3.4.1 புகழு நல் ஒருவனென்கோ - Kannan and the five elements

பாசுரம்:

புகழுநல் லொருவ னென்கோ - பொருவில்சீர்ப் பூமி யென்கோ
திகழுந்தண் பரவை யென்கோ - தீயென்கோ வாயு வென்கோ
நிகழுமா காச மென்கோ - நீள்சுட ரிரண்டு மென்கோ
இகழ்விலிவ் வனைத்து மென்கோ - கண்ணனைக் கூவுமாறே!

குரல்  ஒலி:



Translation:

The Famed One - Do I declare! The Blemishless earth - Do I assert!!
The Cool Wide Ocean - Do I testify! The fire or the Wind - Do I state!!
All Containing Space - Do I stress! The Twin Bright Lights - Do I vouch!!
All these and the rest - Do I call! How do I address my Krishna - as such?

Audio:




பதம் பிரித்தது:

புகழுநல் ஒருவன் என்கோ - பொருவில் சீர்ப் பூமி என்கோ
திகழும் தண் பரவை என்கோ - தீ என்கோ வாயு என்கோ
நிகழும்  ஆகாசம் என்கோ - நீள்சுடர் இரண்டும் என்கோ
இகழ்வில் இவ் அனைத்தும் என்கோ - கண்ணனைக் கூவுமாறே!

பொழிப்புரை:

(உலகத்து எல்லாப் பொருள்களையும் தனக்குச் சரீரமாகவுடைய) எம்பெருமானை வேதங்கள் இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றால்) புகழ்ந்து கூறப்பெற்ற விலக்ஷணமான குணங்கள் முதலியவற்றையுடைய ஒப்பற்றவன் என்று சொல்வேனோ? ஒப்பில்லாத சிறப்புக்களையுடைய பூமியென்று சொல்வேனோ?விளங்குகிற நீர்நிலையென்று சொல்வேனோ?அக்கினியென்பேனோ? காற்று என்பேனோ? எங்குமுள்ளதான ஆகாசமென்பேனோ? (ஸூர்யன் சந்திரன்) என்ற இரண்டு சுடர்களுமென்பேனோ? இகழப்படுதலில்லாத (வேண்டும் பொருள்களாகக் கைக் கொள்ளுதற்கு உரிய) இவையெல்லாப் பொருள்களுமென்பேனோ? (எம்பெருமானைச்) சொல்லியழைக்கும் விதம் (என்னே) (யான் இன்னதென்று உணறேன் என்றபடி.)

Transliteration:

pugazhu nalloruvanenkO poruvil sIr bhUmi enkO
thigazhumthaN paravaiyenkO - theeyenkO vAyuvenkO
nigazhumAkAsamenkO - nILsudari reNdumenkO
igazhvillanaiththumenkO - kaNNanaikkUvumARE!

No comments :

Post a Comment