4.1.4 நினைப்பான் புகில் - Points to ponder

பாசுரம்:

நினைப்பான் புகில்கடல் எக்கலின் நுண்மண லிற்பலர்,
எனைத்தோ ருகங்களும் இவ்வுல காண்டு கழிந்தவர்,
மனைப்பால் மருங்கற மாய்தலல்லால்மற்றுக் கண்டிலம்,
பனைத்தாள் மதகளி றட்டவன் பாதம் பணிமினோ.

Audio Introduction:



Click here for an explanation of the pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

To ponder, countless as sand granules on a sea shore,
there were those, who ruled this earth, for aeons before.

But - none we saw - to leave a vestige or last forever.
So worship the feet of the Lord who razed the monster tusker!

பதம் பிரித்தது:

நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண் மணலிற்பலர்,
எனைத்தோர் யுகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்,
மனைப்பால் மருங்கற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்,
பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ.

பொழிப்புரை:

நினைப்பதற்குப் புகுந்தால், பல யுகங்களும் இந்த உலகத்தை எல்லாம் ஆண்டு இறந்து போனவர்கள், கடல் எக்கலிலே உள்ள நுண்மையான மணல்களைக்காட்டிலும் பலர் ஆவர்; அவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடமும் தெரியாதபடி அழிந்தார்களே அன்றி, வேறு ஒன்றனையும் பார்த்தோம் இல்லை; ஆதலால், பனைமரம் போன்ற கால்களையுடைய மதம் பொருந்திய யானையைக் கொன்ற கிருஷ்ணன் திருவடிகளை வணங்குங்கள்

விளக்கம்:

1. ‘நினைப்பான் - வினையெச்சம்.
2. எக்கல் - மணல் மேடு.
3. ‘ஆண்டு கழிந்தவர் பலர்’ என்க.
4. மனைப்பால் - மனை இடம்
5. மனைப்பால் மருங்கற மாய்தல் - refers to leaving no trace / vestige after death

4.1.3 அடிசேர் முடியினர் - From Monarch to Dust

பாசுரம்:

அடிசேர் முடியின ராகியரசர்கள் தாம்தொழ,
இடிசேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்,
பொடிசேர் துகளாய்ப் போவர்களாதலின் நொக்கென
கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.

Audio Introduction:


Click here for an explanation of the pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

Monarchs bow their heads at thy feet,
while the patio reverberates with drum blast!
Aha, such Mighty could become mere particles of dust!!
So reflect upon the Cool Basil Crowned Kannan's feet, fast!

பதம் பிரித்தது:

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம்தொழ,
இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்,
பொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலின் நொக்கென
கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.


பதவுரை:

தம்முடைய அடிகளிலே பொருந்திய முடியினையுடையவர்களாகி அரசர்கள் தாங்கள் தொழாநிற்க, இடியைப் போன்ற முரசங்கள் வீட்டின் முன்னிடத்திலே ஒலித்துக்கொண்டிருக்க வீற்றிருந்த சக்கரவர்த்திகள், (அந்நிலை கெட்டு) பொடியோடு சேர்ந்த தூளியாய்ப் போவார்கள்; ஆகையாலே வாசனை சேர்ந்திருக்கின்ற திருத்துழாயினைத் தரித்த முடியினையுடைய கண்ணபிரான் திருவடிகளை விரைவில் நினையுங்கோள்

விளக்கம்:

1. ‘முடியினராகித் தொழ இருந்தவர்’ என்க.
2. ‘இருந்தவர் துகளாய்ப் போவர்’ என முடிக்க;
3. ‘ஆதலின், கழல்கள் நினைமின்’ என்க.
4. நொக்கு என்பது, விரைவுக் குறிப்பினைக் காட்டுகின்ற இடைச்சொல்

4.1.2 உய்ம்மின் - Protect your family!

பாசுரம்:

உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுலகாண்டவர், இம்மையே
தம்மின் சுவைமட வாரைப்பிறர் கொள்ளத் தாம்விட்டு
வெம்மி னொளிவெயில் கானகம்போய்க்குமை தின்பர்கள்,
செம்மின் முடித்திரு மாலைவிரைந்தடி சேர்மினோ.



"Lay thy bounty - to stay alive" - so says some ruler
Alas, losing their lovely ladies to some plunderer
reach flaming forest and suffer. So, hurry 
and reach the blazing crowned Sri Hari.

பதம் பிரித்தது:

"உய்ம்மின், திறைகொணர்ந்து" என்று உலகாண்டவர், இம்மையே
தம் இன்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மி ஒளிவெயில் கானகம் போய்க் குமை தின்பர்கள்,
செம்மின் முடித் திருமாலை விரைந்தடி சேர்மினோ.

