2.6.2 சிக்கென - Flooding my soul with knowledge

சிக்கெனச்சிறுதோரிடமும் புறப்படாத்தன்னுள்ளே, உலகுகள்
ஒக்கவேவிழுங்கிப் புகுந்தான்புகுந்ததற்பின்,
மிக்கஞானவெள்ளச்சுடர்விளக்காய்த் துளக்கற்றமுதமர்ய், எங்கும்
பக்கநோக்கறியானென் பைந்தாமரைக்கண்ணனே.

Audio Introduction:


பதம் பிரித்தது:

சிக்கெனச் சிறிது ஓர் இடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய் துளக்கு அற்று அமுதம் ஆய் எங்கும்
பக்கம் நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே.

Translation:

Devouring each and all leaving no space nor hole
Contains them within, as He entered deep in my soul
flooding with knowledge, as a flame glowing amidst whole,
He nectar-like, His Lotus-eyes unturned focusing me sole!

Transliteration:

sikkenachchiRuthOridamum* puRappadaaththannuLLE,* ulakugaL
okkavE vizungip* pukundhaan pukundhathaRpin,*
mikka NYaana veLLachchudar viLakkaayth* thuLakkaRRu amuthamaay,* engum
pakkam _nOkkaRiyaan* en paindhaamaraik kaNNanE.

பொழிப்புரை:

அழகிய தாமரை போன்ற கண்களையுடைய என் இறைவன், மிகச்சிறிய இடமும் புறம்பு போகாதபடி உலகுகளைத் தன் நினைவிற்குள்ளே ஒரே விதமாக அடக்கி, வெளியில் புறப்படாதபடி என் மனத்திற்புகுந்தான்; புகுந்த பின்னர், ஞானவெள்ளத்தால் வந்த மிக்க ஒளியை உடையவனாய் நடுக்கமும் தீர்ந்து, அமுதம் போன்று இனியனாய், ஓரிடத்திலும் பக்கத்தைப் பார்க்கின்றிலன்.

விளக்கம்:

‘சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிச் சிக்கெனப் புகுந்தான்’ என மாற்றுக. 
விழுங்குதல் - அடக்குதல். ‘புறப்படா விழுங்கினான்’ எனக் கூட்டுக. புறப்படா - புறப்படாதபடி (Settled forever)

No comments :

Post a Comment