பாசுரம்:
அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள்மேல்,
கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் குற்றேவல்,
செய்கோலத் தாயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும்,
அஃகாமற் கற்பவர் ஆழ்துயர் போயுய்யற் பாலரே.
Audio Introduction:
Translation:
Sung towards Kannan's feet to seek those solaces,
this decad of the beautiful thousand verses,
by Satakopan of Kurugur with dense flower terraces,
shall rise from deep despair and succour its true learners.
பதம் பிரித்தது:
அஃதே உய்யப் புகுமாறு என்று கண்ணன் கழல்கள் மேல்,
கொய் பூம்பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்,
செய்கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்,
அஃகாமல் கற்பவர் ஆழ்துயர் போய் உய்யப் பாலரே.
பொழிப்புரை:
உய்வதற்கு உரிய வழி மேலே கூறிய அதுவே என்று கண்ணபிரானுடைய திருவடிகளின்மேலே, பறிக்கப்படுகின்ற பூக்கள் நிறைந்த சோலையாற்சூழப்பட்ட திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அந்தரங்கக் கைங்கரிய ரூபமாகச் செய்யப்பட்ட அழகிய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இறைவனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்துப் பாடிய இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் குறைவில்லாதவாறு கற்பவர்கள், ஆழ்ந்துள்ள துன்பங்கள் நீங்கி நற்கதி பெறுவார்கள்
விளக்கம்:
‘உய்யப் புகுமாறு அஃதே என்று கண்ணன் கழல்கள் மேல் சடகோபன் குற்றேவல் பாடல் இவை பத்தும் கற்றவர் துயர் போய் உய்யற்பாலர்,’ என்க.