பதவுரை:

 ‘திறைப்பொருளைக் கொணர்ந்து கொடுத்து உயிர் வாழ்ந்து போமின்’ என்று கூறி, உலகத்தை எல்லாம் ஒரு குடையின் கீழே ஆண்ட சக்கரவர்த்திகள் இன்பத்தை அளிக்கின்ற தம் பெண்களை இப்பிறவியிலேயே பிறர் கொள்ளும்படியாகத் தாமே விட்டு, கொடிய மின் ஒளி பரக்கின்ற காட்டிற்குச் சென்று, அங்கும் பகைவர்களாலே துன்புறுத்தப்படுவார்கள்; ஆகையாலே, ஒளி பொருந்திய திருமுடியைத் தரித்த திருமகள் கேள்வனுடைய திருவடிகளை விரைந்து சேர்மின்,’ 

விளக்கம்:

1. ‘திறை கொணர்ந்து உய்ம்மின்’ என மாறுக. 
2. திறை - கப்பம். 
3. தம்மின்  - தம்முடைய. இனி, தம் இன் என்பதில் ‘இன்’ என்பதனைச் சுவைக்கு அடையாக்கலுமாம். 4. குமைதின்பர் - நலியப்படுவர். 
5. ‘திருமாலை அடி விரைந்து சேர்மின்,’ எனக் கூட்டுக. 
6. திருமாலை உருபு மயக்கம்.

4.1.1 ஒரு நாயகமாய் - Wealth of a Sovereign Ruler

பாசுரம்:
ஒருநா யகமாய் ஓடவுலகுட னாண்டவர்,
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
பெருநா டுகாண இம்மையிலே பிச்சை தாம்கொள்வர்,
திருநா ரணன்தாள் காலம் பெறச்சிந் தித்துய்ம்மினோ.

குரல்  ஒலி : 


Introduction - Audio (Long):


Click here for an explanation of the pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

Once he ruled the world as one sovereign
Soon the masses behold him seeking offerings
Bitten by stray-dogs 'n holding broken urns.
So rush to mull the feet of Thirunaranan!

Audio: 


பதம் பிரித்தது:
ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர், சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்.
திரு நாரணன் தாள் காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.

பொழிப்புரை:

பூமண்டலம் முழுமைக்கும் அத்விதீயப்ரபுவாய் வெகுகாலமளவும் உலகங்களை யெல்லாம் அரசாட்சி புரிந்தவர்கள் (ஒரு காலவிசேஷத்திலே தரித்ரர்களாகி) கரிய நாய்களால் கவ்வப்பட்ட கால்களையுடையவராயும் உடைந்த பிச்சைப் பாத்திரத்தையுடைவர்களாயும் ஆகி உலகமெல்லாம் திரண்டுவந்து காணும்படியாக இப்பிறவியிலேயே தாங்களே பிச்சை யெடுப்பர் (செல்வத்தின் தன்மை இத்தகையதாதலால்) திருநாராயணனுடைய திருவடிகளை விரைவாக தியானித்து உஜ்ஜூவியுங்கோள்.

3.4.1 புகழு நல் ஒருவனென்கோ - Kannan and the five elements

பாசுரம்:

புகழுநல் லொருவ னென்கோ - பொருவில்சீர்ப் பூமி யென்கோ
திகழுந்தண் பரவை யென்கோ - தீயென்கோ வாயு வென்கோ
நிகழுமா காச மென்கோ - நீள்சுட ரிரண்டு மென்கோ
இகழ்விலிவ் வனைத்து மென்கோ - கண்ணனைக் கூவுமாறே!

குரல்  ஒலி:



Translation:

The Famed One - Do I declare! The Blemishless earth - Do I assert!!
The Cool Wide Ocean - Do I testify! The fire or the Wind - Do I state!!
All Containing Space - Do I stress! The Twin Bright Lights - Do I vouch!!
All these and the rest - Do I call! How do I address my Krishna - as such?

Audio:




பதம் பிரித்தது:

புகழுநல் ஒருவன் என்கோ - பொருவில் சீர்ப் பூமி என்கோ
திகழும் தண் பரவை என்கோ - தீ என்கோ வாயு என்கோ
நிகழும்  ஆகாசம் என்கோ - நீள்சுடர் இரண்டும் என்கோ
இகழ்வில் இவ் அனைத்தும் என்கோ - கண்ணனைக் கூவுமாறே!

