2.6.7 முடியாததென் எனக்கே (What is impossible to me)

பாசுரம்:

முடியாத்தென்னெக்கேலினி முழுவேழுலகு முண்டான் * உகந்துவந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானு மல்லனினி *
செடியார்நோய்களெல்லாந்துரந்து எமர்கீழ்மேலெழுபிறப்பும் *
விடியாவெந்நகரத்து என்றும் சேர்ந்தல்மாறினரே

Audio Introduction:



Translation (by Mr. P.S. Desikan):

Oh! He entered deep into me, never to part!
Sins I inherited during seven births of past
through forefathers absolved, no more hell at last!
Nothing holds me henceforth, I clinch him fast!

பதம் பிரித்தது:

முடியாதது என் எனக்கேல் இனி? முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும்
விடியா வெம் நரகத்து என்றும் சேர்தல் மாறினரே

பொழிப்புரை:

ஏழ் உலகங்கள் முழுதினையும் உண்டவன், விரும்பி வந்து அடியேன் மனத்திலே புகுந்தான்; இனி, நீங்குமவனும் அல்லன்; கீழ் எழு பிறப்புகளிலும் மேல் எழு பிறப்புகளிலும் உள்ள என்னுடைய உறவினர், பாவங்கள் காரணமாக வருகின்ற துன்பங்கள் எல்லாம் நீங்கி, ஒரு நாளும் விடியாத கொடிய நரகத்திலே சேர்தலை எப்பொழுதும் நீங்கினர்; ஆதலால், எனக்கு முடியாதது என்?

விளக்கம்:

1.  ‘முழு’ என்பது, எஞ்சாமையைக் காட்ட வந்தது;
2.  ‘முழுதுஎன் கிளவு எஞ்சாப் பொருட்டே’ என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்,
3.  உண்டான் - வினையாலணையும் பெயர்.
4.  ‘எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப், பண்புடை மக்கட் பெறின்’ என்ற திருக்குறளுக்கு
      விரிவுரையாகவும் உதாரணமாகவும் அமைந்தது இப்பாசுரம் எனலாம்.
5.  ‘எமர் துறந்து சேர்தல் மாறினர்’ என முடிக்க

ஈடு விளக்கம்:

முடியாதது. என் எனக்கேல் இனி – (Nothing holds me henceforth, I clinch him fast) எனக்காகில் இனி முடியாதது உண்டோ? ‘எனக்கு இனி அநவாப்தமாய் இருப்பது ஒன்று உண்டோ?’ என்றபடி -

முழு ஏழ்உலகும் உண்டான் உகந்து வந்து அடியேன் உள் புகுந்தான் – (Oh! -The one who held all seven worlds in his stomach during the deluge- HE entered deep into me) ‘நீர் இது என் கொண்டு சொல்லுகிறீர்?’ என்ன - பிரளய ஆபத்திலே அகப்பட்ட பூமி, தன் வயிற்றில் புகாத போது படும் பாடு அடங்க, தான் என் பக்கல் புகாத போது படுவானாய் வந்து புகுந்தான்; எனக்கு இனி முடியாதது உண்டோ? சம்பந்தத்தைப் பார்த்துப் புகுந்தான் என்பார்,  - ‘அடியேன் உள் புகுந்தான்’ என்கிறார். ஒரு நீராகப் கலந்தான் என்பார், ‘உள் புகுந்தான்’ என்கிறார். தன் பக்கல் உலகம் புக்கது போன்று அன்றி, மகிழ்ந்து புக்கானாதலின், ‘உகந்து புகுந்தான்’ என்கிறார். ஆயின், இவனுக்கும் உலகத்துக்கும் செல்லாமை ஒக்கும், உவப்பே இவ் விஷயத்தில் தன் ஏற்றம்.

