ணனை - O Lotus Eyed One!

பாசுரம்:

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும்தலைமகனை, துழாய்விரைப்
பூமருவுகண்ணி யெம்பிரானைப்பொன்மலையை,
நாமருவி நன்கேத்தியுள்ளி வணங்கி நாம்மகிழ்ந்தாட, நாவலர்
பாமருவிநிற்கத்தந்த பான்மையேவள்ளலே

Audio Introduction:




Translation (by Mr P.S. Desikan):

O lord primal, lotus-eyed, heavenly ones thou keep in thrill
With fragrant tulasi over thy tress, thou a like a golden hill
Reaching thee, heart-full, I dance, songs as my tongue spills
I pray thee, so gracious to offer such a wonderful whirl!

பதம் பிரித்தது:

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை, துழாய் விரைப்
பூ மருவு கண்ணி எம்பிரானைப் பொன்மலையை,
நாம் அருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட, நா அலர்
பா மருவி நிற்க தந்த பான்மையே வள்ளலே

பொழிப்புரை:

தாமரைக்கண்ணனாய் விண்ணோர் துதிக்கின்ற தலைமகனாய் வாசனையையுடைய பூக்கள் பொருந்திய திருத்துழாய் மாலையைத் தரித்த எம்பிரானாய்ப் பொன்மலையாய் இருக்கின்ற உன்னை, வள்ளன்மை உடையவனே! நான் வந்து கிட்டி நன்கு ஏத்தி நினைத்து வணங்கி நான் மகிழ்ந்தாடும்படியாக நாவிலே அலரும்படியான பாசுரங்களிலே பொருந்தி நிற்கும்படி திருவருள் செய்த தன்மைதான் என்னே

விளக்கம்:

1.  ‘தாமரைக்கண்ணனை’ என்பது போன்ற இடங்களில் ஐகாரம்: அசைநிலை. 
2.  அலர்பா : வினைத்தொகை.

No comments :

Post a Comment