பொழிப்புரை:

(உலகத்து எல்லாப் பொருள்களையும் தனக்குச் சரீரமாகவுடைய) எம்பெருமானை வேதங்கள் இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றால்) புகழ்ந்து கூறப்பெற்ற விலக்ஷணமான குணங்கள் முதலியவற்றையுடைய ஒப்பற்றவன் என்று சொல்வேனோ? ஒப்பில்லாத சிறப்புக்களையுடைய பூமியென்று சொல்வேனோ?விளங்குகிற நீர்நிலையென்று சொல்வேனோ?அக்கினியென்பேனோ? காற்று என்பேனோ? எங்குமுள்ளதான ஆகாசமென்பேனோ? (ஸூர்யன் சந்திரன்) என்ற இரண்டு சுடர்களுமென்பேனோ? இகழப்படுதலில்லாத (வேண்டும் பொருள்களாகக் கைக் கொள்ளுதற்கு உரிய) இவையெல்லாப் பொருள்களுமென்பேனோ? (எம்பெருமானைச்) சொல்லியழைக்கும் விதம் (என்னே) (யான் இன்னதென்று உணறேன் என்றபடி.)

Transliteration:

pugazhu nalloruvanenkO poruvil sIr bhUmi enkO
thigazhumthaN paravaiyenkO - theeyenkO vAyuvenkO
nigazhumAkAsamenkO - nILsudari reNdumenkO
igazhvillanaiththumenkO - kaNNanaikkUvumARE!

2.6.11 கண்ணித் தண்ணந்துழாய் முடி (Become His acclaimed fan!)

பாசுரம்:

கண்ணித்தண்ணந்துழாய்முடிக் கமலத்தடம்பெருங் கண்ணனை, புகழ்
நண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன,
எண்ணில்சோர்விலந்தாதியாயிரத் துள்ளிவையுமோர்பத்திசையொடும்,
பண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே.

Audio Introduction:



English Translation (by Mr. P.S. Desikan):

Spake Kurukoor Catakopan of South also called Maran,
of that Lord , lotus-eyed with tulasi cool, He Kannan
in these ten of thousand verses set as a cascading span.
Whoever recites, shall be deemed as His acclaimed fan!

பதம் பிரித்தது:

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணி தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே

பொழிப்புரை:

குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலையையுடைய திருமுடியினையும் தாமரை போன்ற விசாலமான பெரிய கண்களையுமுடைய இறைவனது நற்குணங்களிலே தாம் ஈடுபட்டு. அழகிய திருக்குருகூரில் அவதரித்த மாறனாகிய ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த எண்ணத்தில் தப்பாத அந்தாதியாக அமைந்த ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களையும் இசையோடும் பண்ணோடும் பாடுவதற்கு வல்லார் எவர்? அவர் கேசவன் தமர் ஆவர்.

விளக்கம்:

1.  கண்ணனை - வேற்றுமை மயக்கம். 
2.  ‘சடகோபன், மாறன்’ என்பன இரண்டும், ஆழ்வாருடைய திருப்பெயர்கள். 
3.  ‘இசையொடும் பண்ணில்’ என்று அருளிச்செய்வதால் இசை வேறு, பண் வேறு என அறியலாம்.
     இவ்விரண்டன் வேறுபாட்டினை வியாக்கியானத்திற் காண்க

ஈடு விளக்கம்:

கண்ணி தண் அம் துழாய் முடிக் கமலம் தடம் பெரும் கண்ணனை - இப்போதாயிற்று மாலை செவ்வி பெற்றதும், முடி நன்கு தரித்ததும், திருக்கண்கள் மலர்ச்சி பெற்றதும்.
(That Lord , lotus-eyed with tulasi cool - He - Kannan)

புகழ் நண்ணி - இறைவன், தம் பக்கல் செய்த காதலாகிய குணத்திலே மூழ்கி. (Sung his praise keeping in mind all that He has done to Azhwar)

தென்குருகூர்ச் சடகோபன் மாறன் - ஒன்று திருப்பெயர்; ஒன்று பகைவர் கூட்டத்துக்கு யமனாக உள்ளவர் என்பதனைக் காட்ட வந்தது. (Satagopan is the name of the Azhwar and 'Maran' signifies that he is the nemesis to all adversaries)

எண்ணில் சோர்வு இல் (countless as a cascading span) அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து - இறைவன் தம் பக்கல் பண்ணின வியாமோகத்தின் மிகுதியை நினைத்து, அவற்றில் ஒன்றும் குறையாமல் அருளிச்செய்த ஆயிரத்தில் இப் பத்து. 

இசையொடும் பண்ணில் பாட வல்லார்- இதில் ஆசையாலே இசையோடும் பண்ணோடும் பாட வல்லவர்கள். பண்ணாவது, கானம். இசையாவது, குருத்துவம் லகுத்துவம் முதலானவைகள் தம்மிலே நெகிழ்ந்து பொருந்துகை. ‘தொனியாலும் திறத்தாலும்’ என்றபடி (தொனி என்றது, பண். திறம் என்றது, இசை). 