இனி அகல்வானும் அல்லன் – (never to part) அந்தப் பூமிக்குப் பிரளயம் நீங்கினவாறே அகலவேண்டும்; இவனுக்கு அதுவும் இல்லை.  ‘அகல ஒண்ணாமைக்குக் காரணம் என்?’ எனின், சேதநரைப் போலே பாவத்தாலே அகன்று ஒரு புண்ணியத்தாலே கிட்டுமது இல்லையே இவனுக்கு? ஆதலின், ‘அகல்வானும் அல்லன்’ என்கிறார். ஆக, ‘முதலிலே பிரிவைப் பற்றிப் பேசவும் உடன் படுகின்றிலன்’ என்றபடி.

செடியார் நோய்கள் எல்லாம் துரந்து – (Sins I inherited during seven births of past - no more) ‘உம்மை அவன் இப்படி விரும்பினான் ஆகில், பனை நிழல் போலே உம்மை நோக்கிக் கொண்டுவிட அமையுமோ?’ என்ன, பாவங்களாலே நிறைந்த துக்கங்களை வாசனையோடே ஓட்டி. செடி – பாவம். இனி, ‘செடியார் நோய்’ என்பதற்கு, ‘தூறு மண்டின நோய்கள்’ என்று பொருள் கூறலுமாம். செடி – தூறு. விஷயப் பிராவண்யத்தால் வந்த நோய், தமது தாழ்வினை நினைத்தலால் வந்த நோய், பகவானுடைய அனுபவத்தைப் பிரிந்த பிரிவால் வந்த நோய் ஆகிய இவற்றை எல்லாம் நினைத்து, ‘நோய்கள் எல்லாம்’ என்கிறார். ‘ஆயின், ‘உள்ள நோய்கள் எல்லாம் துரந்து’ என்ற இடத்திலும் கூறிற்றிலரோ இவற்றை?’ என்னில், அங்குக் கூறியது, தம் அளவு. இங்குக் கூறுவது, தம் சம்பந்தி சம்பந்திகளுடைய விஷயம். ‘இப்படி இவர்கள் ஒட்டியது எதனாலே?’ என்னில், எமர் – வேறு ஒன்றால் அன்று; என்னுடைய சம்பந்தமே காரணமாக.

கீழ் மேல் எழு பிறப்பும் – ‘சம்பந்தம் எவ்வளவு?’ என்னில், கீழ் எழுபடி காலும் மேல் எழுபடி காலும் 2தம்முடன் எழுபடி காலும் ஆக இருபத்தொருபடி கால்.

விடியா வெம்நரகத்து – (Hell - no more) ஒருநாள் வரையிலே பாவங்கள் குறைந்தவாறே விடியும் தன்மையையுடையது எமன் தண்டம்; இது விடியாத நரகம் ஆதலின், ‘விடியா நரகம்’ என்கிறார். ‘நரகம்’ என்று புத்தி பிறக்கும் அந்நரகத்தில், தண்மை தோற்றாத நரகம் இது ஆதலின், ‘வெம்நரகம்’ என்கிறார். என்றும் சேர்தல்மாறினர் – என்றும் கிட்டக்கூடிய தண்மை தவிர்ந்தனர். ‘நானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை; அவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை’ என்பார்,

மாறினர்’ என்று அவர்கள் வினையாக அருளிச்செய்கின்றார். ‘எதனாலே?’ என்னில், ‘என் பக்கல் அவன் பண்ணின பக்ஷபாத ராஜகுலத்தாலே மாறிக்கொண்டு நின்றார்கள்’ என்றபடி.                        

தம்முடன் எழுபடி கால்’ என்றது, தமக்கு முன்னே மூன்று பேரும், பின்னே மூன்றுபேரும், தாமுமாக எழுவர். இருபத்தொருபடி கால் – இருபத்தொரு தலைமுறை.  என் அளவில் விஷயீ காரம் -சம்பந்த சம்பந்திகளுக்கும் கிட்டும் -என்கிறார் இதில் பொசிந்து காட்டுகிறது இங்கு -இது தானே அடுத்த திருவாய் மொழி - கேசவன் தமர் -விஷயம்

No comments :

Post a Comment