அவர் கேசவன் தமரே - அவர்கள் யாரேனுமாகவுமாம், குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் பயன் அற்றவைகள்; ‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ (விண்ணப்பஞ்செய்வார் - அரையர்) என்னுமாறு போன்று, இத்தன்மையாலே அவர்கள் பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள். (shall be deemed as His acclaimed fan)

2.6.10 போகின்றகாலங்கள் (Ever mine henceforth)

பாசுரம்:

போகின்றகாலங்கள்போயகாலங் கள்போகுகாலங்கள், தாய்தந்தையுயி
ராகின்றாய் உன்னைநானடைந்தேன்விடுவேனோ,
பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே. பரமா, தண்வேங்கட
மேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே.

Audio Introduction:


English Translation (by Mr. P.S. Desikan):

O Lord, of three worlds, time-honourd and divine!
In past, present and future, ever as you remain
as father, mother and soul, now that I could attain
thee over cool Venkadam, could I miss you again?

பதம் பிரித்தது:

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர்
ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கடம்
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே

பொழிப்புரை:

எங்கும் பரவுகின்ற பழமையான புகழையுடைய மூன்று உலகங்கட்கும் தலைவனே! குளிர்ந்த வேங்கடத்தில் எழுந்தருளியிருப்பவனே! வாசனை வீசுகின்ற குளிர்ந்த துழாய் மாலையை யுடையவனே! நிகழ்காலம் இறந்த காலம் எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் தாயும் தந்தையும் உயிரும் ஆகின்றவனே! உன்னை நான் அடைந்தேன்; இனி, விடுவேனோ? விடேன்

ஈடு விளக்கம்:

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர் ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ - முக்காலத்திலும், பரிவுடைய தாய் செய்வதும் செய்து, ஹிதத்தைச் செய்கின்ற தமப்பன் செய்வதும் செய்து, ‘அந்தக் காகாசுரன் தகப்பனாலும் விடப்பட்டான்’ என்கிறபடியே. அவர்கள் விடுமளவிலும், தான் தனக்குப் பார்க்கும் ஹிதமும் பார்க்கும்படி எல்லா வகையாலும் அடையத் தக்கவனுமாய், உபகாரத்தைச் செய்கிறவனுமாய் உள்ள உன்னை, உதவியை நினையாநின்ற நான் கிட்டப் பெற்று வைத்து, விடக் காரணம் உண்டோ?  (In past, present and future, ever as you remain as father, mother and soul, now that I could attain like Lord Rama excused Kakasura's grave sin even when all others gave up on him)

பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே- (பாகின்ற = well spread) பரம்பி இருப்பதாய், இயல்பிலே அமைந்த (தொல் புகழ் = inherent good natured, time-honourd) நற்குணங்களையுடையையாய், மூன்று உலகங்கட்கும் நிர்வாஹகன் ஆனவனே! ‘பெருமாள் தர்மத்தையுடையவர்; சரணாகதி புகுந்தவனிடத்தில் அன்புடையவர்; எல்லாராலும் அறியப்பட்டவர்; ஆகையால், பிழைத்திருப்பதற்கு நீ விரும்புவாயேயானால் உனக்கு அவ்விராமனோடு நட்பு உண்டாகவேண்டும்’ என்கிறபடியே, பகைவர்கள் கூட்டத்திலும் பிரசித்தமாம்படி பரந்திருத்தலின் ‘பாகின்ற புகழ்’ என்கிறார்.

பரமா - (Superior, divine) குணங்களுக்கும் காத்தலுக்கும் உன்னை எண்ணினால், பின்னை எண்ணலாவார் இல்லாதபடி சர்வாதிகனாய் இருக்குமவனே! 

தண் திருவேங்கடம் மேகின்றாய் -‘இப்படி எல்லார்க்கும் மேம்பட்ட வனாயிருந்து வைத்து, என்னை அடிமை கொள்ளுகைக்காக, சிரமத்தை நீக்குகிற திருமலையிலே வந்து அண்மையில் இருப்பவனே! உன்னை நான் அடைந்தேன், விடுவேனோ?’ என மேலே கூட்டுக. 

தண்துழாய் விரை நாறு கண்ணியனே - இவருடைய துன்பமெல்லாம் தீரும்படியாக வந்து அங்கீகரித்துத் தன்னை நுகர்வித்து, இவர் தன்னை விடின் செய்வது என் என்ற ஐயமும் தீர்ந்து, தோளில் இட்ட மாலையும் வாசனை உள்ளதாய், பிடித்து மோந்த இலைத் தொடைமாலையும் (a ball made of garland) தானுமாய் நின்ற நிலையைத் தெரிவிக்கிறார்.